Sunday 18 January 2015

வலைச்சரத்தில் நான்!

இன்று முதல் வலைச்சர ஆசிரியையாய் பணியேற்கவிருக்கிறேன்.

இந்தப் பணி சாதாரணமானதல்ல. நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்த வேண்டி கூடுதல் உழைப்பிற்குத் தயாராக இருக்க வேண்டும். சுவாரசியமாக  எழுதவும் வாசகர்களை ஈர்க்கவும் ரசிக்க வைக்கவும் அருமையான விஷயங்களைத் தேடிப்பிடிக்க வேண்டும். இதில் பெண்களுக்கு வீட்டுப்பொறுப்புகள் கூடுதலாக இருப்பதால் கூடுதல் சுமைகளைத்தாண்டி கணினி பக்கம் வர வேன்டும். இப்போது கூட ஒரு நிச்சயதார்த்தத்திற்குச் சென்று இரவு 10 மணிக்குத் திரும்பி, 12 மணிக்கு இந்தப்பதிவை எழுதிக்கொன்டிருக்கிறேன்!

இவற்றையெல்லாம் தாண்டி ஒரு வாரம் வலைச்சரத்திற்காக ஒரு வாரம் நம்மை அர்ப்பணித்துக்கொள்வது சுகமாக இருக்கிறது.

என்னை மூன்றாம் முறையாக வலைச்சர ஆசிரியராக பணியேற்க அழைத்த சகோதரர் சீனா அய்யா அவர்களுக்கு என் மனங்கனிந்த நன்றியை இங்கே என் வலைத்தளத்தில் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

வழக்கம்போல் என் அன்புத்தோழமைகள் யாவரும் வலைச்சரம் வந்து என்னை உற்சாகப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்!

தினமும் நாம்  வலைச்சரத்தில் சந்திப்போம்!!!


 

23 comments:

UmayalGayathri said...

வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்கள்.

வலைச்சரத்தில் சந்திப்போம்

வை.கோபாலகிருஷ்ணன் said...

வலைச்சர ஆசிரியர் பணியில் ஹாட்-ட்ரிக் அடிக்க இருக்கும் தங்களுக்குப் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

WELCOME ! வருக .. வருக .. வருக !!!

அன்புடன் VGK

துளசி கோபால் said...

நல்வரவு.

எம்.ஞானசேகரன் said...

வாழ்த்துக்கள் சகோதரி.

இளமதி said...

வணக்கம் மனோ அக்கா!

முத்துச் சிதற முகிழ்க்கும் வலைச்சரம்
புத்தொளி வீசும் புலர்ந்து!

மிக்க மகிழ்ச்சி!
வலைச்சரத்தில் முத்துச் சிதறல்களின் அழகு மின்னிட உளமார வாழ்த்துகிறேன்!

yathavan64@gmail.com said...

வலைச் சரத்தின் வாசலிலே
வண்ணமிகு கோலமிட்டு
எண்ணமிகு கருத்துக்களை
கரும்பாக தருவீரே!
அரும்பூவை சூடி வந்து தரும் பதிவுகள்
சிறக்கட்டும்.
நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr

திண்டுக்கல் தனபாலன் said...

இதோ செல்கிறேன்... மீண்டும் அசத்த வாழ்த்துக்கள்...

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள்.
அங்கு சந்திக்கிறேன்.

Asiya Omar said...

நல்வாழ்த்துக்கள் அன்பின் அக்கா.தொடர்கிறேன்.

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் அம்மா...

priyasaki said...

வாழ்த்துக்கள் மனோ அக்கா.

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் சகோதரியாரே

Yarlpavanan said...

நல்வாழ்த்துக்கள்

Manimaran said...

ஒருவார ஆசிரியப்பணியை மிகச்சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள் மேடம்.

saamaaniyan said...

அம்மா,

தங்களின் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அதுவும் மூன்றாவது முறைக்கு மரியாதை வணக்கங்கள்.

உங்கள் பணி நிச்சயம் சிறக்கும்.

எனது புதிய பதிவு : மதமாற்றம் மனமாற்றமாகுமா ?
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post_21.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.

நன்றி
சாமானியன்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரத்தில் தங்களது பதிவுகளைத் தொடர்ந்து படித்து இசை, ராகம் தொடர்பான கூடுதுல் செய்திகளை அறிந்தேன். எனது வலைப்பூவினை அறிமுகப்படுத்தியமைக்கு என் நன்றி.

துரை செல்வராஜூ said...

இரவு வேலையை முடித்து விட்டு - (இங்கே குவைத்தில் காலை 6.10)

இசையெனும் இன்ப வெள்ளத்தில் நீந்துதற்கு ஓடோடி வந்த எனக்கு இன்ப அதிர்ச்சி!..

தெய்வீக ராகமான ஷண்முகப் பிரியாவின் மகத்துவத்துடன் - தஞ்சையம்பதியின் அறிமுகம்!..

அடிப்படையில் - ஷண்முக ப்ரியன் நான்!.. என்னே விநோதம்!..

எப்படி இது அமைந்தது!.. இசை.. இசை.. அதனால் அமைந்தது!..

இசையால் வசமாகா இதயம் எது..
இறைவனே இசை வடிவம் எனும் போது!..

எம்மையும் உற்று நோக்கி அறிமுகம் செய்வித்த தங்களுக்கு அன்பின் வணக்கமும் நன்றியும்!..

வாழ்க நலம்!..

துரை செல்வராஜூ said...

அன்புடையீர்..
என்னையும் தங்கள் இல்லத்திற்கு - மகிழ்வுடன் அழைத்தமைக்கு மகிழ்ச்சி. நன்றி..

ஆறுமுகம் அய்யாசாமி said...

வலைச்சர ஆசிரியராக உங்கள் பணி மிகச்சிறப்பானதாக இருந்தது மேடம். பதிவர்கள் அறிமுகத்துக்கு முன்னதாக ராகங்கள் குறித்து முன்னுரை எழுதியது, உங்கள் ரசனையை வெளிப்படுத்தியது. ராகங்களையும், அதற்கு உதாரண பாடல்களையும் கூறி, இசை ஞானம் இல்லாத எனக்கே, இசை மீது ஆர்வம் ஏற்படுத்தி விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி!

துரை செல்வராஜூ said...

வாழ்க நலம்!..
அன்பின் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!..

Anonymous said...

வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு வாழ்த்து.
Vetha.Langathilakam

மனோ சாமிநாதன் said...

சென்ற வாரம் வலைச்சர ஆசிரியராகப் பணியேற்றபோது தொடர்ந்து வந்து அங்கும் இங்கும் எனக்கு உற்சாகமளித்ததற்காக வலையுலக அன்புள்ள‌ங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!