Monday, 16 January 2017

முத்துக்குவியல்-44!!!

மருத்துவ முத்து:

தேள் கடிக்கு உடனடி மருத்துவம்: 


கொட்டிய‌ இடத்திற்கு சற்று மேலாக முதலில் ஒரு கயிறால் கட்டு போட வேண்டும். பின் ஒன்பது மிளகுகளை ஒரு வெற்றிலையில் வைத்து மடித்து அதை நன்றாக மென்று விழுங்கச்செய்ய வேண்டும். பின் கால் தம்ளர் தண்ணீர் குடிக்கச் செய்து, அதன்பின் முற்றிய தேங்காய் ஒன்றை எடுத்து அதில் அரை மூடி அளவிற்கு கீற்று போட்டு அவற்றை மெதுமெதுவாகத் தின்று சக்கையை துப்ப செய்ய வேண்டும். அரை மூடி தேங்காய்த்துண்டுகளை கடித்து தின்பதற்குள் தேள் கொட்டிய கடுப்பும் விஷமும் படிப்படியாக தணியும். ஒன்றரை மணி நேரத்தில் வலியே இல்லாமல் போய் விடும். இது தவிர வேறு எந்த மருந்து கொடுத்தாலும் வலி 24 மணி நேரம் இருக்கும்.

ரசித்த பழம்பாடல்: [ விவேக சிந்தாமணியிலிருந்து]

ஆபத்துக்கு உதவா பிள்ளை
அரும்பசிக்கு உதவா அன்னம்
தாபத்தை தீராத்தண்ணீர்
தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன்
குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம்
பயனில்லை ஏழும் தானே!

ரசித்த முத்து?

'பைரவா' உலகெங்கும் 12ந்தேதி திரையிடப்படிருந்தாலும் 11ந்தேதியே WORLD PREMIER SHOW -ஆக துபாயில் முதல் ஷோவாக பார்க்க நேர்ந்தது. விஜய் படம் என்பதால் வாசலிலேயே மேள தாளங்கள், செண்டி மேளம் எல்லாம் இசைத்து வரவேற்றார்கள். ஒரு பெரிய கேக் வெட்டி கொண்டாடி, ' இது தான் உலகிலேயே முதல் ஷோ. அதனால் யாரும் வீடியோ அல்லது புகைப்படம் பிடிக்க வேண்டாம். அதை மீறுபவர்களின் காமிரா, மொபைல் ஃபோன் பறிமுதல் செய்யப்படும் என்ற அறிவிப்புடன் படம் ஆரம்பிக்கப்பட்டது.



வழக்கம்போல மசாலா படம் தான் என்றாலும் வித்தியாசமான கதைக்களன் அதுவும் இன்று தனியார் கல்லூரிகள் செய்யும் அக்கிரமங்களை புட்டு புட்டு வைக்கிறது. பொது மக்களைத் துன்புறுத்தி கொள்ளையடித்து பெரிய ஆளாகி, முதவருடன் புகைப்படம் பிடித்துக்கொண்டு வெளியில் புகழ்பெற்ற மனிதனாகவும் பின்னணியில் நிழல் மனிதனாகவும் இருக்கும் வில்லனை விஜய் ஒழித்துக்கட்டும் கதை. அதை விஜய் எப்போதும் போல அடிதடி, காதல், காமெடி, ஆவேசங்களுடன் நிகழ்த்திக்காட்டுகிறார். மிகச்சில‌ இடங்களில் மட்டும் விஜய் அருமையாக நடிக்கிறார். வசனங்கள் சில இடங்களில் மட்டும் மின்னுகிறது. மற்ற எல்லா நேரமும் விஜய் சண்டை போடுகிறார். பறந்து பறந்து கடைசி வரை சண்டை போடுகிரார்.  விறுவிறுப்பாக இருக்க வேண்டிய சமயங்களில் நமக்கு அலுப்பு தட்டுகிற‌து.




