Tuesday 22 October 2013

இல்லத்து நிவாரணிகள்!!

நம் சமையலறையில் இருக்கும் பொருள்களைக்கொண்டும் வெளியில் கிடைக்கும் சில எளிமையானப் பொருள்களைக்கொண்டும் அன்றாடம் நமக்கு ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளைத் தீர்க்க முடிகிறது. சின்னச் சின்ன சங்கடங்களை நிவர்த்தி செய்து கொள்ள முடிகின்றது. அந்த மாதிரியான சிறு சிறு வீட்டுக்குறிப்புக்கள் இதோ!1..பலகாரம் செய்யும்போது எண்ணெய் வைக்கும் வேளையில் இஞ்சி சிறிது, சிறிது வாழைப்பட்டைத்துண்டு இவற்றை நசுக்கி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்துப்போட்டு பிறகு பலகாரம் செய்தால் அதிக எண்ணெய் குடிக்காது. பலகாரத்திலும் எண்ணெய் வாசம் வராது.2.  வாழைத்தண்டின் மேல் பட்டையை நீக்கி தண்ணீர் நிறைந்த மெல்லிய பிளாஸ்டிக் பை ஒன்றில் முக்கி முடிச்சிட்டு வைத்தால் 15 நாட்களானாலும் கெடாது.3.  சீதாப்பழ விதைகளை வெய்யிலில் காய வைத்து அரிசி, பருப்பு டப்பாக்களில் போட்டால் பூச்சி, புழுக்கள் அண்டாது.

4.  மல்லியை முளைக்க வைக்க, ஒரு சமமான பலகையால் இலேசாக அழுத்தி எடுத்தால் போதும். முழுதாய்ப் போட்டால் முளைக்காது.

5.  அவசரமாக இட்லி மாவு புளிக்க மாவை ஹாட்பாக்ஸில் ஊற்றி வைக்கவும்.6.  மோர் புளிக்காதிருக்க சிறிது வெண்ணெய் உருட்டி அதில் போட்டு வைத்தால் மோர் புளிக்காது.7.  உபயோகித்த முட்டை ஒட்டை ஆங்காங்கே போட்டு வைத்தால் பல்லி வீட்டை விட்டு ஓடி விடும்.8..மழைக்காலங்களில் தீப்பெட்டிகளில் ஏழெட்டு அரிசி மணிகளைப்போட்டு வைத்தால் தீக்குச்சிகள் நமுத்துப்போகாது.

9. ஒரு கைப்பிடி பொரியை பொடித்து சேர்த்தால் ரவா உப்பும மிகவும் சுவையாக இருக்கும்.

படங்கள்: கூகிளுக்கு நன்றி!!
 

53 comments:

அம்பாளடியாள் said...

பயனுள்ள நல்ல தகவலுக்கு மிக்க நன்றி அம்மா .

மகேந்திரன் said...

அருமையான தகவல்கள் அம்மா..
பகிர்வுக்கு நன்றிகள் பல...

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் பயனுள்ள குறிப்புகள்.

பகிர்வுக்கு நன்றிகள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மனோ. சீதாப் பழ விதைகளும், முட்டை ஓடுகளும் மிகவும் உபயோகப்படும். முட்டை உப்யோகப் படுத்துவதில்லை.
பார்க்கிறேன். மிக நன்றி அம்மா.

ஸ்ரீராம். said...

உபயோகமான குறிப்புகள். மல்லியில் விதைகளைத்தானே சமமான பலகையில் அழுத்தி எடுக்க வேண்டும்? ரவா உப்புமா குறிப்பு அடுத்த முறை முயற்சித்துப் பார்க்கிறோம்! :)

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் பயனுள்ளவை... வீட்டில் குறித்து வைத்தாயிற்று... மிக்க நன்றி அம்மா...

கரந்தை ஜெயக்குமார் said...

பயனுள்ள யோசனைகள் சகோதரியாரே

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான குறிப்புகள். பயனுள்ளவையும் கூட.

aavee said...

நல்ல டிப்ஸ் தான்!!

இமா க்றிஸ் said...

1. முயற்சிக்கிறேன்.
4. இப்படித்தான் செய்கிறேன்.
7. சமிபத்தில் முகநூலில் படித்தது - நொருக்கிப் போட்டால் நத்தை செடிகளை அண்டாதாம். போட்டிருக்கிறேன் நானும்.
9. அடடா! சூப்பர். கட்டாயம் அடுத்த தடவை சேர்க்க வேண்டும்.

மிக்க நன்றி அக்கா.

Yaathoramani.blogspot.com said...

எளிய குறிப்புகளாகவும்
அனைவருக்கும் பயன்படும்
அருமையான குறிப்புகளாகவும்
பதிவு செய்துக் கொடுத்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

கவியாழி said...

கவலுக்கு நன்றி

இளமதி said...

அத்தனை தகவல்களும் அருமை!

மிகவும் பயனுள்ளவை!..

பகிர்வினுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் அக்கா!

