Sunday 18 February 2018

வாட்ஸ் அப் வினோதங்கள்-2 !!!

மறுபடியும் வாட்ஸ் அப் காணொளிகள்! இப்போதெல்லாம் விதவிதமான, அசத்தலான காணொளிகள், ஆச்சரியகரமான காணொளிகள், நம்ப முடியாத காணொளிகள், நெகிழ வைக்கும் காணொளிகள், அடக்க முடியாத சிரிப்பை வரவழைக்கும் காணொளிகள் என்று தொடர்ந்து வந்து குவிகின்றன! அவற்றில் சில உங்கள் பார்வைக்கு!


1. வெகு விரைவில் உலகிலேயே முதன் முதலாக‌ துபாய்க்கு வரவிருக்கும் ஜெர்மனி தயாரிப்பான வானில் பறக்கும் டாக்ஸிகள்! இதன் பெயர்  Volocopterஊபர் போல வாட்ஸ் அப் மூலம் பதிவு செய்து அருகேயிருக்கும் voloport  நிறுத்தத்திற்குச் சென்று காத்திருக்க வேண்டும். முற்றிலும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய இது மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கிறது.2. இந்தியாவின் மிக அதிசயமான, யாருமே அறிந்திராத கோவில் இது! நம்பவே இயலாது உண்மைகளில் இதுவும் ஒன்று!


3. சிறைகளில் உள்ள கைதிகளுக்கு எப்படி பணம் கிடைக்கிறது? இப்படித்தான்!


4. மனதில் அறம் உள்ள‌வனே மனிதன்! இதை அசத்தலாக இந்தப் பெண்மணி விளக்குகிறார்!


5. உருளைக்கிழங்கு சிப்ஸ் எப்படி சுத்தமாக தானியங்கி இயந்திரம் மூலம் கிடைக்கிறது? சுவாரசியமான இந்த வீடியோவைப்பாருங்கள்!


6. தாய்மையுணர்ச்சியில் மனிதர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல மிருகங்கள்! சில சமயங்களில் ஆறறிவு படைத்த மனிதனையே மிருகங்கள் விஞ்சுகின்றன!


Tuesday 6 February 2018

முத்துக்குவியல்-50!!!!

அசத்தும், போற்றவும் வேண்டிய‌ முத்து:

1951ம் வருடம் 14 வயது ஜேம்ஸ் ஹாரிசன் (James Harrison) என்ற ஆஸ்திரேலிய‌ சிறுவன் ஒருவனுக்கு அவனது இடது நுரையீரலில் மூன்றில் இரண்டு பாகம் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனது உயிரைக் காப்பாற்ற 13 லிட்டர் [ 2 காலன்கள் ]இரத்தம் தேவைப்பட்டது. உயிரின் பெறுமதியை உணர்ந்த அச்சிறுவன் , தனக்குள்ளே "தனக்கு 18 வயது தாண்டும் போது ஒரு முறையாவது இரத்ததானம் செய்ய வேண்டும்" உறுதி பூண்டு கொண்டான்.


அவனது விருப்பத்திற்கு ஏற்ப இரத்த தானமும் செய்தான். அப்போது தான் ரீசஸ் (Rhesus Disease) நோயை குணப்படுத்துக் கூடிய மிக அரிதான Antigen அவனது இரத்தத்திலிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தார்கள்.

1960களில் பெண்களுக்கு ஏராளமான கருச்சிதைவுகள், மூளை சிதைவு உள்ள‌ குழந்தைகள் பிறத்தல், அனிமியா மற்றும் மஞ்சள் காமாலை தாக்குதல்கள் ஏற்பட்ட குழந்தைகள் என்று நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணமிருந்தன. காரணம் கண்டுபிடிக்கப்படாமல் விஞ்ஞானிகள் குழம்பினார்கள். நெடுநாட்கள் ஆராய்ச்சிக்குப்பிறகே தாய்மையுற்ற‌ நிலையில் அந்தப்பெண்ணின் இரத்தம் அவள் வயிற்றிலிருக்கும் குழந்தையின் செல்களைத்தாக்குகிறது, அழிக்கிறது என்று கண்டு பிடித்தார்கள். இது தான் ரீசஸ் நோய்.  நெகடிவ் இரத்த குரூப் உள்ள தாயின் வயிற்றில் பாஸிடிவ் இரத்த குரூப் உள்ள கரு உருவாகி இருக்கும்போது  இந்த நோய் உண்டாகி குழந்தைக்கும் தாய்க்கும் சிதைவுகள் பல‌ விதங்களில் உன்டாகின்றன.ஜேம்ஸ் ஹாரிசனின் இரத்தத்தில் RhD-negative blood and anti-D antibodies கலந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்தார்கள். மிகவும் அரிதான சிலருக்கு மட்டுமே இந்த வகை இரத்தம் இருக்குமாம். அதிலும் இவருக்கு இருப்பதோ மிகவும் உயர்ந்த வகை இரத்தம். இரத்தத்தைக்கொடுக்கக் கொடுக்க, அவரின் உடலில் ஊறும் இரத்தம் முன்னையும்விட பன்மடங்கு சக்தியுடன் பெருகுமாம். 

