Monday 3 October 2011

நெஞ்சை அள்ளும் தஞ்சைத் தரணி!!!

இது என்னுடைய நூறாவது பதிவு!


பின் தொடர்ந்தும் அருமையான பின்னூட்டங்கள் மூலமும் எழுதுவதற்கான உத்வேகத்தையும் ஆர்வத்தையும் தொடர்ந்து அளித்து வரும் அன்புத் தோழமைகளுக்கு என் இதயங்கனிந்த எண்ணிலா நன்றிகளை சமர்ப்பித்துக் கொள்கிறேன்!*********************


சகோதரி ஸாதிகா ‘ என் ஊர் ‘ என்னும் தொடர்பதிவில் பங்கேற்குமாறு முன்பு கேட்டிருந்தார்கள். என்னுடைய நூராவது பதிவாக என் ஊரைப் பற்றி எழுதுவதில் பெருமிதமடைகிறேன்.

சோணாடு சோறுடைத்து என்று புகழ் பாடப்பட்ட சோழ நாட்டில் பல நூறு ஆண்டுகள் தலைநகராய் இருந்த தஞ்சாவூர் தான் என்னுடைய ஊர்.

பெயர்க்காரணம்:

தஞ்சன் என்னும் அசுரனை சிவபெருமான் வதம் செய்தபோது, தன் பெயரால் இவ்வூர் அழைக்கப்பட வேண்டுமென அசுரன் வேண்டியதால் இவ்வூர் தஞ்சாவூர் என்றானது என்று சொல்லப்படுகிறது. சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீஸ்வரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பள்ளியக்ரஹாரத்திற்கு அருகில் இருக்கிறது. வைணவ சம்பிரதாயத்திலும்கூட மஹாவிஷ்ணுவே தஞ்சனை அழித்தார் என்றும், அதனால் தஞ்சை மாமணி நீலமேகப்பெருமாளாய் கோயில் கொண்டு இருக்கிறார் என்று நம்பப்படுகிறது. இந்த நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சபுரீஸ்வரரின் கோயிலுக்கு நேரெதிரில் உள்ளது.என்பது வியப்புக்குரியது!

தஞ்சை என்பதற்கு “குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி” என்று பொருள் என்றும் பழந்தமிழர் வரலாற்றில் கூறப்படுகின்றது. . “தண்+ செய்’ என்று பதம் பிரித்து இதற்கு பொருள் சொல்லப்படுகிறது.

கலைகள்

தமிழகக் கலைகளில் தஞ்சைக் கலைகளுக்குத் தனிச் சிறப்புண்டு.
இதைப் போலவே தஞ்சைக் கலைகளுக்கு உள்ள மதிப்பும் மரியாதையும் அளவிட முடியாது. இதற்குச் சான்றாகத் தஞ்சாவூர் வீணைகள், தலையாட்டிப் பொம்மைகள், ஐம்பொன் சிலைகள், தேர்ச் சிற்பங்கள், தஞ்சாவூர்த் தட்டுகள் இவற்றின் கலை நேர்த்தியைக் கூறலாம்.தஞ்சாவூருக்குத் தெற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில்
அமைந்துள்ள. நாட்டரசன் கோட்டையில் வீணைகள்
சிறப்பாக உருவாக்கப் படுகின்றன. வீணை செய்யப்படும் பிற ஊர்களில் வீணையின் பாகங்கள் தனித்தனியே செய்யப்பட நாட்டரசன் கோட்டையில் மட்டும் ஒரே கலைஞரால் முழு வீணையும் செய்யப்படுவது குறிப்பிடத் தக்கதாகும். வீணை செய்யும் கலைத்தொழில் பல காலமாகப் பரம்பரை பரம்பரையாக இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பலா, வாகை மரங்களைக் கொண்டு வீணைகள் செய்யப் படுகின்றன.

ஏகாந்த வீணை, ஒட்டு வீணை என்ற இருவகையான வீணைகள்
தச்சர்களால் செய்யப்படுகின்றன. தஞ்சையில் வீணை செய்வதில் தேர்ச்சி மிக்க கைவினைஞர்கள் பலர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். தமிழகக் கைவினைக் கலையின் பெருமை சொல்லும் தஞ்சாவூர் வீணைகள் வெளிநாடுகளுக்குப் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத் தக்கதாகும்.

