Tuesday 21 August 2018

கிராமத்திற்கு ஒரு டிக்கெட்!!! [VILLAGE TICKET!!!! ]சென்ற ஜுலை 27ந்தேதி நான் என் கணவருடன் சென்னையில் இரண்டு நாட்கள் தங்க வேண்டியிருந்தது. ஹோட்டலில் தங்கியிருந்த போது, ஆங்கில நாளிதழைப்புரட்டிய என் கண்ணில் அன்றைக்கு ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் கிராமத்து கலைஞர்களையும் சமையல் வல்லுனர்களையும் உழவர்களையும் மரியாதை செய்யும் கிராமீயத்திருவிழா நடைபெறுவதாகச்சொல்லி 'நம்ம ஊரு, நம்ம பாரம்பரியம், நம்ம உணவு எல்லாவற்றையும் இங்கு வந்து கண்டு களியுங்கள்! ' என்று நிர்வாகம் விளம்பரப்படுத்தியிருந்தது.

அன்று மாலை அங்கே சென்றோம். நடன‌ங்கள், வாத்திய இசையுடன் வரவேற்பு பலமாக இருந்தது.

வரவேற்பு!!!அதைக்கடந்து சென்றால் பருத்திப்பால் நம்மை வரவேற்றது. நல்ல சுவை! குயவர்கள் மண்ணைக்குழைத்து மண் பாண்டங்களை உருவாக்கிக்கொண்டிருந்தார்கள்.


 அதற்கடுத்தாற்போல பெரிய மைதானம்! மறந்து போன தாயம், ஆடுபுலி ஆட்டம், பல்லாங்குழி, உறியடி போன்ற விளையாட்டுக்கள், மாட்டு வண்டி சவாரி, குடை ராட்டினம், உணவுக்கடைகள், குடிசை வீடுகள், வண்ணக்கோலங்கள், ஐயனார் கோயில், கரகாட்டம், ஒயிலாட்டம், தெருக்கூத்து, தப்பாட்டம், சிலம்பாட்டம், நையான்டி மேளம் என்று அமர்க்களமாக இருந்தது. மாட்டு வண்டியில் நிறைய பேர் ஏறிச்சென்றார்கள்!


ஆடுபுலி ஆட்டம்ஜட்கா [ குதிரை ] வண்டி!!கரகாட்டம்!! மிகவும் அருமையாக இருந்தது! ஆடிய பெண் இறுதியில் அழகாக ஆங்கிலம் பேசினார்!

கரகாட்டத்தைத்தொடர்ந்து மயிலாட்டம், புலியாட்டம் ஆட காத்திருக்கிறார்கள்! 

மயிலாட்டமும் காவடியாட்டமும்!


உணவுக்கடைகள் சிறுதானிய உணவு, அசைவம், பலகாரங்கள், சைவ உணவு, எண்ணெய் பலகாரங்கள் என்று பிரித்து வைக்கப்பட்டிருந்தன. ஒரு பக்கம் நாவல் பழங்கள் கூட விற்றுக்கொண்டிருந்தார்கள். இந்த உணவைத்தவிர கறி விருந்து என்ற பெயரில் நண்டு சாறு, கணவாய் குழம்பு, சென்னை மீன் குழம்பு, முட்டை கொத்துக்கறி, பிச்சிப்போட்ட கோழிக்கறி, பள்ளிப்பாளையம் சிக்கன், கொங்கு நாட்டு கறி, ஹொக்கனேக்கல் மீன் வறுவல், தூத்துக்குடி எறா மசால், நெத்திலி வறுவல், காடை வறுவல், செட்டி நாட்டு சுறா புட்டு, புதுக்கோட்டை முட்டை மாஸ், கடலூர் நண்டு மசாலா, விருதுந‌கர் பொரிச்ச பரோட்டா என்று 32 விதமான அசைவ உணவு வகைகள் உள்ள சாப்பாடு தனிக்குடிலில் பரிமாறப்பபட்டது. விலை ரூ.750. கல்யாண விருந்து என்று 32 வகைகளில் பலகாரங்கள் பறிமாறப்பட்டது. விலை 500 ரூ. நாங்கள் சாமை சாம்பார் சாதம், சுண்டல் வகைகள், வாழைப்பூ பக்கோடா, எலுமிச்சை சாதம் வாங்கி சாப்பிட்டோம்.

மொத்தத்தில் மறந்து போன நமது சமூக வாழ்வியலையும் கலாச்சாரத்தையும் நினைவூட்டிய விதம் அருமை! நாங்களும் சின்ன வயது சந்தோஷங்களை ஒரு முறை அனுபவித்த மாதிரி இருந்தது.


16 comments:

Yaathoramani.blogspot.com said...

படங்களுடன் பகிர்ந்தவிதம் நாங்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டத் திருப்தியைத் தந்தது வாழ்த்துக்களுடன்

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான நிகழ்வு அம்மா... படங்கள் அனைத்தும் அருமை...

ஸ்ரீராம். said...

அருமை.

இவற்றை எல்லாம் ரசிக்க மற்றும் சுவைக்க ஒரு நாள் போதாது!

நெல்லைத்தமிழன் said...

இது எப்படி எனக்குத் தெரியாமல் போய்விட்டது? மெனு லிஸ்டும் அருமை, கிராமீய மீட்டெடுப்பும் அருமை.

கோமதி அரசு said...

அருமையான பதிவு.
படங்கள் அழகு.

வெங்கட் நாகராஜ் said...

முகநூலில் இந்த நிகழ்வு பற்றிய விளம்பர்ம பார்த்தேன். சென்னையில் இருந்தால் சென்றிருக்கலாம். இங்கேயும் இப்படி கிராமிய உணவுகள், பழக்கங்கள் ஆகிய விஷயங்களுக்காகவே நிரந்தரமாக சில இடங்கள் உண்டு. அங்கே சென்றதுண்டு.

உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி.

கரந்தை ஜெயக்குமார் said...

கிராமிய மனம் வீசும் நிகழ்வு

வல்லிசிம்ஹன் said...

பார்க்கவே மிக அருமை. நல்ல ஏற்பாடு. இழந்த பாரம்பரியத்தை மீட்டு எடுக்கட்டும் இந்த சமுதாயம்.
மிகவும் ரசித்தேன் மா. வாழ்த்துகளும் நன்றிகளும்.

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி நெல்லைத்தமிழன்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கோமதி அரசு!

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ரேவதி நரசிம்மன்!

ராமலக்ஷ்மி said...

அருமையான நிகழ்வு. நம் பாரம்பரியத்தை இப்போதைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் இதுபோன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நல்ல வரவேற்பைப் பெற்று நடைபெறுவதாக செய்திகளில் பார்க்கிறேன்.