Tuesday, 13 June 2017

மருத்துவங்கள் பலவிதம்!!!!

கடந்த சில மாதங்கள் தஞ்சையில் இருந்தபோது பல விதமான நோயாளிகள், நோயால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த உறவுகள், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அவதியுற்றுக்கொண்டிருந்தவர்கள் என்று வெளியில் புறப்பட்டுப்போக நேர்ந்ததெல்லாம் இந்த மாதிரி காரணங்களுக்காகவே என்று ஆகிப்போனது. ஒரு சந்தர்ப்பத்தில் மனது மிகவும் சலித்துப்போய் எங்காவது சுப காரியம் என்று போய் வந்தால் மனதுக்கு ஒரு மாற்றம் இருக்குமே என்று கூட யோசனை வந்தது.

இடையே சில மருத்துவ பிரச்சினைகளுக்கு தீர்வுகளும் நல்லவிதமான யோசனைகளும் சிலருக்கு என்னால் தர முடிந்ததில் இத்தனை அலைச்சல், சலிப்பையும் மீறி மனதிற்கு நிறைவும் கிடைத்தது.  நம்மால் சிலருக்கு வேதனைகள் தீருவது நமக்கு விவரிக்க இயலாத மன நிறைவு அளிக்கும்தானே? அவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளப்போகிறேன். இணையம் மூலம் நிறைய பேருக்கு அவை பலனளிக்கும் என்கிற ஆவலும் அக்கறையும் தான் காரணங்கள்.

தாங்க முடியாத பல்வலிக்கு:



இதை மட்டும் முன்பேயே எழுதியிருக்கிறேன். பல்வலி இருக்குமிடத்தில் இரவு படுக்கும்போது ஒரு துண்டு உப்பு நார்த்தங்காயை வைத்து சற்று அழுத்தி விட்டுக்கொண்டு அப்படியே தூங்கி விடலாம். காலையில் விழித்தெழும்போது பல் வலி சுத்தமாக நீங்கியிருக்கும். அந்த நார்த்தங்காய்த்துண்டை துப்பி விட்டு மிதமான வெந்நீர் விட்டு வலி இருந்த இடத்தைக் கொப்பளித்து சுத்தம் செய்து கொள்ளவும். அதன் பின் மறுபடியும் பல் வலி அந்த இடத்தில் அநேகமாக வராது.

கால் வலி, உளைச்சல், குத்தும் வலி [ தொடையிலிருந்து பாதம் வரை]:

ஒரு நாள் உறவினரின் குழந்தைக்கு நாவல்பழ ஜுஸ் வாங்க ஒரு இயற்கை அங்காடிக்குச் சென்றிருந்தேன்.  யதேச்சையாக ஒரு களிம்பு கண்ணில் பட்டது. சர்க்கரை நோய் உள்ளவர்களின் கால் வலிக்கு என்று அதன் மீது எழுதியிருந்தது. எனக்கு எப்போதுமே குதிகால் எலும்புகளில் வலி இருக்கும். அதற்கு இது பயன்படுகிறதா என்று பார்க்கலாம் என்று நினைத்து ஒரு பாட்டில் வாங்கி வந்தேன். வீட்டுக்கு வந்து பிரித்து அதனுள் இருந்த பேப்பரைப் படித்துப்பார்த்த போது மருந்தை கெண்டைக்காலில் மட்டுமே தடவ வேண்டுமென்பதை கவனித்தேன். உறங்கச்செல்லும்போது கெண்டைக்காலில் சற்று தாராளமாக தடவிக்கொண்டு உறங்க வேண்டும். அது போலவே இரண்டு நாட்கள் தடவினேன். மூன்றாம் நாள் பல மாதங்கள், ஏன் வருடக்கணக்காக குதிகால் எலும்பில் தொடர்ந்து இருந்த வலியைக்காணோம்! எனக்கு நம்பவே முடியவில்லை. இரண்டு மாதமாகியும் அந்த வலி இன்னும் வரவில்லை.  என் சகோதரியின் மருமகள் 10 நாட்களாக காலில் தொடையிலிருந்து கடுமையான வலி என்று பல மருந்துகளை உபயோகித்து, மருத்துவரிடமும் சென்று பலனில்லாமல் இந்த மருந்தையும் உபயோகிக்க ஆரம்பித்தார். இரண்டே நாட்களில் வலி அனைத்தும் போய் இது வரை திரும்ப வரவில்லை என்று சில நாட்களுக்கு முன் அலைபேசியில் சொன்னார். இப்போது இந்த மருந்தின் புகழ் அங்கே அனைவரிடமும் பரவிக்கொண்டிருக்கிறது.

