ஆச்சரிய முத்து:
இங்கே அமீரகத்தில் இந்த பாலைவன நாட்டில் நல்ல மழை! இதிலென்ன ஆச்சரியம் என்கிறீர்களா? பசும் சோலையாக இருந்த நம் பூமி வரண்டு சூட்டுக்காற்றில் தவிக்கிறது. பாலைவனமாய் சுட்டுப்பொசுக்கிய இந்த பூமி இப்போது மழையால் குளிர்கிறது, அதுவும் ஏப்ரல் மாதத்தில்!
அதிக மழையைப் பெறுவதற்காக இங்கே ' கிளவுட் சீடிங் ' முறையில் விமானங்கள் மூலம் வானில் ரசாயனப்பவுட்ர்கள் தூவப்படுகின்றன. செயற்கை முறையில் ரசாயனப் பவுடர் தூவப்பட்டு ஒரு சில வாரங்களில் அதிக மழைப்பொழிவைப் பெற முடியும். கடந்த ஆண்டு ஒரு வாரத்தில் நான்கு நாட்களுக்கு கிளவுட் சீட்ங் செய்யப்பட்டது. இதன் பலனாக கூடுதலாக 20 சதவிகிதம் சென்ற ஆண்டு மழைப்பொழிவு கிடைத்தது. இந்த ஆண்டு ஆண்டின் தொடக்கத்திலிருந்து இது வரை 88 தடவை கிளவுட் சீடிங் செய்யப்பட்டுள்ளது.
இசையின்ப முத்து:
தியாகராஜ சுவாமிகள் பற்றி கர்நாடக சங்கீதம் அறிந்த அனைவரும் அறிவார்கள். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட இவர் பிறந்தது திருவாரூர் என்றாலும் வளர்ந்ததும் இசையறிவு கொண்டதும் சமஸ்கிருதம் கற்றதும் திருவையாற்றில்! பல அபூர்வமான ராகங்களில் கீர்த்தனைகள் இயற்றியிருப்பதும் ஒரே ராகத்தில் பல கீர்த்தனை இயற்றியிருப்பதும் இவரின் அரிய திறமை. தன் தாய்மொழியான தெலுங்கிலும் வடமொழியிலும் மட்டுமே கீர்த்தனைகள் இயற்றிருக்கிறார்.
இந்த திறமையை கேள்விப்பட்டு தஞ்சை மன்னர் சரபோஜி தன் அரண்மனைக்கு வந்து தன்னைப் புகழ்ந்து பாட வேண்டுமென்று ஆசை கொண்டார். ஆனால் தியாகராஜர் அதை மறுத்து ' ' நிதிசால சுகமா ' என்ற கல்யாணி ராக கீர்த்தனையை உருவாக்கி இசைத்தார். ' செல்வம் சுகம் தருமா அல்லது ராமன் சன்னதியில் சேவை செய்வது சுகமா?' என்ற அர்த்தத்தில் தொடங்கும் இந்த கீர்த்தனை!
இவரின் 'எந்தரோ மஹானுபாவலு' அழியாப்புகழ் பெற்றது! அதன் அர்த்தமோ அதையும்விட புகழ் பெற்றது! ' அன்பால் உயர்ந்த பக்தர்களுக்கு முன்னால் இந்த அடியேன் எங்கே? ' என்பது தான் இந்த வரியின் அர்த்தம்! இந்த கீர்த்தனை பல பாடகர்கள் குரலில், இனிமை வழிந்தோட கேட்டு ரசித்திருக்கிறேன். வயலினின் உருகலில் நானும் உருகியிருக்கிறேன். புல்லாங்குழலின் தேடலில் மெய்மறந்திருக்கிறேன். ஆனால் சமீபத்தில் நாதஸ்வர இசையில் ஸ்ரீராக ராகம் குழைந்து மயங்கியதை ரசித்தபோது மனமும் அந்தக்குழைவில் மயங்கிப்போனது. நீங்களும் ரசிக்க இணைத்திருக்கிறேன் இங்கே! கேட்டு ரசியுங்கள்!
மருத்துவ முத்து:
பொதுவாய் பேன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் சிலர் அவற்றை ஒழிக்க சீத்தாபழ விதைகளை அரைத்துத் தலையில் தடவுவதுண்டு.
நிச்சயம் பேன் தொல்லை ஒழிந்து விடும். ஆனால் அவ்வாறு சீத்தா பழ விதைகளை அரைத்து தலையில் தடவுவது ஆபத்து என்று அறிவித்திருக்கிறது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகம். கண் வலி, கருவிழி பாதிப்பு, கண்ணீர் வடிதல், உறுத்தல், பார்வை மங்குதல் போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படுவதாகவும் சொல்லியுள்ளது நிர்வாகம்.
ரசித்த முத்து:
அறுபது சொல்வது அனுபவ நிஜம்.
அதை இருபது கேட்டால் ஜெயிப்பது நிஜம்.
மனிதன் சொல்ல இறைவன் கேட்பது திருவாசகம்.
இறைவன் சொல்ல மனிதன் கேட்பது கீதை.
மனிதன் சொல்ல மனிதன் கேட்பது குறள்.
ஞானி சொல்ல ஞானிகள் கேட்பது திருமந்திரம்.
மகன் சொல்ல மகேசன் கேட்பது பிரணவம்.
நல் மனைவி சொல்ல கணவன் கேட்பது வாழ்க்கை.
அமைதி முத்து:
சென்னையில், தி.நகரில் உள்ள ஒரு நான்கு நட்சத்திர விடுதியில் வரவேற்பு பகுதியில் இருந்த சிலை இது. பார்க்கும்போதே மனதில் அமைதி பிறந்தது.