Wednesday 30 October 2013

ரவா வாழைப்பழ கேசரி!!

தீபாவளி பல வித இனிப்பு வகைகளுடன், நெய் வாசத்துடன் நெருங்கிக்கொன்டிருக்கிறது. பல வருடங்களாயிற்று தீபாவளியின் போது தமிழகத்தில் இருந்து! இந்த வருடம் தான் ய‌தேச்சையாக அது சாத்தியமாகியிருக்கிறது. வீதியெங்கும் வெடிகளும் மத்தாப்பூ வகைகளும் கடைகளில் நிரம்பி வழிகிறது. முறுக்கு மாவு அரைப்பதும் அதிரசத்துக்கும் பயத்தம்பருப்பு லட்டுவிற்கும் மாவரைக்க, பெண்கள் பல வேலைகளுக்கிடையே மெஷினில் அரைத்து வருகிறார்கள். கடைத்தெரு செல்லவே முடியாதபடி,தஞ்சையின் முக்கிய வீதிகளிலுள்ள துணிக்கடைகடைகளில் அத்தனை கூட்டம், அடாத மழையிலும் கூட! வார இதழ்களும் மாத இதழ்களும் சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்களையும் விள‌ம்பரங்களையும் நிரப்பி அதிக விலைக்கு விற்க ஆரம்பித்து விட்டன! தீபாவளியின் அத்தனை அமர்க்களங்களையும் ரசிக்க ஆரம்பித்து விட்டேன். 

சரி, ஒரு இனிப்பைத்தந்து தீபாவளியை வரவேற்கலாமென்று நினைத்து இந்த வாழைப்பழ கேசரியைப்  பற்றி எழுத ஆரம்பிக்கிறேன்.  

பொதுவாய் கேசரி எல்லோரும் அறிந்த இனிப்பு தான். ஆனால் இந்த கேசரி செய்யும் முறை சற்றே வித்தியாசமானது. அதுவும் அதில் வாழைப்பழ துண்டுகள் சேர்க்கும்போது அலாதியான ருசி வந்து விடும். என்ன வாழைப்பழம் என்பதைப்பொறுத்து ருசியின் தன்மை வித்தியாசப்படும். ரஸ்தாளி நல்ல ருசி கொடுக்கும். முயன்று பாருங்கள்!


 
ரவா வாழைப்பழ கேசரி
தேவையான பொருள்கள்: 
வாழைப்பழம்- 2 [ கனிந்தது]
நெய்- 1 கப்
முந்திரிப்பருப்பு- 1 மேசைக்கரண்டி
திராட்சை   -   1 மேசைக்கரண்டி
ரவா            -  1 கப்
காய்ச்சி ஆறவைத்த பால்- 2 கப்
சீனி                   - 2 1/2 கப்
இலேசான சூடுள்ள நீர்- 1 கப் 

செய்முறை: 

நெய்யை மெதுவான தீயில் சூடாக்கவும்.
முதலில் முந்திரிப்பருப்பை பொன்னிறமாக வறுத்தெடுத்து வைத்துக்கொள்ள‌வும்.
அதன் பின் திராட்சையை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
பிறகு அதே நெய்யில் ரவாவை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
பிறகு அதில் பால், சீனி, நீர் சேர்த்து கெட்டியாகும் வரை சமைக்கவும்.
பிறகு வாழைப்பழங்களை மிகச் சிறிய துண்டுகளாக்கிச் சேர்க்கவும்.
மேலும் 5 நிமிடங்களுக்கு மெதுவான தீயில் திராட்சை, முந்திரிப்பருப்பைச் சேர்த்துக் கிளறவும்.

சுவையான ரவா வாழைப்பழக்கேசரி தயார்!! 

நெய் மணக்கும் இனிப்புக்களுடன்

மத்தாப்பூ, வெடிகளுடன்


              வலைச்சர அன்புள்ள‌ங்கள் இனிதே தீபாவளியைக்கொண்டாட‌
அன்பின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
 

 

 
 
 


 

29 comments:

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

செய்து பார்க்கிறேன்...நன்றி!
தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்!

கே. பி. ஜனா... said...

வாழைப்பழ கேசரியா? இந்த தீபாவளிக்கு செய்து பார்த்துவிட வேண்டியதுதான்!

நிலாமகள் said...

அட... தீபாவளி தஞ்சையிலா!!

கேசரிக்கொரு புத்தாடை!!! அழகு!

திண்டுக்கல் தனபாலன் said...

சுவையான ரவா வாழைப்பழக்கேசரி செய்முறைக்கு நன்றி....

இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு. இனிய தீபாவளி வாழ்த்துகள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

படங்களும் செய்முறைக் குறிப்புகளும் அருமை. ருசியோ ருசி.

பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

இளமதி said...

மனோ அக்கா! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்!

வாழைப்பழக் கேசரி புதுசா இருக்கு! செய்து பார்ப்போம்!
நல்ல பகிர்வு! நன்றி அக்கா!

ஹுஸைனம்மா said...

அன்னாசிப் பழத்துண்டுகள் சேர்த்துச் செய்வேன். பின்னர், டின்களில் கிடைக்கும் மிக்ஸட் ஃப்ரூட் துண்டுகள் (பல வண்ணங்களில் இருப்பவை) சேர்த்துசெ செய்வதுண்டு.

வாழைப்பழம் புதிய முறை, செய்து பார்க்கலாம். நன்றிக்கா. இனிய தீபாவளி வாழ்த்துகள்க்கா.

”தளிர் சுரேஷ்” said...

இந்த தீபாவளியை ரவா வாழைப்பழ கேசரியுடன் தித்திப்பாக்கியதற்கு நன்றி! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

தி.தமிழ் இளங்கோ said...

எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

Anonymous said...

தங்களிற்கும் தங்கள் குடும்பத்தாரிற்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
வேதா.இலங்காதிலகம்.


Tamil Bloggers said...

தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,

தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .

வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.

Asiya Omar said...

மிக அருமை.அன்பின் அக்கா ! தீபாவளி சிறப்பாக கழிந்திருக்கும்,நான் தான் லேட்டாக வந்து விட்டேன்..

Unknown said...

Kesari looks awesome.. never tried with banana. this is totally new to me.. Thanks for sharing..
Thanks for visiting my site & your lovely comment..

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி கிரேஸ்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி ஜனா!

மனோ சாமிநாதன் said...

அழகிய பின்னூட்டம் நிலா!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் இனிய நன்றி சகோதரர் தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டுக்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி

மனோ சாமிநாதன் said...

இனிய வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி இளமதி!

மனோ சாமிநாதன் said...

இனிய வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஹுஸைனம்மா!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டுக்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...


இனிய கருத்துரைக்கும் தீபாவளி வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த அன்பு நன்றி சுரேஷ்!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

மனோ சாமிநாதன் said...

தீபாவளி வாழ்த்துக்களுக்கு அன்பார்ந்த ந‌னறி சகோதரர் ஜெயக்குமார்!!

மனோ சாமிநாதன் said...

தீபாவளி வாழ்த்துக்களுக்கு அன்பார்ந்த ந‌னறி வேதா!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டுக்கும் இனிய நன்றி ஆசியா!

மனோ சாமிநாதன் said...

அன்பான இனிய பாராட்டுக்கு மனம் நிறைந்த நன்றி வித்யா!