அன்றிலிருந்து இன்றுவரை ஜேம்ஸ் ஹாரிசன் 1,106க்கும் அதிகமான தடவைகள் இரத்த தானம் செய்து சாதனை படைத்துள்ளார். 18 வயதிலிருந்து இன்றைக்கு 78 வயது வரை இவரின் இரத்தத்திலுள்ள பிளாஸ்மா 2 மில்லியன் குழந்தைகளைக்காப்பாற்றியிருக்கிறது!
இவரல்லவா மனிதர் என்ற சொல்லுக்கு அர்த்தத்தைக் கொடுப்பவர்!
இவரை வாழ்த்துங்கள், இல்லை, கைகூப்பி வணங்க வேண்டியவர் இந்த மாமனிதர்!!

காணொளியில் இசை முத்து:

தர்பாரி கானடா ராகம் மயங்க வைக்கும் ராகம். ஊனை உருக்கி குழைய வைக்கும் ராகம். ராகங்களில் அரசன் என்ற பெயர் பெற்றது. தென்னிந்தியாவில் உருவெடுத்து அக்பரின் தர்பாரில் தான்ஸேன் என்ற கவியால் ஹிந்துஸ்தானி ராகமாக உருவெடுத்ததால் இது தர்பாரி கானடா என்று அழைக்கப்படுவதாக வரலாறு. ' சிந்து பைரவி' யில் ' பூமாலை வாங்கி வந்தேன்' பாடலில் ஜேசுதாஸ் அப்படியே குழைந்திருப்பார். '

மலரே மெள்னமா பாடலில் ஜானகியும் பாலசுப்ரமணியமும் அப்படியே மெய்மறந்து பாடியிருப்பார்கள். அதே பாடல் இங்கே இரு இளைஞர்கள் குரலில்,  ராஜேஷ் வைத்யாவின் வீனையில் எப்படி மெய்மறக்க வைக்கிறது என்பதை பார்த்து, கேட்டு ரசியுங்கள்!தகவல் முத்துக்கள்:

குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை:

பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது.

மேலும் விபரங்கள் பெற: 9916737471

இரத்தப் புற்று நோய்:

"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.

மேலும் விபரங்களுக்கு :
புற்றுநோய் முகவரி:
East Canal Bank Road,
Gandhi Nagar,Adyar
Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241

ஆச்சரிய முத்து:

ஒவ்வொரு வருடமும்  மார்ச் & அக்டோபர் மாதங்களில்  திருவனந்தபுரத்தில் பத்மநாப சுவாமி ஆராட்டு விழா நடைபெறுகின்றது. இதில் மகாராஜாவின் குடும்பத்தினர்களும் அரண்மனையில் இருந்து ராஜ மரியாதையுடன் கிளம்பி சுவாமியுடன் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்தே விமான நிலய ரன்வேயை கடந்து கடலுக்கு செல்வார்கள். ஊர்வலம் செல்லும் பாதையில் இப்போது
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஓடு பாதைகள் ஊர்வலம் செல்லும் வழியில் உள்ளது. ஆனாலும் பத்மநாப சுவாமியின் ஆராட்டு ஊர்வலம் இப்போதும் அதே பாதையில் நடக்கிறது. விமான நிலையம் அமைந்தாலும் ஊர்வலப்பாதை மாற்றப்படவில்லை. மாறாக ஊர்வலம் நடைபெறும்போது விமான நிலையத்திற்கு விமானங்கள் வருவது நிறுத்தப்படும். ஊர்வலம் கோவிலுக்கு சென்றடைந்த பின்னரே விமான நிலையம் திறக்கப்படும். மதியம் 3 மணி முதல் இரவு 9 மணிவரை 6 மணி நேரத்திற்க்கு மூடி விடுவார்கள். உலகிலேயே திருவனந்தபுரத்தில் மட்டும்தான் ஒரு விழாவிற்காக  ஏர்போர்ட்டையே மூடுகிறார்கள் .