இங்கே, துபாயில் வருடா வருடம் குளோபல் வில்லேஜ் என்ற அரங்கத்தினுள் பல நாடுகள் தங்கள் பொருட்களை வைத்து கண்காட்சி நடத்துகின்றன. இந்த கண்காட்சி அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நடக்கும். இந்தியா மற்றும் உலகத்தின் பல நாடுகளிலிருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் இந்தக் கண்காட்சிக்கு வந்த வண்ணம் இருப்பார்கள். இந்தியா உள்பட பல நாடுகளில் விமான பயணச்சேவை செய்யும் நிறுவனங்கள் விமானப் பயணச்சீட்டு, விசா உள்பட எல்லாமே மிகக்குறைந்த விலையில் தரும்.
அரங்கத்தினுள் தின்பண்டங்கள், பழங்கள், உணவிற்கான தனி ஸ்டால்கள் அங்கங்கே அமைந்திருக்கும். கூடவே அங்கங்கே சுத்தமும் மிக அழகுமாய் கழிப்பறைகள்..
அரங்கத்தினுள் தின்பண்டங்கள், பழங்கள், உணவிற்கான தனி ஸ்டால்கள் அங்கங்கே அமைந்திருக்கும். கூடவே அங்கங்கே சுத்தமும் மிக அழகுமாய் கழிப்பறைகள்..
நான் எப்போதுமே இந்தக் கண்காட்சியைப்பார்க்கத் தவறுவதிலை. காரணம் ஒவ்வொரு நாடும் அதன் அரங்கத்தை அத்தனை அழகாய் அமைத்திருக்கும்.இந்த முறையும் சென்று ரசித்து வந்தேன். ஆனால் நேரமின்மையால் அனைத்து நாடுகளையும் பார்த்து ரசிக்க முடியவில்லை. ரசித்தவரை சில புகைப்படங்கள் உங்களுக்காக......
| இரான் அரங்கம் |
| கம்போடியா அரங்கம் |
| கம்போடியா நாட்டுப்பெண்ணின் அலங்காரம்! கூட நின்று போட்டோ எடுக்க எல்லோருக்கும் அவசரம்! |
| சிங்கப்பூர் மலேஷியா அரங்கம் |
| முகப்பு நுழைவாயில் பகல் நேரத்தில்! |
| முகப்பு நுழைவாயில் இரவு நேரத்தில்! |
| ஐக்கிய அரபுக்குடியரசு அரங்கம் |
| பாகிஸ்தான் அரங்கம் |
| குவைத் அரங்கம் |
| இடையிலே போகும் சிறு இரயில்! |
| பின்னணியில் அரங்கங்களுடன் ஒரு வித்தியாசமான கோணம்! |
21 comments:
ரசிக்கவைத்த படங்கள்.
"குளோபல் வில்லேஜ் கண்காட்சி!!!"
Very nice...
அருமையான புகைப்படங்கள்...
கம்போடியா பெண்ணுமழகு, அவரின் அலங்காரமும் அழகு.
புகைப்பட கண்காட்சியின் வாயிலாக கண்காட்சியைக் கண்டோம். நன்றி
அருமையான புகைப்படங்கள். இங்கே தில்லியில் நவம்பர் 14 முதல் 27 வரை எல்லா மாநிலங்களிலிருந்தும் இப்படி அரங்குகள் அமைத்து Trade Fair உண்டு. இவ்வருடம் இன்னும் செல்ல வில்லை!
இந்திய அரங்கின் போட்டோ காணவில்லையே. ஏன்?
நம்ம இந்திய அரங்கைக் காணோமே.??? அரங்கம் அமைக்கவில்லையா..???
படங்கள் அருமை அம்மா...
நான் ஒருமுறை சென்றிருக்கிறேன்...
ஆகா
அருமையான புகைப் படங்கள்
சகோதரியாரே
நன்றி
படங்கள் அனைத்தும் அருமை.
ஒரு முறை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.
ஆரம்ப வருடங்களில் ஒன்றிரண்டு முறை பார்த்திருந்தாலும், ஒவ்வொரு வருடமும் போக வேண்டும் என்று நினைப்பதுதான், நிறைய நடக்க வேண்டுமே என்று பயந்தே போவதில்லை. :-)
வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!
வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி உமையாள்!
பாராட்டிற்கு அன்பு நன்றி வெங்கட்! இந்தியத்தலைநகரில் எல்லா மாநிலங்களின் கண்ஃகாட்சி என்பதும் மிக நன்றாகத்தானிருக்கும்!
வருகைக்கு அன்பு நன்றி சகோதரர் பழனி கந்தசாமி! எப்போதும் இந்தக்கண்காட்சியில் நுழைவு வாயில் அருகேயே இந்திய அரங்கம் அமைந்திருக்கும். அதனால் முதலில் அதற்குள் தான் நுழைவோம். இந்திய அரங்கமும் ஒவ்வொரு முறையும் அத்தனை அசத்தலான அழகுடன் அமைந்திருக்கும்! இந்த முறை தான் முதன் முதலாக இந்தியா கடைசி இடத்திற்கு போய் விட்டது. இந்த அளவு பார்த்ததற்கே 4மணி நேரங்கள் ஆகி விட்டதால் பாதி அரங்கங்கள் முடிக்கும்போதே பேரன் உறங்கி விழ ஆரம்பிக்க, இடையிலேயே திரும்ப வேண்டியதாகி விட்டது!
வருகைக்கு அன்பு நன்றி மாடிப்படி மாது! சகோதரர் பழனி கந்தசாமிக்கு உங்கள் கேள்விக்கான பதில் அளித்திருக்கிறேன். போதிய நேரம் இல்லாததால் இந்திய அரங்கம் உள்பட இதர நாடுகளைப் பார்க்க முடியவில்லை!
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி குமார்!
வருகைக்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி சகோதரர் ஜெயக்குமார்!
பாராட்டிற்கு அன்பு நன்றி சொக்கன் சுப்ரமணியம்! அவசியம் ஒரு முறை இந்தக்கண்காட்சியை வந்து பாருங்கள்!
உண்மை தான் ஹுஸைனம்மா! 4 மணி நேரம் கடந்த பின்பும் நாங்கள் பாதியைக்கூட முடிக்க முடியவில்லை! ஒவ்வொரு தடவையும் இது தான் நடக்கிறது! கொஞ்ச நாட்கள் கழித்து மறுபடி சென்று மீதியை முடித்து விடலாம் என்று நினைப்பதும் ஒவ்வொரு வருடமும் நடக்கிறது. ஆனால் மறுபடி செல்வது மட்டும் நடப்பதேயில்லை!
என் மகன் பேரனையெல்லாம் விட்டு விட்டு தனியே வந்து அப்பாவுடன் ரசியுங்கள் என்று வற்புறுத்துகிறார். பேரனை விட்டுச் செல்லவும் மனசில்லை என்பதால் மறுபடி செல்வதும் எளிதாக இல்லாமல் ஆகி விடுகிறது!
ஆஹா! என்ன அழகான அரங்க அமைப்புகள் குளோபல் வில்லேஜ் கண்காட்சியில்! அருமையான புகைப்படங்கள்! சரி இந்தியா இல்லையா?
Post a Comment