Thursday 15 January 2015

பொங்கலோ பொங்கல்!!

பொங்கல் பற்றிய சில வித்தியாசமான செய்திகள்:

பொங்கல்:

கர்நாடகாவிலுள்ள சிக்மகளூர் அருகே அமைந்துள்லது தர்மசாஸ்தா திருத்தலம். அதன் அருகே அமைந்துள்ளது அண்ணப்ப சுவாமி கோவில். வருடம் ஒரு முறை பொங்கலன்று மட்டுமே இந்தக் கோவில் திறக்கப்படுகிறது. அன்று மட்டுமே வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இங்குள்ள 140 படிகளில் ஏறிச்சென்று வழிபாடு நடத்த ஆண்களுக்கு மட்டுமே அனுமதி. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அனுமதியில்லை.

பெங்களூரிலுள்ள ராமகிருஷ்ண மடம் அருகே உள்ளது கவி கங்காதேஸ்வரர் கோவில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கலன்று சூர்யப்பாதையில் மாற்றம் ஏற்படும் நேரமான மாலை 5.45 முதல் 6 மணி வரை ஒரு விந்தையான நிகழ்வு ஏற்படுகிறது. அந்த நேரம் குகைக்கோவிலுள்ளே மூலவரின் மீது சூரிய ஒளி விழுகிறது. அடுத்து சிவ லிங்கத்தின் மீது முழுவதுமாகப் பரவி  பின் மறைகிறது. பொங்கல் நாளில் சூரிய பூஜை காணும் இந்த விக்ரகத்தை வணங்கினால் கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது மக்கள் நம்பிக்கை!

மாட்டுப்பொங்கல்:

அன்று அதிகாலை திருவண்ணாமலையில்  அண்ணாமலையாரும் உண்ணாமுலை அம்மனும் மூன்று முறை வீதி உலா வருவார்கள். அன்று மாலை ராஜ வீதியிலுள்ள‌ திருவூடல் வீதிக்கு எதிர் எதிராக இருவரும் நிற்பார்கள். பின் அண்ணாமலையார் அம்மனை நோக்கி வர, அம்மன் சுவாமியைக் கடந்து செல்வார். கோயில் கருவறை சென்று அடைந்து கொள்ள, இறைவன் வந்து சமாதானம் செய்வார். இதற்கு 'திருவூடல்' என்று பெயர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அவர்கள் வாக்கை சிறந்து விளங்கும் என்பது ஐதீகம்!!

பொங்கல் நினைவுகள்:

பல வருடங்களுக்குப்பின்பு பொங்கலுக்கு தமிழ்நாட்டில் இருக்கிறேன். இளம் வயதில் பெற்றோருடன் பொங்கல்! அப்போதெல்லாம் பொங்கல் வாழ்த்துக்களை தபால்காரரிடமிருந்து வாங்குவதற்கு எனக்கும் என் இளைய சகோதரிக்கும் தனிப்போட்டியே நடக்கும்.

புகுந்த வீடு கிராமத்தில் என்பதால் மாமியாரும் கொழுந்தனார்களும் சேர்ந்து பொங்கல் கொண்டாடியதும் மாட்டுப்பொங்கலை பெரிய விசேஷமாகக் கொண்டாடியதும் கன்னிப்பொங்கலன்று வீட்டுப் பெண்கள், நண்டு சிண்டுகளுடன் மாலையில் கட்டு சாதங்களுடன் ஆற்ற‌ங்கரைக்குச் சென்று  ரசித்து சிரித்து, சாப்பிட்டு வந்ததும் இன்னும் பசுமையாக, இனிமையாக மனதில் நிறைந்திருக்கிறது!

அப்புறம் வெளிநாட்டில், பாலைவன நாட்டில் பொங்கல்! மனைவி, மக்களைப்பிரிந்து தனிமையில் வாடிக்கொண்டிருக்கும் நண்பர்களையெல்லாம் அழைத்து பொங்கல் விருந்து அளிப்பது வாடிக்கையானது. எல்லோருமே பொங்கலன்று அலுவலகம் செல்வார்கள் என்பதால் விடியற்காலை நான்கு மணிக்குக் குளித்து பொங்கல் செய்ய ஆரம்பித்தால் காலை ஏழு மணிக்குள் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், பொங்கல் குழம்பு, ஆவி பறக்க இட்லி, சட்னி என்று தயாராகி விடும். ஏழு மணியிலிருந்து நண்பர்கள் சாப்பிட வருவார்கள். இப்படி பல வருடங்கள்! நண்பர்கள் எல்லாம் மறுபடி தமிழ்நாட்டிற்கு திரும்பிய பிறகு, இளைய தலைமுறைகள் அதிகம் பழக்கமில்லாமல் இந்தப் பழக்கமும் மெல்ல மெல்லக் குறைந்தது.

தற்போதைக்கு புதிய இல்லப் பணிகளுக்காக தஞ்சையில் ஒரு சில மாதங்கள் தங்க இருப்பதால் பல வருடங்களுக்குப்பிறகு தஞ்சையில் குடும்ப நண்பர்களுடன் பொங்கலைக் கொண்டாடுகிறோம்!

நீங்களும் தைப்பொங்கலை மனதிற்கு இனியவர்களுடன் மகிழ்வுடன் கொண்டாடுங்கள்!! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
பொங்கல் வாழ்த்து நன்றி கூகிளுக்கு!
 

32 comments:

ஆறுமுகம் அய்யாசாமி said...

தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Unknown said...

பதிவைப் படித்து பல செய்திகளை
அறிந்தேன்!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

தி.தமிழ் இளங்கோ said...

காலம் மாறுது. கருத்தும் மாறுது. பொங்கலும் மாறி விட்டது. சகோதரி அவர்களுக்கு எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

தஞ்சையில் பொங்கல்..... மகிழ்ச்சி.