மிருதங்கப் பானை, உடுக்கை, நாகஸ்வரம், புல்லாங்குழல், உடுக்கை, தாளப் பானை (கடம்) என்று இசைக் கலையோடு தொடர்புடைய பல கைவினைக் கலைப் பொருட்களும் இங்கு உருவாக்கப் படுகின்றன. தஞ்சை சிவகங்கைப்பூங்காவின் வாயிலருகே வீணைகள் இழைத்துச் செய்யப்படுவதை இன்றும் நேரில் பார்க்கலாம்.

தென்னாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியில் நெல்மணி, ஏலக்காய் முதலியவற்றைக் கொண்டு அழகுற மாலை தொடுக்கின்றனர். தஞ்சாவூர்த் தலையாட்டிப் பொம்மை, தஞ்சாவூர் தட்டு, தூபக்கால் (விளக்கு) , பல்வேறு வடிவங்களில் அமைந்த வெண்கலத்தாலான பாக்கு வெட்டிகள், மீன் வடிவப் பல்லாங்குழிகள், வெற்றிலைப் பெட்டிகள், ஆபரணப் பெட்டிகள், உண்டியல், அகல் விளக்குகள் போன்றவையும் தஞ்சையில் பிரசித்தி பெற்றவை. உலோகங்கள் செய்வதிலும் தஞ்சை புகழ் பெற்று விலங்குகிறது. தஞ்சைக்கருகிலுள்ல நாச்சியார்கோவில் பித்தளை விளக்குகள் விற்கும் கலையுலகமாய் விளங்குகிறது.

மேற்கத்திய இசைக்கே உரித்தான வயலினைத் தமிழிசைக்கு ஏற்ப மாற்றியமைத்து முதன்முதலில் உபயோகித்தது தஞ்சையில்தான். மன்னர் சரபோஜி காலத்தில் கிளாரினெட் இசை, பாண்டு வாத்திய இசை முதன்முதலாக தமிழகத்தில் தஞ்சையில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. லாவணிக்கச்சேரி உருவானதும் இங்கே தான். மகாராஷ்டிரத்திலிருந்து தஞ்சையில்தான் முதன்முதலாக ஹரிகதாகாலட்சேபம் அறிமுகம் செய்யப்பட்டது.  தஞ்சையின் குறுக்குச் சந்துகள் மிகப் பிரபலம். இங்கே தான் நாடகக் கலைஞர்கள், பொய்க்கால் குதிரை நாட்டியக்காரர்கள் வசிக்கிறார்கள்.

தொடர்கிறது.. .. ..
படங்களுக்கு நன்றி: கூகிள்69 comments:

ஸாதிகா said...

vaazththukkaL akka!

ராமலக்ஷ்மி said...

நூறாவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

தஞ்சையைப் பற்றி சிறப்பான பகிர்வு. தொடரக் காத்திருக்கிறோம்.

Menaga Sathia said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அம்மா!!சுவராஸ்யமான பதிவு!!

Yaathoramani.blogspot.com said...

100 வது பதிவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
இந்தப் பதிவு ஒரு சிறப்புப் பதிவாக உங்கள் ஊர் குறித்து
இருக்கும்படியாக அமைந்தது சிறப்பு
அருமையான துவக்கம்
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்

குடுகுடுப்பை said...

தஞ்சாவூர்ல எனக்கு பிடிக்காததே குறுக்குச்சந்துகள்தான், இன்னமும் இருக்கிறது பழைய தஞ்சையில் பழைய வீடுகள் நிறைய மாறி விட்டன், சந்துக்களில் இன்னமும் உள்ள சில பழைய வீடுகளை ராஜஸ்தான் சேட்டுக்கள் வாங்கி கிடோனாக பயன்படுத்துகிறார்கள்.

Jaleela Kamal said...

அன்பு மனோ அக்கா 100 வது வாழ்த்துக்கள்.
இன்னும் பயனுள்ள பல ஆயிரம் முத்துகக்ளை எங்களுகு அளிக்க வாழ்த்துக்கள்.

CS. Mohan Kumar said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். நான் நாளைக்கு தஞ்சாவூர்/ நீடாமங்கலம் போறேனே !! ஐ ஜாலி !

Reva said...

