வயதானால் வலிகளுக்குப் பஞ்சமில்லை.
எலும்பு சம்பந்தமான மூட்டு வலி, குதிகால் வல், இடுப்பு வலி என்று தொடர்ந்து வருவதும் சர்க்கரை ஏறுவதும் இரத்த அழுத்தம் உயர்வதும் முதியவர்களை அதிகமாகவே ஆட்டிப்படைக்கின்றன. நோய்களை கட்டுப்பாட்டில் வைப்பதும் அதிக வலிகள் இல்லாமல் உடலை பராமரிப்பதும் சவால்களாகவே இன்றைக்கு இருந்து வருகின்றன. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல, பல வித மருத்துவ முறைகளை கடைப்பிடிக்க நேருகின்றது. அதையும் தாண்டி சின்னச் சின்ன வைத்திய முறைகள் நமது நோய்களின் கடுமையைக் குறைக்க வழி செய்கின்றன. அந்த மாதிரி சில வைத்திய முறைகள், நான் என் ஃபைலில் சேகரித்து வைத்திருந்த சிலவற்றை இங்கே பகிர்கிறேன். யாருக்கேனும் இவை பலன் கொடுத்து நோயின் கடுமையைக்குறைத்தால் அதுவே இந்தப்பதிவிற்கான பரிசாய் மாறும்.
சர்க்கரை நோய் குறைய:
1. எருக்கம் இலைகள் இரண்டை எடுத்து கால்களை நன்கு கழுவிக்கொண்டு காலின் அடிபாகத்தில் இலைகளின் அடிபாகத்தை வைத்து சாக்ஸ் போட்டு பொருத்திக்கொள்ள வேண்டும். இரவில் இதை உபயோகிக்கக்கூடாது.
பகலில் தினமும் 6 மணி நேரம் உபயோகிக்க வேண்டும். இதைப்போல ஏழு நாட்கள் செய்யும்போது எட்டாம் நாள் உங்களுக்கு 50 முதல் 60 வரை சர்க்கரை குறைந்திருக்கும்.
2. 300 கிராம் செலரி தண்டுகளை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும். அதை ஒரு சிறு பாத்திரத்தில் போட்டு 6 எலுமிச்சம்பழங்களின் சாறை அதன் மீது பிழிந்து ஒரு சிறு தட்டால் மூடி, ஒரு அகன்ற பாத்திரத்தில் நீர் ஊற்றி, இந்த சிறிய பாத்திரத்தை அதனுள் வைத்து அந்த தண்ணீரை கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் தீயைக் குறைத்து கொதி நிலையில் 2 மணி நேரம் வைத்திருக்கவும். பின் அடுப்பை அணைத்து, சூடு நன்றாக குறைந்ததும் சிறு பாத்திரத்தில் வைத்த செலரிக்கலவையை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து, தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு மேசைக்கரண்டி குடித்து வரவும். விரைவில் சர்க்கரை நார்மலுக்கு வரும்.
சைனஸ் பிரச்சினைக்கான தீர்வு இது:
சாறு நீக்கிய எலுமிச்சம்பழத்தோல்களைப்போட்டு நீர் விட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும். எந்த மூக்கு துவாரத்தில் நீர் வடிகிறதோ அந்த மூக்கு துவாரத்தால் இழுத்து அடுத்த துவாரத்தால் காற்றை வெளி விட வேண்டும். பிறகு அதே துவாரத்தால் உள்ளே இழுத்து நீர் வடியும் துவாரத்தால் வெளி விட வேண்டும்.
மூட்டு வலி யூரிக் அமிலம் அதிகரித்தால்:
பித்தப்பை கற்களுக்கு:
களைப்பிற்கு:
முருங்கைக்காய் விதை நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
அதை வாங்கி உடைத்துப்பார்த்தால் உள்ளே கருப்பு விதை இருக்கும். இது விட்டமின் பி அதிகம் உள்ளது. தினமும் ஒரு விதை சாப்பிட்டு வரவும்.