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu said...

மிகவும் அருமையான பதிவு. நண்பர்களுடன் விருந்து படைத்து கொண்டாட்டம் என்பது எத்தனை மகிழ்வான நிகழ்வு! ம்ம்ம்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

Thulasidharan V Thillaiakathu said...

சகோதரி! நீங்கள் இண்டஸ் லேடீசில் உறுப்பினர் தானே. அங்கு சமையல் குறிப்புகள்னிறைய எழுதுவீர்கள்தானே..அந்த மனோ நீங்கள் தானோ என்று எனக்கு ஒரு சிறு சந்தேகம்...உங்களுக்கு ஒரு மகன் அவரும் நன்றாகச் சமைப்பார் சரியா? பங்களூரில்.....

உங்களுக்கு நினைவு இருக்கிறதா ஒரு 4,5 வருடங்களுக்கு முன் கீத் என்ற பெயரில் (குரங்கு ப்ரொஃபைல் ஃபோட்டொ.....உங்கள் ஃப்ரொஃபைல் ஃபோட்டோ ரோஜா அனிமேட்டட்....சரியா) இருந்தேன் பின்னர் இப்போது இல்லை அதில். தற்போது நண்பர் துளசியுடன் எங்கள் வலைத்தளத்தில் எழுதுகின்றேன் - கீதா

unmaiyanavan said...


தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அப்போதெல்லாம் பொங்கல் வாழ்த்துக்களை தபால்காரரிடமிருந்து வாங்குவதற்கு எனக்கும் என் இளைய சகோதரிக்கும் தனிப்போட்டியே நடக்கும்.//

அவை மிகவும் இனிமையான மறக்க முடியாத மகிழ்ச்சியான நாட்கள்.

தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

தினேஷ்குமார் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கல் நல் வாழ்த்துகள் அம்மா ...

yathavan64@gmail.com said...

அன்புடையீர்!
வணக்கம்!
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

நட்புடன்/நன்றியுடன்,
புதுவை வேலு

KILLERGEE Devakottai said...


இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

எனது பதிவு Germany Part - 2 காண்க....

மனோ சாமிநாதன் said...

பொங்கல் வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

இனிய பொங்கல் வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதர் ஆறுமுகம் அய்யாசாமி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் பொங்கல் வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி சகோதரர் புலவர் ராமானுஜம்!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி யாழ்ப்பாவாணன்!

மனோ சாமிநாதன் said...

உணமைதான். இளம் வயது பொங்கல் கொண்டாட்டங்கள் இனி வருமா என்று தெரியவில்லை. பொங்கல் வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கும் பொங்கல் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் துளசிதரன்!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள‌ கீதா!

நீங்கள் சொல்வது உண்மைதான்! ஆறு வருடங்களுக்கு முன் சில குறிப்புகள் INDUS LADIESல் மனோ என்ற பெயரில் எழுதினது இப்போது நினைவில் எழுகிறது. பின் அறுசுவை என்ற தளத்தில் எழுத ஆரம்பித்ததாலும் அடிக்கடி தஞ்சைக்கும் துபாய்க்கும் பயணங்கள் அமைய ஆரம்பித்ததாலும் தொடர்ந்து அங்கு எழுத முடியவில்லை. ஆனாலும் ரொம்ப நாட்கள் என் பெயர் அங்கு இருந்தது.
புரொஃபைல் ஃபோட்டோ மட்டும் என்னுடையது நினைவில் இல்லை. இனி அடிக்கடி உங்கள் வலைத்தளம் வருகிறேன்.

மனோ சாமிநாதன் said...

இனிய பொங்கல் வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சொக்கன் சும்ரமண்யம்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

இனிய வாழ்த்துக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தினேஷ்குமார்!

மனோ சாமிநாதன் said...

பொங்கல் வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி புதுவை வேலு!

மனோ சாமிநாதன் said...

இனிய பொங்கல் வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி கில்லர்ஜி!

”தளிர் சுரேஷ்” said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

கங்காதேஸ்வரர் கோவிலில் பொங்கல் அன்று இந்நிகழ்வைக் காண மக்கள் பெருமளவில் கூடுகிறார்கள். ஒருமுறை இக்கோவில் சென்றுவர எண்ணியுள்ளேன்.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!Angel said...

ஸ்வீட் பொங்கல் வாழ்த்துக்கள் மனோ அக்கா ...பண்டிகை கால நினைவுகள் அருமை .

priyasaki said...

ஆஆ மனோக்கா எனக்கு இப்பதிவு டாஷ்போர்ட்டில் வரவில்லை. எதேச்சையாக எட்டிப்பார்த்தேன். மன்னிக்க.
உங்களுக்கும்,குடும்பத்தவர்களும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
பொங்கல் தகவல்கள் அருமை. இனிய நாட்கள் நினைவுகள் மட்டுமே.
நன்றி மனோக்கா.

நிலாமகள் said...

விசேஷ செய்திகள் வியப்பளிப்பதாய் . நன்றி சகோ. நெடுநாளைக்கு அப்புறம் சொந்த ஊரில் கொண்டாடிய பொங்கலின் இனிமையும் நெகிழ்வும் மிகுதியாகவே உணர்ந்திருப்பீர்கள்!

Yaathoramani.blogspot.com said...

சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
தொடங்கியுள்ள இல்லப் பணி சிறப்பாக
நிறைவுற மனமார்ந்த நல்வாழ்த்துகள்

இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

கீதமஞ்சரி said...

அழகான நினைவுகளும் தகவல்களும். இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் மேடம்.

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

இளமதி said...

அருமையான நினைவுகளுடன் நல்ல பகிர்வு!

இனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள் அக்கா!