Wednesday, 18 January 2023

குளோபல் வில்லேஜின் இரண்டாவது பகுதி !!!!!

குளோபல் வில்லேஜின் இரண்டாவது பகுதியில் மீண்டும் புகைப்படங்கள்!இவர் இபின் பத்தூத்தா.மொரோக்கோ நாட்டின் புகழ் பெற்ற கல்வியாளரும் பயணியுமாவார். இவர் 44 நாடுகள் 11000 நாட்கள், 75,000 மைல்கள் நீண்ட பயணம் செய்துள்ளார். தான் சென்ற நாடுகளைப் பற்றியும் துல்லியமாக தனது நினைவுகளைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார். முகமது பின் துக்ளக்கின் ஆட்சியில் ஏழு ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றியிருக்கிறார்.செளதி அரேபியா


ஈரான்இந்திய அரங்கம். பக்கவாட்டில் குட்டி குட்டி இந்திய உணவகங்கள்...இந்திய உணவகங்கள்

இந்திய அரங்கத்திற்குள் சர்தார் வல்லபாய் படேல்

இந்திய உணவகங்கள் அருகே இன்னொரு நுழைவாயில்லெபனான்


பாலஸ்தீனம், லெபனான், கத்தார்

இந்தீய அரங்கத்திற்குள் ஒரு ஓவியம்இந்திய அரங்கம்


இந்திய அரங்கத்தின் இன்னொரு பக்கம்


சைனாவின் ஒரு பக்கம்-இடது பக்கம் பாலஸ்தீனம்சைனா


ஓமன் நாட்டின் ஒரு பகுதி

சீன அரங்கத்துக்குள் நடனம்

ஆப்கானிஸ்தான்


ஓமன்

தாய்லாந்து

கொரியா

ஜப்பான்

இரவில் குளோபல் வில்லேஜ்

16 comments:

ஸ்ரீராம். said...

துக்ளக்கின் ஆட்சியில் நீதிபதியாய் பணியாற்றிய சீனப்பயணி பெயர் சொல்ல விட்டு விட்டீர்களே....  நான் படித்த ஞாபகமாய் இருக்கிறது.  எஸ் ராவின் எனது இந்தியாவிலோ எதிலோ....  

பிரம்மாண்டமாய் இருக்கிறது...  ஆனால் சுவாரஸ்யமாய் இருந்ததோ...?

KILLERGEE Devakottai said...

அழகிய படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது.

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் சகோ ஸ்ரீராம்! விட்டுப்போன இந்த அறிஞரின் பெயரை உங்கள் பின்னூட்டம் கண்டதும் சேர்த்து விட்டேன். IBN BATTUTTA என்ற இந்த கல்வியாளர் மொரோக்கோ நாட்டுக்காரர். மார்கபோலோ, யுவான் சுவாங் போன்ற பயணிகளைக்காட்டிலும் அதிக பயணங்கள் செய்தவர்.

சுவாரஸ்யமாக இருந்ததா என்று எதைக்கேட்கிறீர்கள் என்று புரியவில்லை. பல நாடுகளின் கலாச்சாரங்களையும் உணவையும் கலை நிகழ்ச்சிகளையும் ஒரே இடத்தில் பார்க்க முடிவதால் தான் வருடம் தோறும் தவறாமல் குளோபல் வில்லேஜ் செல்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

படங்களை ரசித்ததற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!

ஸ்ரீராம். said...

ஆம்..  பதூதா..  முகமதுபின் துக்ளக் திரைபபடத்திலும் இவர் பெயர் வரும்.

Thulasidharan V Thillaiakathu said...

இபின் பதூதா முகமது பின் துக்ளக் - சோ படத்தில் ...நினைவிருக்கு.

இப்படி யுவான் சுவாங்க், மார்க்கபோலோ மெகஸ்தனிஸ் கூட பயணிகள் இல்லையா....

படங்கள் அனைத்தும் பிரம்மாண்டம். அழகாக இருக்கின்றன, இந்திய அரங்கம் அந்த ஓவியம் எல்லாம் அழகு. ரொம்பவே சுவாரசியமாக இருந்திருக்கும். சீன அரங்கில் அந்த நடனம் புகைப்படத்திலேயே அழகாக இருக்கிறது என்றால் நேரில் ஆடுவதைப் பார்க்க செம சுவாரசியமாக இருந்திருக்கும்.

புதியதாக ஏதேனும் உணவு சுவைத்தீங்களா மனோ அக்கா?

கீதா

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அழகு...

மனோ சாமிநாதன் said...

விரிவான, அழகான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி கீதா!

இதை சுற்றிப்பார்க்கும்போது பிரமிப்புடன் தான் சுற்றிப்பார்ப்பேன். அதனால் பல மணி நேரங்கள் சுற்றி பார்த்த பின் கால்கள் கெஞ்ச கிடைத்ததை சாப்பிடுவது தான் பல சமயங்களில் நட்ந்திருக்கிறது. முன்னெல்லாம் உணவகங்கள் நிறைய கிடையாது. சாப்பிடுவது பிரச்சினையாகவே இருந்திருக்கிறது. இப்போதோ ஒவ்வொரு நாட்டு பெவிலியன் அருகேயும் அந்தந்த நாட்டு உணவுப்பொருள்கள் கிடைக்கிறது. தாய்லாந்து நாட்டின் இளநீர், அரேபியர்களின் செஸ்நட், ஸ்ரீலங்காவின் தேங்காய் அடை, இப்படி கொஞ்சம் சுவைத்திருக்கிறேன். வயது காரணமாயும் வயிறு காரணமாயும் எப்போதும் சாப்பிடுவதில் ஒரு கவனம் இருப்பதால் நிறைய உணவு ஆராய்ச்சிகளில் இறங்குவதில்லை!!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தனபாலன்!

கரந்தை ஜெயக்குமார் said...

படங்கள் அழகு, தெளிவு

Jayakumar Chandrasekaran said...

அழகான படங்கள்

Unknown said...

Hello Mano akka,

Glad to see you active here. I am a big fan of your recipes since mayyam forum days. wonderful post. will look fwd for your post here on

மனோ சாமிநாதன் said...

படங்களை ரசித்து பாராட்டியதற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகரன்! வந்து படங்களை ரசித்து பாராட்டியதற்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

hello dear sister,

I could not identify you here as you name is not in the post. Any how, thanks a lot for remembering me still. I really value yr feedback here. I hope you will Visit here often and give me your valuable comments!!

மாதேவி said...

நல்லதோர் கண்காட்சி.