Sunday 18 June 2017

தந்தையின் அருமையும் பெருமையும்!!!

அன்புச் சகோதரர்கள் அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்! 

சகோதரர் ரமணி அவர்களின் யோசனைக்கு தலை வணங்கி ஏழு வருடங்களுக்கு முன் நான் தந்தையின் பெருமையைப்பற்றி எழுதியதை மீள் பதிவாக ' தந்தையர் தினத்துக்காக ' இங்கே மறுபடியும் இணைப்பதில் பெருமை அடைகிறேன்!!

                   *********************************************************


இலக்கியங்களிலும் கவிதைகளிலும் புதினங்களிலும் திரைப்படங்களிலும் பழங்காலத்திலிருந்து இன்றைய காலம் வரை தாய்மையைப்பற்றி-அதன் சிறப்பையும் உயர்வையும் பற்றி எழுதாத கவிதைகளில்லை! பாடாத பாடல்கள் இல்லை!! சொல்லாத வார்த்தைகள் இல்லை!!! ஆனால் சொல்லாத-வெளிப்படாத உணர்வுகளுக்கு என்றுமே ஒரு புனிதம் உண்டு. கவிஞர் கண்ணதாசன் சொன்னது போல ‘சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை’ என்ற கவித்துவமான வரிகளுக்கு இணையானதுதான் ஒரு தந்தையின் பெருமை! 

ஆலமரம் எத்தனையோ பேர்களுக்கு குளிர்ச்சி தருகிறது! நிழல் தருகிறது ஒரு தாய் தன் குழந்தைகளுக்குத் தரும் இதம் போல! ஆனால் அந்த ஆலமரத்தைத் தாங்கிப் பிடிக்கும் அதன் வலிமையான வேர்களைப்பற்றி யாரும் பேசுவதில்லை!
சில வருடங்களுக்கு முன் தஞ்சையில் என் வீட்டருகேயுள்ள-எனக்கு பழக்கமுள்ள ஒரு பெண் மருத்துவரிடம் செல்ல வேண்டியிருந்தது. அவர்களுக்காக காத்திருந்தபோது அங்கே புதிதாக ஒட்டப்பட்டிருந்த இரு சிறிய சுவரொட்டிகளை கவனித்தேன். முதலாவது தாய்மையின் உயர்வைப்பற்றிய கவிதை. மிக அருமையாக இருந்தது. அடுத்ததுதான் என்னை முதலில் வியப்பிலாழ்த்தி, பின் நெகிழ்ந்து கனிந்து போக வைத்தது.

அந்த கவிதை.. .. .. ..


அம்மா இல்லத்தின் தன்மானம் என்றால்
  அப்பா இல்லத்தின் அடையாளம்!
  அம்மா ஊட்டுவது அன்பு.
  அப்பா காட்டுவது மனத்தெம்பு!

  நாளும் பொழுதும் உணவளிப்பவள் அம்மா-ஆனால்
  அந்த உணவை சம்பாதித்துத் தருவது அப்பா என்பதை
  மறந்தே போகிறோம்!

  கல்லில் இடறும்போது வாயில் வரும் வார்த்தை
‘அம்மாடியோ!’
  காரில் மோதி கீழே விழும்போது வாயில் வரும் வார்த்தை
 ‘ஐயோ அப்பா!’

  ஏனெனில் சின்னச்சின்னத் துன்பங்களில் 
  தேடுவது அம்மாவின் அன்பு! 

  ஆனால் பெரிய துன்பங்களில் துணை நிற்பது
  அப்பாவின் ஆதரவு!

   அப்பா ஒரு நெடிய ஆலமரம்!
   அவர் தரும் குளிர் நிழலே குடும்பம்!’


மருத்துவரிடம் இதைப்பற்றிப் பேசி பாராட்டியபோது அவர்களின் விழியோரத்தில் கண்ணீர் முத்துக்கள்!!

