Tuesday 1 October 2019

துபாய் ஃபிரேம்’!!!!



துபாய் ஜபீல் பூங்கா அருகே செவ்வக வடிவிலான பிரமாண்ட புகைப்பட சட்டம்போல ‘துபாய் பிரேம்’ என்ற கட்டுமானம் உள்ளது. 250 கோடி திர்ஹாம் செலவில் 492 அடி உயரமுள்ள இரண்டு டவர்கள் , 305 அடி அகலமான பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது.இந்த பாலத்திலிருந்து ஒரு பக்கம் நவீன துபாயையும் இன்னொரு பக்கம் பழமையான துபாயையும் பார்க்க முடியும். கீழ்த்தளத்தில் ஒரு மியூசியம் உள்ளது. இங்கே பல்லாண்டுகளுக்கு முன்னதான அரேபியரின் வாழ்க்கை முறைகளையும் கலாச்சாரத்தையும் நாம் உணர்ந்து ரசிக்கும்படி வீடியோக்கள், நிழற்படங்கள், பொருள்கள் என்று அனைத்தும் உள்ளன. இவற்றை பார்த்து முடித்ததும் மின் தூக்கி நம்மை உச்சிக்கு அழைத்துச் செல்கிறது. வெளியேறுமுன்பு வருங்கால துபாய் எப்படி இருக்கும் என்பதை 3D மூலம் அசத்துகிறார்கள். உண்மையிலேயே மனம் பிரமித்துப்போகிறது. சட்டென்று அதிலிருந்து வெளியே வர முடியவில்லை. கடந்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் 1-ந் தேதி திறக்கப்பட்ட துபாய் பிரேமை ஒரே நேரத்தில் 200 பேர் பார்வையிடலாம். இந்த கட்டிடம் உலகின் மிக பிரம்மாண்டமான கட்டிடம் என்ற கின்னஸ் சாதனையை அடைந்துள்ளது.


தொலைவில் இருந்து பார்த்தால் ஒரு புகைப்பட சட்டத்திற்குள் துபாய் நகரம் உள்ளதுபோல தெரியும். இது இரும்பு தளவாடங்கள் மற்றும் கான்கிரீட் போன்றவற்றால் முப்பரிமாண பிரதியெடுக்கும் முறையில் வடிவமைக்கப்பட்டது.



பழங்கால அரேபிய வீடு
பழங்கால அரேபியர்களின் பொருள்கள்


மேற்புறத்தில் தங்கநிற உலோக தகடுகளால் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் உட்புறம் மற்றும் மேற்புறம் மூடப்பட்டு குளிரூட்டப்பட்ட கண்ணாடிகளால் சூழப்பட்ட நடைமேடையும், இருபுறங்களில் ‘லிப்ட்’ வசதியும் செய்யப்பட்டுள்ளது.



old dubai
new dubai
RULER OF DUBAI
RULER OF ABU DHABI AND THE PRESIDENT OF UAE
உட்புறத்தில்!!





இதன் உச்சியில் நின்று 360 டிகிரி கோணத்தில் துபாய் நகரின் அழகை ரசிக்க முடியும். பெரியவர்களுக்கு 50 திரஹம்ஸ் என்றும் 3லிருந்து 12 வயது குழந்தைகளுக்கு 20 திரஹம்ஸ் என்றும் நுழைவுச்சீட்டு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயதானவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களுக்குத்துணையாக வருபவர்களுக்கும் நுழைவு சீட்டு இலவசம்.

5 comments:

ஸ்ரீராம். said...

வியப்பான தகவல்கள். மிக சுவாரஸ்யமானபுகைப்படங்கள்.

priyasaki said...

வா...வ் படங்கள் அழகா இருக்கு அக்கா. தெரியாத தகவல்கள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

புருவங்களை உயரவைத்த செய்திகள், புகைப்படங்கள்.

Bhanumathy Venkateswaran said...

சுவாரஸ்யமான தகவல்களும், ஆச்சர்யமான படங்களும். 

மாதேவி said...

வாவ்! அற்புதம். இருவருடங்களுக்கு மூன்பு சென்றிருந்தோம் எல்லாமே ஆச்சரியம்தான்.நாள்வீதம் முன்னேறுகிறது.