Monday, 12 March 2018

கிராம போஜனம்!!!

ஐம்பது நாட்கள் இடைவெளி எடுத்துக்கொண்டு தஞ்சை வந்தாயிற்று. வரும்போதே ஏர்செல், அப்புறம் ஏர்டெல் என்று சென்னையிலேயே பிரச்சினைகள் வந்து விட்டன. வந்ததிலிருந்து வலைப்பக்கம் வரவே முடியவில்லை. வந்ததுமே இரண்டு திருமணங்கள், ஒரு மரணம் இப்படியே சுற்ற‌ வேண்டியதாயிற்று! ஒரு வழியாக வீட்டில் வந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள 20 நாட்களாயிற்று. இடையில் மறுபடி சென்னைப்பயணம் வேறு. இரயில் பயணங்களை சில அசெளகரியங்களுக்காக எப்போதுமே மேற்கொள்ள மாட்டேன். இந்த தடவை வெகு நாட்களுக்குப்பிறகு ரயில் பயணம். இப்போதெல்லாம் சார்ட் ஒட்டுவதில்லை என்பதும் புதியதாக இருந்தது. ரயில்வே நிர்வாகம் பேப்பர் செலவை மிச்சப்படுத்துகிறது என்று ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்.

எப்போதுமே சென்னை சென்றால் ஏதாவது புதுப்புது உணவகங்கள் செல்வது வழக்கம். இந்த முறை சென்னையில் சிறுதானிய சாப்பாடு போடும் ஒரு உணவகம் சென்றோம். [ PREM'S GRAMA BOOJANAM ]அடையாறு சிக்னல் அருகில்  GRTஅருகில் இருக்கிறது . சுலபமாக அடையாளம் கண்டு பிடிக்க முடிந்தது.



எல்லா உணவையும் வைத்து ஒரே தடவையில் கொடுத்து விடுகிறார்கள்.



சிறுதான்யங்களான திணையில் சாம்பார் சாதம், குதிரைவாலியில் ரசம் சாதம், சாமையில் தயிர் சாதம், வரகரிசி கறிவேப்பிலை சாதம், கீரைப் பொரியல், நல்ல எண்ணெயில் செய்த அல்வா, வாழைப்பூ துவையல், சப்பாத்தி ஒன்று அல்லது கேழ்வரகு களி உருண்டைகள் புளிக்குழம்பில் போட்டது என்று தருகிறார்கள். கிராம்பு, சீரகம், ஏலம் போட்டு காய்ச்சிய தண்ணீர் குடிக்கத் தருகிறார்கள்.




சுவை நன்றாகவே இருந்தது. ரசம் சாதத்தில் நிறைய மிளகு. சிலருக்கு பிடிக்கலாம். எனக்கு மிகவும் உரைத்தது. ஒரு சாப்பாடு விலை எண்பது தான்!!





குறைகள்:  மாடியேறிச்செல்ல வேண்டும். பராமரிப்பு ரொம்ப நாட்களாக பண்ணவில்லை என்று பார்த்தாலே தெரிகிறது. பரிமாறுபவர் எந்த விளக்கமும் சொல்லவில்லை. நாமாகவே எல்லாவற்றையும் கேட்க வேண்டியிருக்கிறது.

24 comments:

KILLERGEE Devakottai said...

தங்களது இந்திய பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்.

சென்னை தகவல்கள் நன்று நன்றி.

Anuprem said...

ஆஹா...அருமையான உணவு..

திண்டுக்கல் தனபாலன் said...

80 ரூபாய் என்பது ஆச்சரியம் தான்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உணவக அனுபவம் அருமை.

கோமதி அரசு said...

கிராம போஜனம் நல்லா இருக்கிறது.
அனைத்தையும் ஒரே நாளில் சாப்பிட்டால் வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளுமா?
சிறு தானியங்கள் என்றாலும் ஒவ்வொரு நாள் ஒவ்வொன்று என்றால் பரவாயில்லை.

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு உணவக அறிமுகம்! நன்றி!

பிலஹரி:) ) அதிரா said...

ம்ிக அருமையாக இருக்குது தட்டைப் பார்க்கவே.

//சிறுதான்யங்களான திணையில் சாம்பார் சாதம், குதிரைவாலியில் ரசம் சாதம், சாமையில் தயிர் சாதம், வரகரிசி கறிவேப்பிலை சாதம்,///
ஓ இப்படியும் செய்யலாமோ.. இவை அனைத்தும் என்னிடம் வீடில் இருக்கு, ஒவ்வொன்றாக செய்திட வேண்டியதுதான்.

நெல்லைத் தமிழன் said...

நாங்கள் சென்று, அந்தச் சமயம் சாப்பிடாமல் வந்துவிட்டோம் (உணவகம் இன்னும் ரெடியாக வில்லை). அடுத்தமுறை சாப்பிட்டுடவேண்டியதுதான்.

நெல்லைத் தமிழன் said...

என் மனைவி சொல்றா, அவள், அவளுடைய தம்பியுடன் சென்றாளாம். அங்கு எலிகள் ஒடுவதைப் பார்த்துவிட்டும், இடத்தின் அசுத்தத்தைப் பார்த்தும் சாப்பிடவில்லையாம். உங்கள் அனுபவம் எப்படி இருந்தது?

