Thursday 19 August 2010

அன்பென்ற வேர்களின் பலம்.. .. ..

இலக்கியங்களிலும் கவிதைகளிலும் புதினங்களிலும் திரைப்படங்களிலும் பழங்காலத்திலிருந்து இன்றைய காலம் வரை தாய்மையைப்பற்றி-அதன் சிறப்பையும் உயர்வையும் பற்றி எழுதாத கவிதைகளில்லை! பாடாத பாடல்கள் இல்லை!! சொல்லாத வார்த்தைகள் இல்லை!!! ஆனால் சொல்லாத-வெளிப்படாத உணர்வுகளுக்கு என்றுமே ஒரு புனிதம் உண்டு. கவிஞர் கண்ணதாசன் சொன்னது போல ‘சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை’ என்ற கவித்துவமான வரிகளுக்கு இணையானதுதான் ஒரு தந்தையின் பெருமை!



ஆலமரம் எத்தனையோ பேர்களுக்கு குளிர்ச்சி தருகிறது! நிழல் தருகிறது ஒரு தாய் தன் குழந்தைகளுக்குத் தரும் இதம் போல! ஆனால் அந்த ஆலமரத்தைத் தாங்கிப் பிடிக்கும் அதன் வலிமையான வேர்களைப்பற்றி யாரும் பேசுவதில்லை!

சில வருடங்களுக்கு முன் தஞ்சையில் என் வீட்டருகேயுள்ள-எனக்கு பழக்கமுள்ள ஒரு பெண் மருத்துவரிடம் செல்ல வேண்டியிருந்தது. அவர்களுக்காக காத்திருந்தபோது அங்கே புதிதாக ஒட்டப்பட்டிருந்த இரு சிறிய சுவரொட்டிகளை கவனித்தேன். முதலாவது தாய்மையின் உயர்வைப்பற்றிய கவிதை. மிக அருமையாக இருந்தது. அடுத்ததுதான் என்னை முதலில் வியப்பிலாழ்த்தி, பின் நெகிழ்ந்து கனிந்து போக வைத்தது.

அந்த கவிதை.. .. .. ..

“ அம்மா இல்லத்தின் தன்மானம் என்றால்
  அப்பா இல்லத்தின் அடையாளம்!
  அம்மா ஊட்டுவது அன்பு.
  அப்பா காட்டுவது மனத்தெம்பு!

  நாளும் பொழுதும் உணவளிப்பவள் அம்மா-ஆனால்
  அந்த உணவை சம்பாதித்துத் தருவது அப்பா என்பதை
  மறந்தே போகிறோம்!

  கல்லில் இடறும்போது வாயில் வரும் வார்த்தை
‘அம்மாடியோ!’
  காரில் மோதி கீழே விழும்போது வாயில் வரும் வார்த்தை
 ‘ஐயோ அப்பா!’

  ஏனெனில் சின்னச்சின்னத் துன்பங்களில்
  தேடுவது அம்மாவின் அன்பு!

  ஆனால் பெரிய துன்பங்களில் துணை நிற்பது
  அப்பாவின் ஆதரவு!

   அப்பா ஒரு நெடிய ஆலமரம்!
   அவர் தரும் குளிர் நிழலே குடும்பம்!’

மருத்துவரிடம் இதைப்பற்றிப் பேசி பாராட்டியபோது அவர்களின் விழியோரத்தில் கண்ணீர் முத்துக்கள்!!

‘என் அப்பா சமிபத்தில்தான் இறந்து போனார்கள். ஆனால் அவரின் அன்பு, அவர் கொடுத்த மனத்தெம்பு, தைரியம், தன்னம்பிக்கை எல்லாவற்றையும் ஒரு நொடியில் இழந்து விட்டேன்!’ என்றார்கள்.

உண்மைதான்! அன்பிற்குரியவர்கள் திடீரென்று மறையும்போது அந்த அன்புடன் வாழ்வில் உள்ள நம்பிக்கையும் அதைச் சார்ந்த அனைத்து விஷயங்களும் ஆட்டம் கண்டு விடுகின்றது! அந்தக்கவிதையில் உள்ளது போல பெரிய துன்பங்களில் தெம்புடன் பிடித்துக்கொண்ட தோள்கள் மறைந்து விட்டன!

ஒரு தந்தையின் பெருமையை உணர்த்த இதைவிட எளிமையான, அழகான கவிதையை நான் படித்ததில்லை!

38 comments:

athira said...

உண்மைதான், மிக அழகாகச் சொல்லியிருக்கிறீங்கள். படிக்க உள்ளம் நெகிழ்கிறது.

ஜெய்லானி said...

மீண்டும் நினைவூட்டும் வரிகள் ..அடிக்கடி மறந்து போகிறோமே..!!

GEETHA ACHAL said...

உண்மை தான்...அப்பா அம்மா இரண்டு பேருமே முக்கியம்...