மருந்தின் பெயர்: CONARCS, விலை ரூ 120. படத்தை இத்துடன் இணைத்திருக்கிறேன்.




ஹீமோகுளோபின் அதிகரிக்க:

ஒரு புத்தகத்தில் படித்த குறிப்பு இது. உபயோகப்படுத்த மறந்து போய் பல காலமாக என் ஃபைலில் அப்படியே இருந்தது. சமீபத்தில் தான் மறுபடியும் இந்தக் குறிப்பைப்படிக்க நேர்ந்த போது இதை எப்படி இத்தனை நாட்களாக மறந்து போனோம் என்று அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் ஹீமோகுளோபின் எனக்கும் என் கணவருக்குமே குறைவாகவே பல காலமாக இருந்து வருகிறது. என் மறதியை நொந்து கொண்டேன்.
உலர்ந்த கருப்பு திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்பது தான் பொது விதி. எப்படி சாப்பிட வேண்டுமென்பதற்கு விதிமுறைகள் இருக்கின்றன.  இதற்கு 72 திராட்சைகள் தேவைப்படும். முதல் நாள் 3 திராட்சைகளைக் கழுவி ஒரு தம்ளர் நீரில் முதல் நாளிரவே ஊற வைக்க வேண்டும். மறு நாள் காலை வெறும் வயிற்றில் ஒரு திராட்சையை மென்று தின்று அது ஊறிய தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கை குடிக்க வேண்டும். மதியம் 12 மணிக்கு அடுத்த திராட்சை, அடுத்த பங்கு ஊறிய நீர், மாலை 6 மணிக்கு கடைசி திராட்சையை மென்று பாக்கியுள்ள நீரை குடிக்க வேண்டும்.  உடனேயே அடுத்த நாளுக்காக ஆறு திராட்சையை ஊறப்போட வேண்டும். மறு நாள் மேற்சொன்ன மாதிரியே சாப்பிட வேண்டும். அதற்கடுத்த நாள் ஒன்பது திராட்சைகள். அதற்கடுத்த நாள் 12 திராட்சைகள்.  இந்த 12 திராட்சைகள் மட்டும் மூன்று நாட்கள் தொடர்ந்து ஊறப்போட வேண்டும். அதற்கடுத்த நாள் ஒன்பது, அதற்கடுத்த நாள் ஆறு, அதற்கடுத்த நாள் 3 என்று குறைத்து மொத்தம் 9 நாட்கள் சாப்பிட வேண்டும்.  3, 6, 9, 12, 12, 12, 9, 6, 3 என்று இந்த வரிசைகளில் சாப்பிட்டு  முடிக்க வேண்டும். அதற்கப்புறம் 2 நாட்கள் கழித்து இரத்தப்பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.  நான் அவ்வளவாக முதலில் இதை நம்பவில்லை. வெறும் உலர் திராட்சையில் அதுவும் 9 நாட்களில் எப்படி ஹீமோகுளோபின் கூடும் என்று தான் நினைத்தேன். இரத்தப்பரிசோதனை முடிவு வந்ததும் அசந்து போய் விட்டேன். 10.5ல் இருந்த என் ஹீமோகுளோபின் 12க்கும் 12ல் இருந்த என் கணவரின் ஹீமோகுளோபின் 15க்கும் ஏறியிருந்தது!!
குறைந்த செலவில் அருமையான பலன் கொடுக்கும் இயற்கை வைத்தியம் இது! செய்து பாருங்கள்! அவ்வளவாக திருப்திகரமாக ஹீமோகுளோபின் ஏறவில்லையென்றால் இன்னொரு 9 நாட்கள் கருப்பு திராட்சைகளை மேற்சொன்ன முறையில் உண்ண வேண்டும்!

