Friday 9 October 2015

பதிவுலகத்திருவிழாவிற்கு இனியதோர் வாழ்த்து!!
புதுக்கோட்டையில் வரும் ஞாயிறன்று நடைபெற இருக்கும் வலைப்பதிவர் திருவிழாவை நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது! வரவிருக்கும் தீபாவளிக்கு முன்னதாய் புயல் வேகத்தில் வந்து கொன்டிருக்கும் இந்த புதிய தீபாவளி, பதிவர்களின் உற்சாகம் என்னும் மத்தாப்பூக்களுடனும் செயல்திட்டங்கள் என்னும் வாண வேடிக்கைகளுடனும் பிரகாசமாக உதயமாகப்போகின்றது! பற்பல போட்டிகள், புத்த‌க வெளியீடுகள், வலைப்பதிவர் கையேடு என்று அமர்க்களப்படுத்திக்கொன்டிருக்கின்றது! தமிழறிஞர்களும் பற்பல தலைவர்களுமாய் சங்கமிக்கப்போகிறார்கள்!


வலைப்பதிவர்களின் திருவிழாவிற்கு இனிய வாழ்த்து!
பரிசுகளைப் பெறப்போகும் வல்லவர்களுக்கு புதிய வாழ்த்து!
அரங்கேறும் நூல்களுக்கு நிறைந்த வாழ்த்து!
திரைக்குப்பின் இருக்கும் கடும் உழைப்பிற்கும் முயற்சிக்கும் உற்சாகத்திற்கும் மூலகாரணங்களாய் மின்னும் நட்சத்திரங்களுக்கு
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!
 

26 comments:

KILLERGEE Devakottai said...

தங்களின் பங்களிப்புக்கு நன்றி சகோ....

இளமதி said...

உண்மைதான் அக்கா!
இதற்கான அவர்களின் அயராத முயற்சியும் செயற்பாடுகளும்
என்றென்றும் மனதிற் கொள்ளவேண்டிய ஒன்று!

அனைவருக்கும் உளமார்ந்த பாராட்டுக்களுடன்
விழா சிறப்புற நடைபெறவேண்டி நானும் வாழ்த்துகிறேன்!

பகிர்விற்கு நன்றியுடன் உங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா!

Yaathoramani.blogspot.com said...

வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி

வெங்கட் நாகராஜ் said...

எனது வாழ்த்துகளும்......

ஸ்ரீராம். said...

விழா சிறக்க எங்கள் வாழ்த்துகளும்.

yesterday.and.you said...

வாழ்த்துக்களுடன் நம் தலைவர் முத்துநிலவன் உழைப்பையும் சொல்லவேண்டும், உலகத்திற்கு தெரியவேண்டும் என்று இந்த பின்னூட்டம். இதை, இந்த முத்து நிலவன் புகழை, உலகம் போற்றும் புகழை, நீங்கள் இங்கு அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

முத்துநிலவன் மற்றும் அவர் குழுவிற்கு என் அநேக நமஸ்காரங்கள்! இப் படை வெற்றி அடையாவிடின் எப்படை வெற்றி கொள்ளும். இனி, அடுத்த பதிவர் விழாவிற்கு புதுக்கோட்டை சந்திப்பை தான் எல்லோரும் உதாரணமாக கொள்வார்கள்------கொள்ளவேன்டும்!

புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு ஒரு Bench Mark--என்று எடுத்துக் கொள்ளவேண்டும். இது மாதிரி இனிமேல் இப்படி ஒரு விழாவை, முத்துநிலவன் குழுக்கள், மாதிரி மற்றவர்கள் நடத்துவது கடினம் என்று சொல்வதைவிட---Impossible---என்று சொல்லலாம்.

முத்துநிலவன் குழு உழைப்ப்பு வாழ்க!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இவை போன்ற வாழ்த்துக்கள் குழுவினருக்கு மென்மேலும் உத்வேகத்தைத் தரும். பகிர்வுக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

விழா சிறக்க வாழ்த்துவோம் அம்மா...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அம்மா
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சாரதா சமையல் said...

அக்கா விழா சிறக்க எல்லோரும் வாழ்த்துவோம் !

S.P.SENTHIL KUMAR said...

உண்மையில் அசராத உழைப்புதான், என்னுடைய வாழ்த்துக்களும் தான்!

Iniya said...

அவர்கள் எண்ணங்களும் செயல்களும் அளப்பரியது. ரொம்ப பிரமிக்க தக்க வகையில் அனைத்தும் சிறப்பே.நன்றி! விழா சிறக்க என் வாழ்த்துக்கள்...!

கீதமஞ்சரி said...

உண்மையில் பிரமிப்புதான்... அடுத்துவரும் பதிவர் சந்திப்புகளுக்கு நல்லதொரு அளவுகோலாய்.. சிறப்பானதொரு முன்மாதிரியாய் அமைந்திருக்கும் அமையவிருக்கும் புதுகை பதிவர் சந்திப்புத் திருவிழா சிறப்புற நடைபெற இனிய வாழ்த்துகள். பின்னிருக்கும் உழைப்புக்கும் சிறப்பான திட்டமிடலுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

எண்னங்களைப்பகிர்ந்து கொண்டதற்கும் வாழ்த்தியதற்கும் அன்பு நன்றி இளமதி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு அன்பு நன்றி சகோதரர் ரமணி!வருகைக்கு அன்பு நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் வாழ்த்துக்கள் அளித்ததற்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் கூறியது எல்லாமே சரிதான் அன்பே தமிழ்! நான் திரு.முத்து நிலவன் சாரிடம் பாராட்டிப்பேசிய போது என்னோடு சேர்ந்து ஒரு பெரிய கூட்டமே இங்கு வேலைகளை செய்து கொன்டிருக்கிறோம் என்றார்! அவருக்கும் அவருடன் தோளோடு தோளாக நின்று உழைத்த அவரின் குழுவினருக்கும் அன்பார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும்!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் சிறப்பான கருத்துரைக்கும் அன்பு நன்றி குமார்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் சிறப்பான கருத்துரைக்கும் அன்பு நன்றி சாரதா!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி செந்தில்குமார்!

மனோ சாமிநாதன் said...

உங்களின் வாழ்த்துக்களும் சேர்ந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி இனியா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்களும் வாழ்த்துக்களூம் சேர்ந்து வழங்கிய இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி கீதமஞ்சரி!

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...

நன்றி அம்மா

அன்புடன் திண்டுக்கல் தனபாலன்