Vaazthukkal akka ..:) Post romba superb..
Reva

MANO நாஞ்சில் மனோ said...

நூறு ஆயிரமாக, ஆயிரம் பதினாயிரமாக வாழ்த்துக்கள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

100 ஆவது பதிவுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமல்லவா தஞ்சை.

தஞ்சை தங்களின் எழுத்துக்களால் எங்கள் நெஞ்சை அள்ளப்போவது நிச்சயம்.

தொடருங்கள். வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

அக்கா,என்னுடைய தொடர் பதிவழைப்பை நூறாவது இடுகை வரை காத்திருந்து நூறாவது இடுகையாக வெளிவரச்செய்தது மிக்க மகிழ்ச்சி.இன்னும் பன்னூறு பதிவுகள் இட்டு அனைவரும் பயன்பெற வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.உங்களூர் தஞ்சையைப்பற்றிய சிறப்புகளை மேலும் அறிய ஆவலாக உள்ளேன்.

ChitraKrishna said...

ஓ.. வீணை உங்க ஊரில் தான் தயார் ஆகுதா? 100 -வது பதிவிற்கு வாழ்த்துக்கள் அம்மா. இந்த பதிவின் தொடர்ச்சியில் தஞ்சாவூர் டிகிரி காப்பி பத்தி சொல்வீங்க தானே?

ஜெய்லானி said...

100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..!! :-)


தொடருங்கள்...தொடர்கிறோம் :-)

கோகுல் said...

தஞ்சைக்கான விளக்கம் இன்ற்ய்தான் அறிந்தேன்.நன்றி!

நூறுக்கு வாழ்த்துக்கள்.

மேலும் பல நூறு நல்ல படைப்புகள் படைக்க வேண்டுகிறோம்!

கதம்ப உணர்வுகள் said...

100 ஆவது பதிவுக்கு என் அன்பு வாழ்த்துகள் மனோ அம்மா...

தஞ்சை மண்ணின் வளத்தை அழகை பசுமையை தஞ்சைபுரீஸ்வரரை எல்லாமே மிக அழகா அருமையா சொல்லி இருக்கீங்கம்மா..

என் அன்பு வாழ்த்துகள் அம்மா பகிர்வுக்கு.

ஸ்ரீராம். said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள். தஞ்சையில் கழிந்த சிறுவயது நினைவுகள் வருகின்றன. தொடருங்கள்.

raji said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் மேடம்

வாவ்!தஞ்சை பற்றி எத்தனை விவரங்கள்!

இன்றுதான் இவ்வளவு தெரிந்து கொண்டேன் மேடம்.நன்றி

சாகம்பரி said...

வாழ்த்துக்கள் மேடம். கலைகளின் பூமி, யானை கட்டி போரடித்த கழனிகள், இன்றைக்கும் தமிழகத்தின் நெல் கழனி .... பெருமையாக சொல்ல தஞ்சை பற்றி நிறைய இருந்தும் சத்தம் போட்டு சொல்லத்தான் யாருமில்லை. என் கவலை தீர்க்க இந்த பதிவு நல்ல ஆரம்பம்.

குறையொன்றுமில்லை. said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். அதுவும் உங்க ஊர்பத்தி அமைந்தது ரொம்பவே சந்தோஷம். தஞ்சைபற்றி நன்கு தெரிந்து கொள்ளும் விதத்தில் சொல்லி இருக்கீங்க நன்றி

'பரிவை' சே.குமார் said...

அம்மா...

முதலில் வாழ்த்துக்கள் 100 முத்தான இடுகைகளுக்கு....

இந்த 100.... 1000.... 10000.... 100000 என விரியட்டும்...

தஞ்சையைப் பற்றி நல்ல பகிர்வு.

ADHI VENKAT said...

100 வது பதிவிற்கு வாழ்த்துகள்.

தஞ்சையைப் பற்றி பல தகவல்களை தெரிந்து கொண்டேன்.

வெங்கட் நாகராஜ் said...

நூறாவது இடுகைக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்....

தஞ்சை பற்றி இன்னும் தகவல்கள் அறியக் காத்திருக்கிறேன்...

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். அழகான தஞ்சையைக் காட்டி விட்டீர்கள் மனோ.