 சந்தோஷ் நாராயணனின் இசை ஒரே இரைச்சல்! இப்போது எல்லாம் மென்மையான பாடல்களே வருவதில்லை. ஆகவே அருமையான இசையை இந்தப்படத்தில் தேட வேண்டிய அவசியமில்லை! ஒரே ஆச்சரியம், இந்த படத்தில் கதாநாயகிக்கு நடிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. இளமையான கீர்த்தி சுரேஷ் நன்றாகவே நடிக்கிறார். மிக நீநீநீளமான சண்டைக்காட்சிகள் அலுப்பைத்தராது என்ற உறுதி இருந்தால் ஒரு முறை இந்தப்படத்தைப்பார்க்கலாம்!

ஆச்சரிய முத்து:



மக்கள் எது எதற்கெல்லாம்தான் ஆசைப்பட வேன்டும் என்ற நியதியே இல்லாமல் போய் விட்டது. தெலுங்கானாவில் மேடக் மாவட்டத்தில் உள்ள சங்கரெட்டி என்னுமிடத்திலுள்ள 220 வயதான சிறைச்சாலை தற்போது மியூசியமாக மாற்றப்பட்டிருக்கிறது. அதோடல்லாமல் சிறைச்சாலை எப்படியிருக்கும் என்பதை உணர விரும்புபவர்கள் 500 ரூபாய் கட்டி ஒரு நாள் அங்கே தங்கிக் கொள்ளலாம். கதர் சீருடை கொடுத்து, கூடவே ஒரு பாய், போர்வை, எவர்சில்வ‌ர் தட்டு, தம்ளர், குளியல் மக் , சோப்பு கொடுத்து 24 மணி நேரம் நம்மை ஜெயிலில் அடைத்து வைப்பார்கள். உணவு பக்கத்திலுள்ள‌ மாவட்ட சிறைச்சாலையிலிருந்து கொன்டு வரப்படும். சிறையை 24 மணி நேரம் கழித்து நாமே சுத்தம் செய்து கொடுத்து விட்டு நம் காஸ்ட்யூமைக்கலைத்து வீட்டுக்கு செல்லலாம்! இந்த அனுபத்திற்கு எக்கச்சக்க வரவேற்பு இருக்கிறதாம்!

18 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

தேள் கடிக்கு உடனடி மருத்துவம் சொல்லியுள்ளது மிகவும் பயனுள்ளதாகும்.

ஒரு சிவப்புப் பட்டுக் கயிறு + தினமும் ஒரு புதிய வெற்றிலை + 9 மிளகுகள் + ஒரு உடைக்கப்பட்ட முற்றலான தேங்காய் மூடி, அதைக் கீற்று போட ஒரு கத்தி முதலியவற்றைத் தயாராக நம்மிடம் எப்போதும் வைத்துக்கொண்டு, தேள் வருகிறதா எனவும் அது நம்மைக் கடிக்கிறதா எனவும் எதிர்பார்த்து காத்திருந்து இந்த மருத்துவத்தின் உண்மைத்தன்மையை உடனடியாக சோதனை செய்து பார்க்க வேண்டும் போல மிகவும் ஆசையாகத்தான் உள்ளது.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

பயனில்லாத ஏழு பற்றிய இந்தப் பழமையான பாடலை எப்போதோ பள்ளி நாட்களில் படித்த ஞாபகம் வந்தது. ரஸிக்கும் படியாகவே உள்ளது.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆச்சரிய முத்து படிக்க மிகவும் ஆச்சர்யமாகவே உள்ளது. ’மக்கள் எது எதற்கெல்லாம்தான் ஆசைப்பட வேன்டும் என்ற நியதியே இல்லாமல் போய் விட்டது’ என்று தாங்கள் சொல்லியுள்ளது மிகவும் உண்மைதான்.

