துபாயின் முன்னணி பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார இடங்களில் ஒன்றான குளோபல் வில்லேஜ் துபாயில் சுற்றுலா பயணிகளைக் கவரும் விதமாக செயல்பட்டு வருகிறது. குளோபல் வில்லேஜ் உலகெங்கும் உள்ள ஷாப்பிங், பாரம்பரிய உணவு, பொழுதுபோக்கு அனுபவங்களைத்தரும் பல நாடுகள் ஒருங்கிணைந்த திறந்தவெளி அரங்கமாகும். கடந்த அக்டோபர் 5ம் தேதி திறக்கப்பட்ட இந்த குளோபல் வில்லேஜ் ஏப்ரல் மாதம் 10ம் தேதி வரை வரை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும்.
முதன் முதலாக் 1997 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு துபாய் கிரீக் பகுதியில் அரங்கேறியது. 2005 ஆம் ஆண்டு முதல் ஷேக் ஜாயத் சாலையில் உள்ள தற்போதுள்ள நிரந்தர இடத்தில் குளோபல் வில்லேஜ் செயல்பட்டு வருகிறது. தினமும் மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை செயல்பட்டு வருகிறது. 90 நாடுகளைச் சேர்ந்த பண்பாட்டு அடையாளங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இடம், உலகின் மிகப்பெரிய சுற்றுலா, ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு பூங்காவாகக் கருதப்படுகிறது. இந்தியா, சவுதி அரேபியா, ஏமன், பாகிஸ்தான், சிரியா, லெபனான், எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முக்கியமானதாகும். ஒவ்வொரு ஆண்டும் இங்கு 50 லட்சம் மக்கள் வந்து செல்கின்றனர். இந்த குளோபல் கிராமம் 17, 200,000 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. சீனியர் சிட்டிசன்களுக்கு நுழைவுக்கட்டணமில்லை.
துபாயில் ஒவ்வொரு வருடமும் நான் மிக விரும்பிப்பார்ப்பது இந்த குளோபல் வில்லேஜ் மட்டுமே. ஆனாலும் கோவிட் காரணமாக 2019, 2020ம் வருடங்களில் செல்லவில்லை. குளோபல் வில்லேஜும் இயங்காமலிருந்தது. 2021 இறுதியில் மறுபடியும் சென்று வந்தோம். வழக்கம்போல் பாதி இடங்கள் மட்டுமே பார்க்க முடிந்தது. உங்களுக்காக இதோ சில அழகான புகைப்படங்கள்!
|
நுழைவாயில் |
|
உள்ளே நுழைந்ததும் பல நாட்டு புகழ்பெற்ற சின்னங்கள் வரவேற்கும்!
|
|
அழகிய செவ்விந்திய மனிதன்
|
|
ஈபில் டவர்
|
|
துருக்கி நாட்டு அரங்கம் |
|
ஏமன் நாடும் பஹ்ரைன் நாடும் அடுத்தடுத்து!
மீதமுள்ள புகைப்படங்கள் அடுத்த பதிவில்....!! |
16 comments:
வணக்கம் சகோ பார்த்து ரசித்த அழகிய காட்சிகளே...
கடந்தவாரம் முழுவதும் மழை பெய்ததாக கேள்விப்பட்டேன் இதனால் அரங்கங்களுக்கு பாதிப்பு உண்டாயிற்றா ?
குளோபல் வில்லேஜ் அமைந்துள்ள இடத்தின் விஸ்தீரணம் மலைக்க வைக்கிறது. புகைப்படங்கள் அழகு.
அனைத்தும் அருமை...
பழைய நினைவுகளை மீட்டுக்கொண்டேன்.
அங்கு சென்றபோதெல்லாம் வாங்கிய பொருட்கள் சில உண்டு.
படங்கள் அனைத்தும் மிக நன்றாக இருக்கின்றன. இந்த க்ளோபல் வில்லேஜ் பற்றி நீங்கள் முன்பும் இரு வருடம் இருக்கும் என்று நி நைக்கிறேன். படங்களோடு போட்ட பதிவு நினைவிருக்கு மனோ அக்கா.
இப்பவும் என்ன கோலாகலம். இதை முழுவதும் பார்த்து முடிக்கவே ஒரு வாரம் மேல் ஆகிவிடும் போல இருக்கிறதே...ஒவ்வொரு முறை போகும் போதும் நுழைவுக்கட்டணம் எடுக்க வேண்டுமோ அல்லது சீசனல் டிக்கெட்டா?
கீதா
குளோபல் வில்லேஜ் படங்கள் எல்லாம் மிக அருமை.
வணக்கம் கில்லர்ஜி!
நெடு நாட்கள் கழித்து என் தளத்திற்கு வருகை தந்ததற்கு இனிய நன்றி!
நீங்கள் ஏற்கனவே ரசித்த காட்சிகள் தான் என்றாலும் ஒவ்வொரு வருடமும் அரங்கங்களின் அமைப்பும் காட்சிகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன! ஒவ்வொரு வருடமும் கின்னஸ் அமைப்பு எந்த சாதனைக்காவது விருது தருகிறது! அதனால் தான் ஒவ்வொரு வருடமும் இங்கு சென்று ரசிப்பது எனக்கு மிகுந்த மகிழ்வைத்தருகிறது!
தற்போது கிளவுட் சீடிங் முறையால் செயற்கை மழை அதிகம் பெய்கிறது. இதனால் சென்ற 2ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மட்டும் குளோபல் வில்லேஜ் மூடப்பட்டது.
கருத்துரைக்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி சகோதரர் ஸ்ரீராம்!
ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி தனபாலன்!
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி நெல்லைத்தமிழன்!
வாருங்கள் கீதா! அழகாய் கருத்துரையிட்டிருக்கிறீர்கள்!
குளோபல் வில்லேஜில் நுழைய கட்டணம் 20 திர்ஹாம்ஸ்! 3 வயதிற்குக்கு கீழேயுள்ள குழந்தைகளுக்கும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் நுழைவுக்கட்டணம் இலவசம். சீசன் டிக்கட் எல்லாம் கிடையாது. ஆன்லைனில் வாங்கினால் 15 திர்ஹாம்ஸ் தான்.
இதில் என்ன சிறப்பு என்றால் உலகின் பல்வேறு நாட்டு மக்களை சுற்றிலும் காணும்போது நமக்கும் நம் பிரச்சினைகள், கவலைகள் மறந்து அனைவரின் சிரிப்பும் உற்சாகமும் சுற்றி கொட்டிக்கிடக்கும் அழகான காட்சிகளும் நம்மையும் பற்றிக்கொள்வது மட்டுமல்ல, ஒரு நாலைந்து மணி நேரங்கள் நம்மை வேறு ஒரு புதிய உலகில் சஞ்சரிக்க வைக்கும்! எல்லா இடமும் lively ஆக இருக்கும்!
ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி கோமதி அரசு!!
குளோபல் வில்லேஜ் காட்சிகள் எவ்வளவு அழகு.... உங்கள் பதிவு மூலம் நாங்கள் பார்த்து ரசிக்க முடிகிறது. நன்றி.
குளோபல் வில்லேஜ்...நல்ல சொல்லாடல்..உங்களால் நாங்கள் காணும் வாய்ப்பு. நன்றி.
ஒவ்வொரு அரங்கையும் அழகாக வடிவமைத்திருக்கிறார்கள். படங்கள் யாவும் நன்று.
நீண்ட நாட்களின்பின் வருகிறேன் அழகிய படங்கள். எனது துபாய் பயணத்தையும் மீண்டும் நினைவூட்டியது.
Post a Comment