இங்கே, துபாயில் வருடா வருடம் குளோபல் வில்லேஜ் என்ற அரங்கத்தினுள் பல நாடுகள் தங்கள் பொருட்களை வைத்து கண்காட்சி நடத்துகின்றன. இந்த கண்காட்சி அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நடக்கும். இந்தியா மற்றும் உலகத்தின் பல நாடுகளிலிருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் இந்தக் கண்காட்சிக்கு வந்த வண்ணம் இருப்பார்கள். இந்தியா உள்பட பல நாடுகளில் விமான பயணச்சேவை செய்யும் நிறுவனங்கள் விமானப் பயணச்சீட்டு, விசா உள்பட எல்லாமே மிகக்குறைந்த விலையில் தரும்.
அரங்கத்தினுள் தின்பண்டங்கள், பழங்கள், உணவிற்கான தனி ஸ்டால்கள் அங்கங்கே அமைந்திருக்கும். கூடவே அங்கங்கே சுத்தமும் மிக அழகுமாய் கழிப்பறைகள்..
அரங்கத்தினுள் தின்பண்டங்கள், பழங்கள், உணவிற்கான தனி ஸ்டால்கள் அங்கங்கே அமைந்திருக்கும். கூடவே அங்கங்கே சுத்தமும் மிக அழகுமாய் கழிப்பறைகள்..
நான் எப்போதுமே இந்தக் கண்காட்சியைப்பார்க்கத் தவறுவதிலை. காரணம் ஒவ்வொரு நாடும் அதன் அரங்கத்தை அத்தனை அழகாய் அமைத்திருக்கும்.இந்த முறையும் சென்று ரசித்து வந்தேன். ஆனால் நேரமின்மையால் அனைத்து நாடுகளையும் பார்த்து ரசிக்க முடியவில்லை. ரசித்தவரை சில புகைப்படங்கள் உங்களுக்காக......
| இரான் அரங்கம் |
| கம்போடியா அரங்கம் |
| கம்போடியா நாட்டுப்பெண்ணின் அலங்காரம்! கூட நின்று போட்டோ எடுக்க எல்லோருக்கும் அவசரம்! |
| சிங்கப்பூர் மலேஷியா அரங்கம் |
| முகப்பு நுழைவாயில் பகல் நேரத்தில்! |
| முகப்பு நுழைவாயில் இரவு நேரத்தில்! |
| ஐக்கிய அரபுக்குடியரசு அரங்கம் |
| பாகிஸ்தான் அரங்கம் |
| குவைத் அரங்கம் |
| இடையிலே போகும் சிறு இரயில்! |
| பின்னணியில் அரங்கங்களுடன் ஒரு வித்தியாசமான கோணம்! |