தூயவனின் அடிமை said...

தாய் தந்தையின் பாசத்திற்கு நிகர் இல்லை,உண்மை. நான் விஜய் டிவி யில் நீயா நானா நிகழ்ச்சியில் இன்றைய தலைமுறை பெற்றோர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பதை, பெற்றோர் வாயால்
கேட்கும் பொழுது வெட்கி தலைகுனிய சூழ்நிலைக்கு தள்ளபட்டுலத்தை நினைத்து மனத்தில் சிறிய வலி.

ஸாதிகா said...

அழகுற சொல்லிட்டீங்க அக்கா.

CS. Mohan Kumar said...

மிக நெகிழ்வாக உணர்கிறேன்

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை.
அழகாய் பகிர்ந்து கொண்ட விதம் அருமை அம்மா.

Chitra said...

“ அம்மா இல்லத்தின் தன்மானம் என்றால்
அப்பா இல்லத்தின் அடையாளம்!
அம்மா ஊட்டுவது அன்பு.
அப்பா காட்டுவது மனத்தெம்பு!


...... உண்மை...... மனதை கனக்க வைத்து விட்டீர்கள்! அருமையான பதிவு!

Krishnaveni said...

True sayings....touching poem....fantastic

prabhadamu said...

இந்த தளம் உங்கள் சமையல் தளத்தை அனைவரும் பார்வையிட உதவியாக இருக்கும். இந்த தளம் உங்களுக்கு பயனுல்லதாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சி.

http://cookeryindexer.blogspot.com/

மனோ சாமிநாதன் said...

நெகிழ்வான பகிர்வுக்கு அன்பு நன்றி அதிரா!!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் ஜெய்லானி!

அன்பான கருத்துக்கு மனமார்ந்த நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துக்கு நன்றி! கீதா!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் தூயவன்!

இன்றைய இளந்தலைமுறையின் தவறுகளுக்கு மூல காரணங்களே பெற்றோர்தான் என்பேன் நான்!! நிறைய இல்லங்களின் இப்போதைய பிரச்சினை இதுதான்! அன்பையும் பொறுப்புகளையும் நல்ல கருத்துக்களையும் சொல்லிக்கொடுக்கத் தவறி விட்டு, பின்னால் அதன் பலன்களை அனுபவிக்கும்போது பெற்றோரால் அவற்றைத் தாங்க முடிவதில்லை!

மனோ சாமிநாதன் said...

அன்பு நன்றி ஸாதிகா!

மனோ சாமிநாதன் said...

நெகிழ்வான கருத்துக்கு அன்பு நன்றி மோகன்குமார்!!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் குமார்!
தங்களின் கருத்தும் ஒரு அழகான கவிதை போலவே இருக்கிறது!
அன்பான பதிவிற்கு மிக்க நன்றி!!

மனோ சாமிநாதன் said...

உற்சாகமும் மகிழ்வும் தந்த பாராட்டிற்கு அன்பு நன்றி சித்ரா!

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the beautiful comment Krishnaveni!!

மனோ சாமிநாதன் said...

நல்லதொரு வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு அன்பு நன்றி பிரபா!!

ஹுஸைனம்மா said...

அக்கா, அருமையாக ஒரு நல்ல விஷயம் சொல்லிருக்கீங்க.

ஹைஷ்126 said...

அன்பு அக்கா:

அருமையான கவிதை இதை உருவாக்கியவருக்கும், பதித்த தங்களுக்கு மிகவும் நன்றி.

//‘என் அப்பா சமிபத்தில்தான் இறந்து போனார்கள். ஆனால் அவரின் அன்பு, அவர் கொடுத்த மனத்தெம்பு, தைரியம், தன்னம்பிக்கை எல்லாவற்றையும் ஒரு நொடியில் இழந்து விட்டேன்!’ என்றார்கள்.//

இதில் எனக்கு சிறிது உடன் பாடு இல்லை. என் அன்னை காலமானது 1984, தந்தை 1998 ஆனால் நானோ தஞ்சையில் இருந்க்கும் என் தங்கையோ எப்போது அழுததில்லை. எப்போது அவர்களை பற்றி நினைத்தாலும் தானாக மனதில் புதுதெம்பும், மகிழ்ச்சியும் வரும்.

உணர்வுகள் மனம் சம்பந்தபட்டது உடல் சம்பந்தபட்டது அல்ல. இதை எழுதும் போது கூட என் தாயும் தந்தையும் என்னுடன் தான் இருக்கின்றனர். உருவம் இல்லை என்பதற்காக அன்பும், பாசமும் மறைந்து விடாது என்பது என் கருத்து.

வாழ்க வளமுடன்

மனோ சாமிநாதன் said...

மனமார்ந்த பாராட்டுக்கு அன்பான நன்றி ஹுஸைனம்மா!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் ஹைஷ்!

பாராட்டிற்கு என் அன்பு நன்றி!!

