Tuesday, 16 January 2018

பறவைகள் பலவிதம்!!!

சென்ற வருடம் மலேசியா சென்றிருந்த போது அதன் தலைநகரான‌  கோலாலம்பூரில் பறவைகள் பூங்காவிற்கு சென்றிருந்தோம்.நகருக்குள்ளேயே சுமார் 21 ஏக்கரில் அமைந்திருக்கும் இந்தப்பூங்கா 1991ல் உருவாக்கப்பட்டது.  உலகிலேயே சுதந்திரமாக நடமாடும் பறவைகள் பூங்காவான இதில்  ஒன்றிரண்டு பறவை இனங்க‌களை மட்டுமே கூண்டில் வைத்திருக்கிறார்கள்.

நாங்கள் சென்றிருந்தபோது மழை நசநசவென்று தூறிக்கொண்டிருந்தாலும் உள்ளே அதனால் பெரிய தாக்கமில்லை. பெரிய பெரிய மரங்கள் குடைகளை விரிக்கின்றன. எங்கு பார்த்தாலும் பறவைகள் நம் கூடவே நடந்து வருகின்றன. சுதந்திரமாக நம்மைச் சுற்றிப்பறக்கின்றன. கீழே இறங்கினால் ஒரு நீர்த்தேக்கம். மறுபடியும் மேலே ஏறினால் ஒரு கூண்டில் குட்டி குட்டி பறவைகள்.  மறுபடியும் கீழே இறங்கினால் ஒரு குட்டிக்காடு. அதையொட்டி நடனமிடும் மயில்கள், மறுபடியும் மேலே ஏறினால் வளைந்து செல்லும் சின்னச் சின்ன பாதைகள் நெடுகிலும் பறவைகள். கால்கள் அப்படியே அசந்து போனாலும் அது ஒரு ரம்மியமான அனுபவம்! உங்களின் பார்வைக்கு சில பறவைகள்...




























21 comments:

ஸ்ரீராம். said...

பொம்மையோ என்று நினைக்க வைக்கிறது ஒன்பதாவது படத்திலுள்ள பறவை.

KILLERGEE Devakottai said...

பறவைகளின் படங்கள் அனைத்தும் அழகு

priyasaki said...

அழகான படங்கள் அக்கா.

பிலஹரி:) ) அதிரா said...

மிக அருமை.. எவ்வளவு நீட்டாக இருக்கிறது.

கரந்தை ஜெயக்குமார் said...

படங்கள் அனைத்தும் அழகோ அழகு
மகிழ்ந்தேன் சகோதரியாரே

துரை செல்வராஜூ said...

பசுமையுடன் திகழும் அழகான படங்கள்..

அதே சமயம் -
இப்படியெல்லாம் நம் ஊரில் அமைக்கவில்லையே என்று பெருமூச்சும் வருகின்றது..

ராமலக்ஷ்மி said...

இது போன்ற பூங்காக்களில்தான் பறவைகளில் அருகிலிருந்து ரசிக்கவும் படம் எடுக்கவும் முடியும். சிங்கப்பூர் ஜூராங மற்றும் மைசூர் காரஞ்சி பறவைப் பூங்காக்களில் பறவைகளைப் படமாக்கிய அனுபவம் நினைவுக்கு வந்தன.

அருமையான பகிர்வு.

இளமதி said...

வணக்கம் அக்கா!

பறவகைளைப் பார்க்கப் பரவசம்! நானும்
சிறகடித்தேன் கற்பனையில் சேர்ந்து!

படத்தில்பார்க்கையிலேயே அழகிய காட்சிகள்!
நேரில் காணும்போது நிலையினைச் சொல்லவேண்டாம்!

அழகுகள் ஆயிரம்!
பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் அக்கா!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல பொம்மை மாதிரி தான் இருக்கிறது அந்த சிகப்புப்பறவை! நன்றி ச்கோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி பிரியசகி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி அதிரா!

மனோ சாமிநாதன் said...

பறவைகளின் அழகை பாராட்டி வியந்ததற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

உங்கள் ஆதங்கம் உண்மை தான் சகோதரர் துரை.செல்வராஜ்! இங்கும் வேறு எந்த வெளி நாட்டிற்குச் சென்றாலும் நம் இந்திய நாட்டில் இப்படியெல்லாம் இல்லையே என்று தான் அவ்வப்போது தோன்றும்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி! சிங்கப்பூர் ஜுராங் பார்க்கில் பறவைகளின் வண்ணங்கள் பிரமிப்பைத்தந்தன. இங்கேயே கூடவே நடந்து வந்த பறவைகள் நிறைய ஆச்சரியங்களை அளித்தன!

மனோ சாமிநாதன் said...

இனிய, விரிவான கருத்துரைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி இளமதி!

பூ விழி said...

படங்கள் அனைத்தும் அழகு வாழை இலைகள் போல் இருக்கிறதே அதன் மேல் நடுவே சிகப்பு மஞ்சள் கலந்து இருப்பது என்ன சகோ

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ரசனைக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

மனோ சாமிநாதன் said...

அது ஒரு பூ பூவிழி! அதன் பெயரைப்பற்றி விசாரித்தேன் அங்கிருந்த பணியாள்ரிடம். அவருக்குத் தெரியவில்லை.

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!!

Thulasidharan V Thillaiakathu said...

அத்தனையும் அழகோ அழகு! எவ்வளவு அழகு ஒவ்வொரு பறவையும்!! வாவ் அந்த சிவப்பு நிறம் மனதைக் கொள்ளை கொள்ளுகிறது. படங்கள் அத்தனையும் அழகு! தோகை விரித்தாடும் மயில்!! பாடலும் நினைவுக்கு வருது. தோகை இளமயில் என்ற பாடல்...

எல்லாப் பறவைகளும் அருமை..வார்த்தைகள் இல்லை சொல்லிட சகோ/மனோ அக்கா