சிறுநீரகப்பிரச்சினைகள்

நீண்ட நாள் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கும் வேறு பல அசாதாரண காரணங்களாலும் தற்போதெல்லாம் சிறுநீரகப்பிரச்சினைகள் அதிகம் ஏற்படுகின்றன. அவற்றை நமக்குச் சுட்டிக்காண்பதற்கும் நம் மீது அக்கறையுள்ள மருத்துவர் அமைய வேண்டும். ‘ எல்லா மருத்துவர்களும் நோயாளியிடம் இதைப்பற்றி சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள்’ என்று ஒரு சிறுநீரக ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரே என்னிடம் சொன்னார்!! பொதுவாய் சிறுநீர் பரிசோதனையில் 60 வயது மேற்பட்டவர்களுக்கு, அதுவும் சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு ALBUMIN TRACE என்று காணப்படும். இப்படி இருந்தால் நமக்கு சிறுநீரக நோய் ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம். அதிகப்படியான புரதம் இரத்தத்தால் உட்கிரகிக்க முடியாமல் சிறுநீரக நெஃப்ரான்கள் பலமிழந்து, அதன் வடிகட்டிகளின் துளைகள் பெரிதாவதால் சிறு நீர் வழியே வெளியேறுகிறது. சர்க்கரை, டயட், உயர் இரத்த அழுத்தம், பிற இரத்தப்பரிசோதனைகளான யூரியா, கிரியாட்டினைன் முதலியவை நாம் கட்டுக்குள் வைத்திருக்கிற வரையில் பிரச்சினை இல்லை.  நாளடைவில் கிரியாட்டினைன் அல்லது யூரியாவின் அளவு அதிகமாகலாம். அப்போது தான் மருத்துவர்கள் மருந்துகள் கொடுப்பார்கள்.  இயற்கையான முறையில் இரத்தத்தில் அதிகமாகும் கிரியாட்டினைனை குறைக்கும் வழி இது! 



24 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

நான்குமே மிகவும் பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்.

தாங்க முடியாத பல்வலிக்கு .... தாங்கள் ஏற்கனவே எழுதியுள்ளதைப் படித்தது நினைவுக்கு வந்தது. தாங்க முடியாத பல்வலி வரும் தினத்தில் மீண்டும் இது எனக்கு மறக்காமல் இருக்கணும். :)

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

கால் வலி, உளைச்சல், குத்தும் வலி [ தொடையிலிருந்து பாதம் வரை]:

இந்தக் களிம்பின் பெயரைக் குறித்துக்கொண்டு விட்டேன்.

இது அவசியம் எனக்கும் அடிக்கடி தேவைப்படக்கூடியதே.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...


ஹீமோகுளோபின் அதிகரிக்க:

இந்த செய்தி வாட்ஸ்-அப்பில் ஒருநாள் எனக்கு வந்தது. அது பிறகு அழிக்கப்பட்டு விட்டது.
தாங்கள் தங்கள் பதிவினில் இப்போது கொடுத்துள்ளதால், எப்போது வேண்டுமானாலும் பார்த்து பயனடைந்து கொள்ளலாம். மிக்க நன்றி, மேடம்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

சிறுநீரகப்பிரச்சினைகள் :

காணொளி கண்டேன். செய்முறை விளக்கங்கள் புரிந்துகொள்ளும்படியாகவே உள்ளது. அவரின் மின்னஞ்சலும் கொடுத்திருப்பது மிகவும் நல்லது.

பிரச்சனைகள் உள்ள எவ்வளவோ பேர்களுக்கு இது நிச்சயம் பயன்படக்கூடும்.

மொத்தத்தில் மிகவும் பயனுள்ள தங்களின் இந்தப்பதிவுக்கு நன்றிகள், மேடம்.

கோமதி அரசு said...

அருமையான தேவையான செய்திகள் நன்றி.

பிலஹரி:) ) அதிரா said...

மனோ அக்கா நலம்தானே? மிக நல்ல மருத்துவத் தகவல்கள் பகிர்ந்திருக்கிறீங்கள். அந்த குதிக்காலுல் பூசும் மருந்து.. நம்பவே முடியவில்லை... துரும்பாக நினைக்கும் நமக்குத் தெரியாத சின்ன விசயங்களில் பெரிய மருத்துவமே அடங்கி விடுகிறது பல நேரங்களில்.

எனக்கு சின்ன வயதில் காலில் ஒரு இடத்தில் மட்டும் அலர்ஜி இருந்தது,பல வருடங்களாக,.. கடித்துக்கொண்டே இருக்கும்.. செய்யாத வைத்தியம் இல்லை.. சொக்ஸ் போட முடியாமல் அவதிப்பட்டேன்.

என்ன்னோடு படிச்ச நண்பியின் அம்மா ஒரு நேர்ஸ், அவ ஏதோ பல ஒயிண்ட்மென்களைக் கலந்து ஒரு பேஸ்ட் ஆக்கித் தந்து பூசச் சொன்னா... ஒரு மாதத்தில் அடையாளமே இல்லாமல் மறைந்தது மறைந்ததுதான்:).