தாங்கள் சொன்னது சரி தான்! உணர்வுகள் எப்போதுமே மனம் சம்பந்தப்பட்டதுதான். ஆனால் அன்பிற்குரியவர்களின் மரணத்தை எல்லோராலும் அத்தனை மனப்பக்குவத்துடன் ஜீரணித்துக்கொள்ள முடியாது. இரத்தமும் சதையுமாய் அருகிலிருந்து அன்பு காட்டியவர்களின் மறைவு தந்த வலி மறைய சில காலமாவது பிடிக்கும். அதன் பிறகுதான் அவர்கள் எப்போதும் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிற உண்மை புலப்படும்.

உங்கள் தங்கை என் ஊரான தஞ்சையில் இருப்பது மிகவும் மகிழ்வைத் தருகிறது. அடுத்த முறை ஊருக்கும்போது அவசியம் சந்திக்கிறேன்.

ஜெய்லானி said...

Hi jailani,

Congrats!

Your story titled 'அன்பென்ற வேர்களின் பலம்.. .. ..' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 22nd August 2010 07:56:02 AM GMT


Here is the link to the story: http://ta.indli.com/story/324207

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் ஜெய்லானி!

எனது பதிவை ‘தமிழிஷ்’-ல் இணைத்ததற்கும் அது இன்று ‘பிரபலமானவைகளின்’ பட்டியலில் சேர்க்கப்பட்டதை எனக்குத் தெரிவித்ததற்கும் என் இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான கவிதை.

நினைவூட்டும் வரிகள்...

ஹைஷ்126 said...

அன்பு அக்கா 1993 இல் இருந்து என் தங்கை புதிய பேருந்து நிலையை அருகில் “தங்கம் நகரில்” கூட்டு குடும்பத்தில்தான் வசிக்கிறார்.

தங்களின் அன்புக்கு மிகவும் நன்றி.

Vijiskitchencreations said...

ரொம்ப அருமையான விஷயத்தை நல்லாவே சொல்லியிருக்கிங்க.

தினேஷ்குமார் said...

வணக்கம் அம்மா
காரில் மோதி கீழே விழும்போது வாயில் வரும் வார்த்தை
‘ஐயோ அப்பா!’
இப்பதிவை கொடுத்த தங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் உங்கள் மகனாக
http;//morumlogam.blogspot.com

மனோ சாமிநாதன் said...

“அருமையான கவிதை.

நினைவூட்டும் வரிகள்...”
பாராட்டுக்கு மிக்க நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் ஹைஷ்!

தங்கையைப் பற்றி எழுதிய விபரங்களுக்கு மிகவும் நன்றி! எங்கள் இல்லம் தங்கம் நகர் அருகே தான் உள்ளது. ஊருக்குப்போகும்போது விலாசம் வாங்கிக் கொள்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

உளமார்ந்த பாராட்டிற்கு என் அன்பு நன்றி விஜி!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள தினேஷ்குமார்!

என்னை தங்களின் அன்னையாக ஸ்வீகரித்தது என் எழுத்தைப் பாராட்டியதையும்விட மகிழ்வாக இருந்தது. தங்களின் அன்புக்கு இதயங்கனிந்த நன்றி!!

மனோ சாமிநாதன் said...

இந்தப் பதிவிற்கு இண்ட்லியில் ஓட்டளித்து சிறப்பித்த அன்பிற்குரியவர்களான திருவாளர்கள் ஹைஷ், ஜெய்லானி, செந்தில், கங்கா, கிங்கான், அஸ்ரா, காதர், பட்டாபட்டி, தூயவன், பபலாஜிசரவணா, மரகதம், தேவ், பனித்துளி சங்கர், பூபதி, தருண், ஜெகதீஷ், அம்புலி, கணபத், மெளனகவி, வடிவேலன், விளம்பி, ஹிஹி12, நண்பன், ஜாக்கிசேகர், குமார், வெறும்பய, அயூப், முத்து, கீதா, வரன்கஜன், குரு, அனைவருக்கும் என் இதயங்கனிந்த அன்பான நன்றி!

சிவகுமாரன் said...

இப்போதும் அப்பா என்ற வார்த்தையைக் கேட்டால் அழுதுவிடுவேன்.
அப்பாவைப் பற்றிய பகிர்வு அருமை

Dr.Ezhilvendan said...

அப்பா ஒரு நெடிய ஆலமரம்!
அவர் தரும் குளிர் நிழலே குடும்பம்!’

Congratulations
Wonderful lines
Please visit my Face Book Page
Poet Ezhilvendhan
or Email
dr.ezhilvendan@gmail.com

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான பதிவு
இன்றைய தினம் இதை மீள்பதிவாகத் தரலாமே
முன்பு படிக்கத் தவ்றியவர்களுக்கு
படித்து மகிழ ஒரு வாய்ப்பாக இருக்குமே
வாழ்த்துக்களுடன்...