ஐம்பது நாட்கள் இடைவெளி எடுத்துக்கொண்டு தஞ்சை வந்தாயிற்று. வரும்போதே ஏர்செல், அப்புறம் ஏர்டெல் என்று சென்னையிலேயே பிரச்சினைகள் வந்து விட்டன. வந்ததிலிருந்து வலைப்பக்கம் வரவே முடியவில்லை. வந்ததுமே இரண்டு திருமணங்கள், ஒரு மரணம் இப்படியே சுற்ற வேண்டியதாயிற்று! ஒரு வழியாக வீட்டில் வந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள 20 நாட்களாயிற்று. இடையில் மறுபடி சென்னைப்பயணம் வேறு. இரயில் பயணங்களை சில அசெளகரியங்களுக்காக எப்போதுமே மேற்கொள்ள மாட்டேன். இந்த தடவை வெகு நாட்களுக்குப்பிறகு ரயில் பயணம். இப்போதெல்லாம் சார்ட் ஒட்டுவதில்லை என்பதும் புதியதாக இருந்தது. ரயில்வே நிர்வாகம் பேப்பர் செலவை மிச்சப்படுத்துகிறது என்று ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்.
எப்போதுமே சென்னை சென்றால் ஏதாவது புதுப்புது உணவகங்கள் செல்வது வழக்கம். இந்த முறை சென்னையில் சிறுதானிய சாப்பாடு போடும் ஒரு உணவகம் சென்றோம். [ PREM'S GRAMA BOOJANAM ]அடையாறு சிக்னல் அருகில் GRTஅருகில் இருக்கிறது . சுலபமாக அடையாளம் கண்டு பிடிக்க முடிந்தது.
எல்லா உணவையும் வைத்து ஒரே தடவையில் கொடுத்து விடுகிறார்கள்.
சிறுதான்யங்களான திணையில் சாம்பார் சாதம், குதிரைவாலியில் ரசம் சாதம், சாமையில் தயிர் சாதம், வரகரிசி கறிவேப்பிலை சாதம், கீரைப் பொரியல், நல்ல எண்ணெயில் செய்த அல்வா, வாழைப்பூ துவையல், சப்பாத்தி ஒன்று அல்லது கேழ்வரகு களி உருண்டைகள் புளிக்குழம்பில் போட்டது என்று தருகிறார்கள். கிராம்பு, சீரகம், ஏலம் போட்டு காய்ச்சிய தண்ணீர் குடிக்கத் தருகிறார்கள்.
சுவை நன்றாகவே இருந்தது. ரசம் சாதத்தில் நிறைய மிளகு. சிலருக்கு பிடிக்கலாம். எனக்கு மிகவும் உரைத்தது. ஒரு சாப்பாடு விலை எண்பது தான்!!
குறைகள்: மாடியேறிச்செல்ல வேண்டும். பராமரிப்பு ரொம்ப நாட்களாக பண்ணவில்லை என்று பார்த்தாலே தெரிகிறது. பரிமாறுபவர் எந்த விளக்கமும் சொல்லவில்லை. நாமாகவே எல்லாவற்றையும் கேட்க வேண்டியிருக்கிறது.