=================
ஊருக்குப்போய் திரும்பிவிட்டீர்களோ...:)

அங்கு நமது சகோதரரைக் கண்டீர்களா..
நலமாக இருக்கின்றாரா அக்கா..:)

Anonymous said...

''..1..பலகாரம் செய்யும்போது எண்ணெய் வைக்கும் வேளையில் இஞ்சி சிறிது, சிறிது வாழைப்பட்டைத்துண்டு இவற்றை நசுக்கி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்துப்போட்டு பிறகு பலகாரம் செய்தால் அதிக எண்ணெய் குடிக்காது. பலகாரத்திலும் எண்ணெய் வாசம் வராது...''
தங்கள் விடயம் தவிர கொட்டைப் புளி, ஓi அரைத் தேக்கரண்டியளலு எமுத்து உருட்டி கொததிக்கும் எண்ணெயில் போட்டு நன்கு கருக அதை எடுத்து விசிவிட்டும் பொரிக்கும் வேலைகள்செய்யலாம் இதுவே நான் செய்வது. நன்றி.
நல்ல தகவல்கள். இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Radha rani said...

உபயோகமான குறிப்புகள் அனைத்தும் அறிந்ததில் மகிழ்ச்சி.. தகவலுக்கு மிக்க நன்றி மேடம்..:)

ADHI VENKAT said...

பயனுள்ள தகவல்கள். முதல் குறிப்பு இந்த தீபாவளிக்கு உபயோகப்படும்....:)

பகிர்வுக்கு நன்றிம்மா.

உஷா அன்பரசு said...

தெரியாத தகவல்கள்... நல்லது! நன்றி!

கோமதி அரசு said...

பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்.
நன்றி,

”தளிர் சுரேஷ்” said...

சூப்பர் டிப்ஸ்! நன்றி!

'பரிவை' சே.குமார் said...

பயனுள்ள தகவல்கள் பகிர்வு அம்மா...

ezhil said...

சீத்தாப்பழம் கொட்டை குறிப்பு உபயோகமானது

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி அம்பாளடியாள்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் மனதாரப்பாராட்டியதற்கும் இனிய நன்றி மகேந்திரன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி வல்லி சிம்ஹன்!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!
வரமல்லி/தனியாவைத்தான் முளைக்க வைக்க வேண்டும். செய்து பாருங்கள்!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு இனிய நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி ஆனந்த்!

மனோ சாமிநாதன் said...

விள‌க்கமாக பின்னூட்டம் எழுதி விட்டீர்கள் இமா! தோட்டத்து செடிகளுக்கும் முட்டை உபயோகமானதா? நல்ல குறிப்பு! மனம் நிறைந்த நன்றி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் இதயம் நிறைந்த நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி சகோதரர் கவியாழி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி இள‌மதி!
இந்த மாத இறுதியில் தான் விடுமுறைக்காக வீட்டுக்கு சகோதரர் வருவார். அப்போது தான் பேச வேண்டும். அதற்கப்புறம் தான் சந்திக்க வேண்டும்!!

மனோ சாமிநாதன் said...

கொட்டைப்புளி பற்றிய குறிப்பை நான் முன்னாலேயே தெரிந்து வைத்திருக்கிறேன். இருந்தாலும் இங்கே அதைப் பகிர்ந்து கொன்டு எல்லோருக்கும் அந்தக் குறிப்பை பயன்படுமாறு செய்ததற்கு
அன்பு நன்றி வேதா!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி ராதா!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் க‌ருத்துரைக்கும் இனிய நன்றி ஆதி!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பான நன்றி உஷா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பான நன்றி கோமதி!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி குமார்!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்குக் பாராட்டிற்கும் இதயங்கனிந்த நன்றி சுரேஷ்!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி எழில்!!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

உபயோகமான குறிப்புகள்...நன்றி!

sury siva said...

உடைந்த முட்டை சிதறிக்கிடந்தால் ஆங்காங்கே பாக்டீரியா பரவாதோ ?

ஐயம் களையவும்.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள தகவல்கள்.

கீதமஞ்சரி said...

அனைத்தும் மிகவும் உபயோகமான குறிப்புகள். நன்றி மேடம்.

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் ரூபன்!

வலைச்சரத்தில் என் வலைத்தளம் அறிமுகமாயிருப்பதை அன்புடன் எனக்கு தெரிவித்ததற்கு மனமார்ந்த நன்றி!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் தனபாலன்!
வலைச்சரத்தில் என் வலைத்தளத்தை அறிமுகம் செய்திருப்பதை அன்புடன் எனக்கு தெரிவித்ததற்கு மனங்கனிந்த‌ நன்றி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கிரேஸ்!

மனோ சாமிநாதன் said...

நல்ல கேள்வி சூரி சிவா! நிச்சயமாக முட்டை ஓட்டைக் கழுவித்தான் உபயோகிக்க வேண்டும். இல்லாவிட்டால் பாக்டீரியா பரவுகிரதோ என்னவோ, தேவையில்லாத வாசம் நிச்சயம் பரவும்.
வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பார்ந்த நன்றி கீதமஞ்சரி!