பகிர்வுக்கு நன்றிகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

தேள் கடிக்கு மருந்து
பயனுள்ள தகவல்
சிறையில் ஒரு நாள் தங்குவதும்
அதற்குக் கூட்டம் சேருவதும்வியப்பைத் தருகின்றது
நன்றி சகோதரியாரே

திண்டுக்கல் தனபாலன் said...

ஆச்சரிய முத்து !!!!!

சாரதா சமையல் said...

பயனுள்ள பதிவு அக்கா.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஆச்சர்யமான செய்திகளை ரசித்தோம். நன்றி.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

உங்கள் புளொக் தேடி வந்திட்டேன் மனோ அக்கா. 44ம் முத்துக்குவியல் தேள் கடிக்கு மருந்து மிக நல்ல விஷயம்...

அந்தப் பாட்டு எனக்கும் ரொம்பப் பிடிக்கும், ஆனா அதில ஒரு வரி... தாபத்தை தீர்க்கும் தண்ணீர் எனப் போட்டிருக்கிறீங்க.. அப்படியா வரும்? எனக்கு சரி பிழை தெரியாது ஆனா நான் நினைத்தது தாகத்தை தீர்க்கும் தண்ணீர் என.. எதுக்கும் ஒரு தடவை சரி பாருங்கோ.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

இது எப்போ தொடக்கம் சினிமா விமர்சனம் எல்லாம் எழுதத் தொடங்கிட்டீங்க?.. ஹா ஹா ஹா நாங்களும் படம் பார்த்தோம்... சண்டைக் காட்சிகள் அதிகமாகிவிட்டதாக ஒரு பீலிங், விஜயின் வழமையான கொமெடிகள் குறைந்து கொண்டே வருகிறது.

வெங்கட் நாகராஜ் said...

பயனுள்ள குறிப்புகள்....

நன்றி.

மனோ சாமிநாதன் said...


விரிவான, இனிமையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

இனிமையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி சகோத்ரர் சகோதரர் ஜெயகுமார்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி சாரதா!

மனோ சாமிநாதன் said...

பதிவை ரசித்து எழுதியதற்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

உங்கள் வருகையும் அருமையான பின்னூட்ட்மும் மிகவும் மகிழ்ச்சியைத்தந்தது அதிரா!

'தாபத்தைத்தீரா தண்ணீர்' என்று தான் என் குறிப்பில் எழுதி வைத்திருந்தேன். நீங்கள் எழுதியிருந்ததைப்பார்த்ததும் வேறு ஒரு பக்கம் போய் சரி பார்த்தேன். நான் எழுதியிருப்பது சரி தான். கீழ்க்கண்ட் சுட்டியைப்பார்க்கவும்.

http://www.yarl.com/forum3/topic/13937-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/?page=2

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி வெங்கட்!

Angel said...

தேள் கடி மருந்து .நல்ல தகவல்நம்மூருக்கு ..இங்கே uk vil பயன்படாது :)
நான் பள்ளியில் படிக்கும்போது ஒரு நாள் நள்ளிரவு கரண்ட் போன நேரம் தேள் கொட்டிடுச்சி ..இருட்டில் வெளியே செல்லவும் முடியாத நிலை .உடனே வீட்டு தொட்டியில் இருந்த சிரியா நங்கை இலைகளை கடித்து மெல்ல சொன்னாங்க பக்கத்துக்கு வீட்டுக்காரங்க ..வலி போய் விஷமும் இறங்கி விட்டது ..

ஆச்சர்ய முத்து :) மனிதரின் ஆசை விநோதமானதுக்கா :) அரண்மனையில் ஒரு நாள் தங்கினாலும் பரவாயில்லை சிறைச்சாலையிலா ??:)
பைரவா .ம்ஹூம் நான் இன்னும் தலைவாவே பார்க்கலை ..சினிமா பார்ப்பது குறைவு அப்படி பார்த்தாலும் விடுமுறையில் மகளுடன் நல்ல மலையாள படங்கள் மட்டுமே பார்ப்பது