Angel said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா .
தஞ்சை பற்றி இன்னும் அறிய ஆவலா இருக்கு .தொடருங்கள்
//தஞ்சைக்கருகிலுள்ல நாச்சியார்கோவில் பித்தளை விளக்குகள் விற்கும் கலையுலகமாய் விளங்குகிறது.//

அங்கே வேலை செய்தப்போ அப்பா நான்கு பித்தளை குடங்கள் வாங்கி வந்தார் .இருபத்தைந்து வருடமாகிறது இன்னமும் அவை எங்க வீட்ல பத்திரமா இருக்கு .

முற்றும் அறிந்த அதிரா said...

100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் மனோஅக்கா.

கீதமஞ்சரி said...

நூறாவது பதிவுக்கும், அப்பதிவின் மூலம் சொந்த ஊருக்குப் புகழ் சேர்க்கும் பெருமைக்கும் என் வாழ்த்துக்கள். தஞ்சை மண்ணின் வாசம் என் நாசியிலும். இருபுறமும் பச்சைப் பசேலென்ற வயல்களால் சுழப்பட்ட நெடுஞ்சாலைகளில் பயணித்த நினைவுகளின் சுகத்தோடு அடுத்த பதிவினை ஆர்வத்துடன் பார்த்திருக்கிறேன். மீண்டும் என் வாழ்த்துக்கள் மனோ மேடம்.

Asiya Omar said...

நூறாவதிற்கு வாழ்த்துக்கள்.அருமையான பகிர்வு அநேக விளக்கங்களோடு ஆரம்பித்து அசத்தலாக இருக்கு உங்க ஊர் பற்றிய தொகுப்பு.தொடரட்டும்.தஞ்சையின் அழகை இந்த முறை ஊர் சென்ற பொழுது அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தது.என்னவொரு பசுமையான ஊர்.

RAMA RAVI (RAMVI) said...

100 க்கு வாழ்த்துக்கள் மேடம்.
தஞ்சாவூர் பெயர் காரணம் அருமை.

பத்மநாபன் said...

பதிவில் சதமடித்ததற்கு வாழ்த்துக்கள் .. தஞ்சை தரணியின் பெயர் காரணம் , இசையில் தஞ்சையின் பங்களிப்பை சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளீர்கள் . தஞ்சையை ஓரு சுற்று சுற்றி வந்த உணர்வு ஏற்படுத்தியது .. நன்றி ...

vetha (kovaikkavi) said...

100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
தஞ்சை சிறப்பு. நன்றி. தொடரட்டும் பணிகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www,kovaikkavi.wordpress.com

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி ஸாதிகா! நீங்கள் சொல்வது உண்மைதான். ஐம்பதாவது இடுகை என் ஊரைப்பற்றியதாக இருக்கவேன்டுமென்று தான் இது வரைக் காத்திருந்து இந்தப் பதிவை எழுதினேன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

அம்பாளடியாள் said...

நூறாவது பதிப்பிற்கு வாழ்த்துக்கள் அம்மா .....தஞ்சையைப் பற்றிய சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி .
தங்கள் ஆசிக்காக ஒரு பக்திப் பாடலுடன் ஒரு யீவனும் காத்திருக்கின்றது என் தளத்தில் வாருங்கள் வந்து வாழ்த்துங்கள் ............

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி மேனகா!

மனோ சாமிநாதன் said...

இனிய வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் முதல் வருகைக்கும் அன்பு நன்றி சகோதரர் குடுகுடுப்பை!
பழைய தஞ்சையில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று எல்லா வீதிகளையும் இணைத்து ஏகப்பட்ட சந்துகள் உள்ளன. புராதனக் கலைகள் புழங்குமிடங்களாயும் அவை இருக்கின்றன. அங்கங்கே புதுப்புது வீடுகள் முளைத்திருந்தாலும் சந்துகள் என்னவோ மாறவில்லை!

மனோ சாமிநாதன் said...

அன்பு வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி ஜஜீலா!

மனோ சாமிநாதன் said...

அன்பான வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி மோகன்குமார்! தஞ்சை/நீடா பயணம் இனிமையாக கழிந்திருக்குமென்று நம்புகிறேன்!!

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the nice compliements Reva!

மனோ சாமிநாதன் said...