‘என் அப்பா சமீபத்தில்தான் இறந்து போனார்கள். ஆனால் அவரின் அன்பு, அவர் கொடுத்த மனத்தெம்பு, தைரியம், தன்னம்பிக்கை எல்லாவற்றையும் ஒரு நொடியில் இழந்து விட்டேன்!’ என்றார்கள்.

உண்மைதான்! அன்பிற்குரியவர்கள் திடீரென்று மறையும்போது அந்த அன்புடன் வாழ்வில் உள்ள நம்பிக்கையும் அதைச் சார்ந்த அனைத்து விஷயங்களும் ஆட்டம் கண்டு விடுகின்றது! அந்தக்கவிதையில் உள்ளது போல பெரிய துன்பங்களில் தெம்புடன் பிடித்துக்கொண்ட தோள்கள் மறைந்து விட்டன! 

ஒரு தந்தையின் பெருமையை உணர்த்த இதைவிட எளிமையான, அழகான கவிதையை நான் படித்ததில்லை!

31 comments:

Yaathoramani.blogspot.com said...

சிறப்புப்பதிவு மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

துரை செல்வராஜூ said...

தந்தையின் நினைவு நெஞ்சினுள் மூண்டெழும் போது
தாங்கிக் கொள்ள முடிவதில்லை...

ஏதோ ஒரு சுமை அழுத்துகின்றது..

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அம்மா

கவிதையோடு சொல்லிய கருத்து சிறப்பு
இனிய தந்தையர்தின நல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீராம். said...

என் தந்தை மறைந்தபோது நானும் என் தன்னம்பிக்கையை இழந்தது போல உணர்ந்தேன். நெகிழ்வான பதிவு.

KILLERGEE Devakottai said...

கவிதை மனதை நெகிழச்செய்து விட்டது.

கரந்தை ஜெயக்குமார் said...

தந்தையின் பெருமையினை உணர்த்தும் அற்புத வார்த்தைகள்
நன்றி சகோதரியாரே

வெங்கட் நாகராஜ் said...

அருமையான பகிர்வு. மீள் பதிவு செய்ததும் நல்லதாயிற்று.

Kasthuri Rengan said...

wondeful ji

Kasthuri Rengan said...

nice

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பொருத்தமான நாளில் அருமையான கவிதை, மீள் பதிவாயினும்.

Angel said...

//ஆனால் பெரிய துன்பங்களில் துணை நிற்பது
அப்பாவின் ஆதரவு!//

அருமையான வரிகள் அக்கா ..
அப்பா இருக்கேன் என்ற ஒரு வார்த்தை பள்ளி கல்லூரி திருமணம் வரை தொடர்ந்தது
அப்பா எப்பவும் சொல்வார் எப்பவும் நேர்மையா உண்மையை சொல்லணும் எதற்கும் யாருக்கும் அடிமையாக இருக்கக்கூடாது அதை அப்படியே பின்பற்றி வருகிறேன் ..இன்னமும் அப்பாவின் சமையல் ருசியும் வாசமும் என்னை சுற்றி வருவதுபோன்ற பிரமை அவர் மறைந்து 8 ஆண்டுகளானாலும் அவரின் அறிவுரைகளை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளேன்

முற்றும் அறிந்த அதிரா said...

மிக அழகிய கவிதை... அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

அப்பா ஒரு நெடிய ஆலமரம்!
அவர் தரும் குளிர் நிழலே குடும்பம்!’//
அருமை.

சாரதா சமையல் said...

தந்தையர் தினத்துக்கு அருமையான பதிவு.

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு.

Anuprem said...

சிறப்பான கவிதை....

ஒவ்வொரு வரியும் அருமை....ரசித்தேன்..

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

நல்வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி ரூபன்!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் நெகிழ்வான கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பார்ந்த நன்றி சகோதரர் ஜெயக்குமர்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி மது!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

அருமையாக எழுதி அப்பாவை நினைவு கூர்ந்திருக்கிறீர்கள் ஏஞ்சலின்! பாராட்டிற்கும் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி அதிரா!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கோமதி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சாரதா!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

மனதாரப்பாராட்டியதற்கு அன்பு நன்றி அனுராதா பிரேம்குமார்!!