Sunday, 8 September 2019

அசத்தும் ஓவியங்கள்!!



மலேஷியா நாட்டைச் சேர்ந்தது லங்காவி தீவு. மலேஷியாவின் கெடா மாகாணத்திலுள்ள தீவுக்குழுமம் இது. இதில் 104 தீவுக்கள் அடங்கியுள்ளன. இவற்றில் மிகப்பெரிய தீவு தான் லங்காவி தீவு. அந்தமான் கடலும் மலாக்கா நீரிணையும் இடத்தில்தான் லங்காவி தீவு இருக்கிறது இது JEWEL OF KEDHA என்று அழைக்கப்படுகிறது. மலேஷிய நாட்டிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் அமைந்துள்ளது. விமானத்தில் இருந்து பார்க்கும்போது கழுகு பறப்பதைப்போன்ற தோற்றம் தரும்

லங்காவித் தீவு.

இங்குள்ள 3D ART MUSEUM  மிகவும் புகழ் பெற்றது. உலகத்திலேயே இரண்டாம் இடம் வகிப்பது. மிகப்பெரிய அளவில் 3D ஓவியங்கள் தரையையும் சுவர்களையும் அலங்கரிக்கும். நம்மை அசத்துவது மட்டுமல்லாமல் சில நம்மை பயமுறுத்தவும் செய்யும். 200க்கும் மேற்பட்ட உயிரூட்டும் இந்த ஓவியங்களை 23 கொரியா நாட்டு ஓவியர்களும் மலேஷிய ஓவியர்களும் இணைந்து வரைந்திருக்கிறார்கள்.
என் பேரனும் பேத்தியும் இந்த ஓவியங்களிடையே! கண்டு ரசிப்பீர்கள் என நினைக்கிறேன்.





















18 comments:

KILLERGEE Devakottai said...

அருமை ஓவியம் மாதிரி இல்லை நேரில் பார்ப்பது போலிருக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

ஓவியங்கள் அனைத்தும் அழகு... குழந்தைகள் நன்றாக ரசித்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சி தந்தது.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஓ இவை ஓவியங்களோ.. நம்பவே முடியவில்லை... அதற்கேற்ப பேரன், பேத்தி இருவரும் சூப்பராகப் போஸ்ட் குடுக்கிறார்கள்.

ஸ்ரீராம். said...

அசத்தும் ஓவியங்கள்.  பேரன் பேத்தி கொடுக்கும் எக்ஸ்பிரெஷன்ஸும் அருமை.  குறிப்பாக அந்த கழுகு படத்தில்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மிகவும் இயற்கையாக இருந்தது. குழந்தைகளின் மகிழ்ச்சியைக் காணமுடிந்தது.

திண்டுக்கல் தனபாலன் said...

அட்டகாசம்...

மனோ சாமிநாதன் said...

ரசித்து பாராட்டியதற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி அதிரா!

மனோ சாமிநாதன் said...

ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி தனபாலன்!

priyasaki said...

நம்பமுடியவில்லை ஓவியங்கள் என. மிகவும் அழகா இருக்கு. உங்க பேரன் பேத்தியும் அழகா இருக்கிறார்கள். ஸ்கேட்போட்,படியில் ஏறி போவது போன்ற படங்கள் அழகு.

ராமலக்ஷ்மி said...

பிரமாதமான ஓவியங்கள். பேரக் குழந்தைகள் நன்கு ரசித்திருக்கிறார்கள். படங்களும் அருமை. மலேசியா சுற்றுலா செல்கிறவர்கள் லங்காவித் தீவுக்கும் தவறாமல் செல்ல வேண்டுமென சொல்லக் கேட்டிருக்கிறேன்.

மாதேவி said...

அழகிய ஓவியங்கள். குழந்தைகள் சூப்பர் நன்கு ரசித்திருப்பார்கள்.

இவ்வருட ஆரம்பத்தில் நாங்களும் குடும்பமாக மலேசியா சிங்கப்பூர் சென்று பார்த்து ரசித்து வந்தோம்.

மனோ சாமிநாதன் said...

நீண்ட நாட்களுக்குப்பின்னான வருகைக்கும் இனிய பாராட்டுக்கும் அன்பு நன்றி பிரிய சகி!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி மாதேவி!