இனிய வாழ்த்துக்களுக்கு உளமார்ந்த நன்றி நாஞ்சில் மனோ!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் இனிய நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சித்ரா!

கும்பகோண‌ம் டிகிரி காப்பி என்பது தான் பேச்சு வழக்கு. தஞ்சையில் அப்படி அருமையான காப்பியை நான் குடித்ததில்லை!

மனோ சாமிநாதன் said...

அன்பான வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றி சகோதரர் ஜெய்லானி!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மனம் நிறைந்த நன்றி மஞ்சுபாஷிணி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் இனிய நன்றி ஸ்ரீராம்!

ezhilan said...

நூறாவது இடுகை பிறந்த மண்ணைப்பற்றி.பெருமைப்படுகிறேன்,நானும் தஞ்சை மண்ணை சேர்ந்தவன் என்பதால்.புதிதாக உங்கள் தளத்திற்கு வந்துள்ளேன் .என்னையும் கவணிக்கவும்.

இராஜராஜேஸ்வரி said...

நூறாவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

வீணை இசையாய் அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

Unknown said...

நானும் உங்க ஊர்க்காரன் தான் மேடம்:)
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

மனோ சாமிநாதன் said...

தஞ்சையை‍ அதுவும் பெரிய கோவிலை நேரில் ஒரு முறை வந்து பாருங்கள் ராஜி!
வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி!!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சாகம்பரி! இதன் இரண்டாம் பகுதியில் இன்னும் நிறைய தஞ்சையின் மேன்மைகளைப்பற்றி சொல்லவுள்ளேன். தஞ்சை மாவட்டம் என்றால் இன்னும் நிறைய இருக்கிறது சொல்ல. தஞ்சையைப்பற்றி மட்டும் என்பதால் அவற்றைத் தவிர்த்திருக்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரி லக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

உங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் அன்பார்ந்த நன்றி சகோதரர் குமார்!

மனோ சாமிநாதன் said...

அன்பான வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் உளமார்ந்த நன்றி ஆதி!‌

மனோ சாமிநாதன் said...

மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

மனோ சாமிநாதன் said...

இனிமையான கருத்துக்கும் வாழ்த்துக்கும் அன்பு நன்றி வித்யா!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்கும் கருத்துக்கும் இனிய நன்றி கோகுல்!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி ஏஞ்சலின்!

மனோ சாமிநாதன் said...

அன்பு வாழ்த்துக்களுக்கு உளமார்ந்த நன்றி அதிரா!

மனோ சாமிநாதன் said...

அன்பிற்கினிய வாழ்த்துக்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி கீதா!

மனோ சாமிநாதன் said...

கருத்திற்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ஆசியா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் இனிய நன்றி ராம்வி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி சகோதரர் பத்மநாபன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் அன்பான வாழ்த்திற்கும் இனிய நன்றி வேதா!

மனோ சாமிநாதன் said...

இனிய வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி அம்பாள‌டியாள்!!

மனோ சாமிநாதன் said...

தஞ்சையைச் சேர்ந்த உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி சகோதரர் எழிலன்!

மனோ சாமிநாதன் said...

உளமார்ந்த வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மனங்கனிந்த நன்றி ராஜராஜேஸ்வரி!!

மனோ சாமிநாதன் said...

இனிய வாழ்த்துக்களுக்கும் முதல் வ‌ருகைக்கும் அன்பான நன்றி மழை!

மனோ சாமிநாதன் said...

இன்ட்லியில் இணைந்து ஓட்டளித்த அன்புத் தோழமைகள் வெங்கட் நாகராஜ், ஸாதிகா, ants, bsr அனைவருக்கும் அன்பு நன்றி!!

நிலாமகள் said...

நூறாவ‌து ப‌திவு ம‌கிழ்வ‌ளிக்கிற‌து. த‌ஞ்சாவூர் ப‌ற்றிய‌ தொகுப்பும் ப‌ட‌ங்க‌ளும் அருமை. சுற்றுவ‌ட்டார‌ச் சிற‌ப்புச் செய்திக‌ள் ஏதேனும் விடுப‌ட்டிருந்தால் த‌ஞ்சாவூர்க்கார‌ ப‌திவ‌ர்க‌ள் தொட‌ர்ந்து எழுத‌லாமே...