தி.தமிழ் இளங்கோ said...

பயன்தரும் மருத்துவக் குறிப்புகளை தந்தமைக்கு நன்றி. கால்வலிக்கு, நீங்கள் குறிப்பிட்ட களிம்பு சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கும் பயன்படுமா? என்பதை கேட்டு தெரிவிக்கவும்.

துரை செல்வராஜூ said...

மிகுந்த பயனுள்ள குறிப்புகளைக் கொடுத்திருக்கின்றீர்கள்..

CONARCS - இந்த மருந்து தஞ்சையில் கிடைக்கின்றதா?..
கடையின் இருப்பிடம் தெரிவிக்க வேண்டுகின்றேன்..

வாழ்க நலம்!..

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு,

இந்த பல்வலி வைத்தியம் உடனேயே வலியை குணமாக்குகிறது. எனக்கு அலைபேசி மூலமாக எத்தனை ' நன்றி' அழைப்புகள் வந்திருக்கின்றன தெரியுமா? உடனடியான இனிய பின்னூட்டங்களுக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...
This comment has been removed by the author.
மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் துரை.செல்வராஜ் அவர்களுக்கு!

அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி!

தஞ்சை, மருத்துவக்கல்லூரி சாலையில் முனிசிபல் காலனி ஸ்டாப் எதிரே சரவணா சைவ உணவகம் உள்ளது. அதனருகே ஒரு ஜூஸ் கடை. அதன் பக்கத்தில் ஒரு சந்து போகும். அந்த சந்தில் இயற்கைப்பொருள்கள், மருந்துகள் கிடைக்கும் கடை உள்ளது. அதைத்தவிர அதே சாலையில் சற்று முன்னதாக ஸ்டேட் மெடிகல்ஸ் உள்ளது. அங்கும் இந்த மருந்து கிடைக்கிறது.

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் தமிழ் இளங்கோ அவர்களுக்கு!

வருகைக்கு அன்பு நன்றி!

நான் என் பதிவிலேயே குறிப்பிட்டிருந்த மாதிரி, என் சகோதரி மருமகள் சர்க்கரை நோய் இல்லாதவர், அவருக்கு இரண்டு நாட்களிலேயே கால் வலியும் உளைச்சலும் சரியாகி விட்டது.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அம்மா

மருத்துவ குணம் பற்றி அற்புதமாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் யாவரும் அறிய விடயத்தை அழகாக தொகுத்து வழங்கியமைக்கு வாழ்த்துக்கள் அம்மா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Kasthuri Rengan said...

நல்ல தகவல்

துரை செல்வராஜூ said...

தஞ்சையில் மருந்து கிடைக்கும் விவரத்தை விளக்கமாக அளித்தமைக்கு மனமார்ந்த நன்றி..

வாழ்க நலம்!..

Yaathoramani.blogspot.com said...

பயனுள்ள எளிய அருமையான
அவசியமான மருத்துவக் குறிப்புகள்
வாழ்த்துக்களுடன்...

Angel said...

அனைத்தும் அருமையான மருத்துவக்குறிப்புகள் அக்கா ..திராட்சை ஹீமோகுளோபின் வியக்க வைக்கிறது .பகிர்வுக்கு நன்றி

ஸ்ரீராம். said...

பயனுள்ள குறிப்புகள்.

middleclassmadhavi said...

Very useful tips madam, thanks!

சீராளன்.வீ said...

வணக்கம் !


இயற்கை மருந்தை இணைத்துண்பார் வாழ்வில்
வியலின்பம் சேரும் விரைந்து !

நல்ல குறிப்புத் தந்தீர் நலம் பெற வாழ்த்துகிறேன்
வாழ்க வளத்துடன் !

கரந்தை ஜெயக்குமார் said...

மிகவும் பயனுள்ள பதிவு சகோதரியாரே
நன்றி

ராமலக்ஷ்மி said...

மிகவும் பயனுள்ள மருத்துவக் குறிப்புகள். பகிர்வுக்கு நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம். /// படிக்கவேண்டியது மட்டுமல்ல, பாதுகாக்கவேண்டியதும், கடைபிடிக்கவேண்டியதும்கூட. நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

மிகவும் பயனுள்ள குறிப்புகள். அந்த டயபட்டிக் களிம்பும், இஞ்சி ட்ரீட்மென்டும்வியக்க வைக்கிறது!!!

துளசிதரன், கீதா