Yarlpavanan said...

அருமையான பதிவு - உணவு

துரை செல்வராஜூ said...

கிராம போஜனம் பற்றிய தகவல்கள் அருமை..

ஆனாலும் எல்லாமும் ஒரே தட்டில் என்பது .. சற்று யோசிக்கிறேன்...
ஏனெனில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குணம்...

பணியாளர்களால் சில நல்ல உணவகங்களின் பெயர் கெடும்..

அந்த வகையில் இதுவும் ஒன்று போலிருக்கின்றது...

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி அனுராதா பிரேம்குமார்!

மனோ சாமிநாதன் said...

நானும் சாப்பாடு 80 ரூபாய்தான் என்று தெரிந்ததும் ஆச்சரியப்பட்டேன் தனபாலன்! இதைவிட இரு மடங்கு, மும்மடங்கு விலையில் இருக்கும் உணவு கூட இந்த அளவு தரமாகப்பார்த்ததில்லை!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி கோமதி அரசு! எல்லா கலவை சாதங்களும் மிகச்சிறிய அளவு தான் என்னும்போது எல்லாம் கலந்து சாப்பிடுவதில் எந்தப்பிரச்சினையுமில்லை! உண்மையில் சாப்பிட்டதுமே வயிறு கனமாக இல்லை. இலேசாக இருந்தது.

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி தளிர் சுரேஷ்!!

மனோ சாமிநாதன் said...

அருமையான பின்னூட்டம் தந்ததற்கு அன்பு நன்றி அதிரா!

மனோ சாமிநாதன் said...

அசுத்தம் எல்லாம் இல்லை நெல்லைத்தமிழன்! மாடியேற கஷ்டமாக இருந்தது. படியெல்லாம் கூட்டி சுத்தமாக இல்லை. சாதாரணமாக இருந்தது. ஒரு தெளிவான போர்டோ அல்லது வழிகாட்டுதலோ இல்லை! பரிமாறுபவர் என்ன மெனு, என்னென்ன கலவை சாதங்கள் என்பதைத்தவிர எதையும் சொல்லாததால் ஒவ்வொன்றாகக் காண்பித்து நான் தான் கேள்வி கேட்க வேண்டியிருந்தது.ஆரோக்கியமான உணவு என்பதும் சுவையும் பரவாயில்லை என்பதும் உண்மை! ஆனால் அதை இன்னும் அழகாகச் செய்யலாம்!!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி யாழ்ப்பாவணன்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!!
நான்கு கலவை சாதங்கள் , குழம்பிற்கு சாம்பார் சாதம், ரசத்திற்கு ரசம் சாதம், தயிருக்கு தயிர் சாதம், அதைத்தவிர கறிவேப்பிலை சாதம் என்று வகைகள் இருந்தாலும் சுவையில் எதுவும் வேறுபாடு தெரியவில்லை.

Thulasidharan V Thillaiakathu said...

PREM'S GRAMA BOOJANAM வந்தீர்களா அக்கா....அட அங்கிருந்து ஜஸ்ட் 20 நிமிடம் தான்..சரி ட்ராஃபிக்கை கணக்கில் கொண்டால் 30 நிமிடம் ஹா ஹா ஹா எங்கள் ஏரியா......வீடு....

நானும் சென்றிருக்கிறேன்....பார்க்க அட்ராக்டிவாக இல்லை...ஆம்பியன்ஸ் என்று பார்க்கப் போனால் அத்தனை இல்லை...வெளியிலிருந்து கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம்தான் அக்கா...விலை குறைவு....அதற்குத் தரம் ஓகே...ஆனால் இன்னும் பெட்டரான செர்வீஸ் பண்ணலாம்....நாம் தான் கேட்கணும் என்ன உணவு என்று...பிற ஹோட்டல்களை விட விலை குறைவு பாரம்பரியம் என்று சொல்லி பல ஹோட்டல்களில் விலை அனியாய விலைக்கு விற்கிறார்கள்....

அக்கா நீங்கள் கே கே நகரில் இருக்கும் பாரம்பரிய உணவு விடுதி...போயிருக்கீங்களா...இதுவும் சிறிய இடம் தான். மெஸ் போன்றுதான் நடத்துகிறார்கள். ஒரு சாப்பாடு 100 ரூபார். ஆனால் கொஞ்சம் அதிகம் தான் ஏனென்றால் பாரம்பரியம் என்று சொல்லிவிட்டு சாதமும் வைக்கிறார்கள். தரம் ஓகே தான்...

இப்போது எதற்கெடுத்தாலும் பாரம்பரியம் என்று சொல்லிச் சொல்லி...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அதிரா நீங்கள் சாதத்தில் என்னவெல்லாம் செய்கிறீர்களோ அதை அனைத்தையும் வரகரிசி, பனிவரகு, சாமை, குதிரைவாலி இப்படி சிறுதானியங்களில் செய்யலாம்...

சின்ன சோளம், கம்பு இவற்றில் பிசிபேளாபாத் செய்து பாருங்கள் நன்றாக வரும் அது போலவே மற்ற சிறு தானியனளில்..

கீதா

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான உணவு
வாய்புக் கிடைக்கும் பொழுது சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் சகோதரியாரே
நன்றி