குதிகால் வலிக்கு:
கொள்ளு மாவு 2 ஸ்பூன், நல்லேண்ணெய் 1 ஸ்பூன், வினீகர் 1 ஸ்பூன், கல்லுப்பு 1 ஸ்பூன் இவற்றை ஒரு கப் தயிரில் நன்கு கலந்து குழைக்கவும். இந்த பேஸ்டை குதிகாலில் பாதி கால் வரை தடவி துணி வைத்து கட்டி இரவு தூங்க வேண்டும்.. கால் வலி காலையில் சரியாகி விடும்.
11 comments:
பயனுள்ள குறிப்புகள்
நன்றி.
எருக்கம் இலை வைத்தியம் ஆச்சர்யம் தருகிறது. ஷூவின் உள்ளே இலையின் அடிபாகத்தை வைக்கவேண்டும் என்கிற குறிப்பு சரியாகப் புரியவில்லை. இலையைப் புரட்டி வைக்க வேண்டுமா?
மொத்தத்தில் உபயோகமான குறிப்புகள். சோரியாட்டிக் ஆர்த்ரைடிஸ்க்கு சுலப வைத்தியம் எதுவும் உண்டா? கொள்ளு வைத்தியம் அதற்கும் உபயோகப்படுமா?
மிகவும் பயனுள்ள தகவல்கள்... நன்றி அம்மா...
சிறப்பான தகவல். உபயோகமானதும் கூட.
சில மாதங்களாக முழங்கால் மூட்டில் கடுமையான வலி.. தனியார் மருத்துவ மனையில் காட்டியதற்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து விட்டு மூட்டு எலும்பு தேய்ந்து விட்டது என்றதுடன் சில மாத்திரைகளையும் எழுதித் தந்தார்கள்.. நான் இவற்றோடு உளுந்தங்கஞ்சியையும் வாரத்தில் மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டேன்.. கொஞ்சம் வேதனை குறைந்திருந்தது.. தற்போது இரண்டு வாரங்களாக உளுந்தங்கஞ்சி எடுத்துக் கொள்ளவில்லை. மறுபடியும் வலி வந்து விட்டது...
இயற்கை மருத்துவத்திற்கு மாற்று இல்லை..
பயனுள்ள பதிவு..
வாழ்க நலம்...
எருக்கம் இலை வைத்தியம் என் கணவர் கடை பிடித்தார். நல்ல பலன் இருந்தது. ஆனால் பாத்ரூம் செல்லும் பொழுது சாக்ஸை கழற்றி விட்டு, மீண்டும் அணிந்து கொள்வது கஷ்டமாக இருக்கிறது என்று தொடரவில்லை.
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி கோமதி அரசு!
அன்பு சகோதரர் ஸ்ரீராம்!
நான் ஷூ பற்றி குறிப்பிடவில்லை. நம் கால்களை கழுவிக்கொண்டு உள்ளங்கால்களில் எருக்கன் இலையின் அடிப்பாகத்தை வைத்து சாக்ஸ் போட்டுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். திருமதி.பானுமதி வெங்கடேஸ்வரனும் அவர்களின் கணவருக்கு இந்த மருத்துவத்தை உபயோகித்ததில் நல்ல பலன் கிடைத்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.
சோரியாட்டிக் ஆர்த்ரைடிஸ்க்கு உபயோகமான குறிப்புகள் இந்த வீடியோவில் உள்ளன.பார்க்கவும்.
https://www.youtube.com/watch?v=tRr64JjTUTE
எருக்கம் இலை வைத்தியம் முயன்று பார்க்கணும். கழிவறை போவதில் சிரமம் இருக்கும். பார்ப்போம். பயனுள்ள குறிப்புகள்.
பயனுள்ள குறிப்புகள். பகிர்வுக்கு நன்றி.
Post a Comment