Sunday 30 May 2010

அன்னம் விடு தூது!

இதுவும் கண்ணாடி ஓவியம்தான். வண்ணங்கள் அடர்த்தியாக இல்லாமல் பொருத்தமான வண்ணங்களை மட்டும் தீட்டி வெளிர் நிறப்பின்னணியில் கோடுகளை அழுத்தமாக வரைந்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த ஓவியங்களில் இதுவும் ஒன்று.
இதற்கு கறுப்பு லைனர், வண்ணங்கள், ப்ரஷ்கள் மட்டும்போதும். ஓவியத்தை கண்ணாடி கீழே வைத்து லைனரால் ட்ரேஸ் செய்து கொண்டு அதை நன்கு காய வேண்டும். பின்பு நம் மனதின் ரசனைக்கேற்ப வண்னங்களைத் தீட்ட வேண்டியதுதான்.

32 comments:

ஜெய்லானி said...

கண்ணாடியில் வரையும் திறமை வெகு சிலருக்கே வரும். அந்த வகையில் ஓவியம் அருமையாக இருக்கிறது.

vanathy said...

மனோ அக்கா, சூப்பர். எனக்கும் மிகவும் பிடிக்கும் இந்த வகை ஓவியங்கள். ஆனால் பொறுமை குறைவு. மிக மிக அழகா இருக்கு.

Asiya Omar said...

கண்ணாடி ஓவியங்கள் நானும் நிறைய பார்த்திருக்கிறேன்.மிக நுணுக்கமாக வரைந்திருப்பது தான் இதன் சிறப்பு.இந்த ஓவியத்தில் எந்த பகுதியை பாராட்டுவது,அத்தனை கலைநுணுக்கமானது.அருமை.

athira said...

மனோஅக்கா!!!அன்னம் விடுதூது மிக அருமை. சில விஷயங்களைப்பார்க்கும்போது, படிக்கும்போது சொல்ல வார்த்தை எழுவதில்லை, இதுவும் அப்படித்தான் இருக்கு. நீங்கள் எங்காவது போட்டியில் கலந்து நடத்திய அனுபவம் உண்டோ ?

இமா க்றிஸ் said...

மனோ அக்கா,
என்ன சொல்வது!!
வெகு நேரம் பார்த்துக் கொண்டே இருந்தேன். உங்கள் ஆக்கங்கள் அபிப்பிராயம் சொல்வதற்கானவை அல்ல அக்கா. ;) அனுபவிக்க மட்டும். ;)
அழகு. அருமை.

Ahamed irshad said...

அழகாயிருக்கு ஓவியம்.. மெயில் அனுப்பிவிட்டேன் பார்த்தீர்களா அக்கா...

Menaga Sathia said...

வாவ்வ்வ்வ் எவ்வளவு அழகா வரைந்திருக்கிங்க.அருமை!!...

மனோ சாமிநாதன் said...

“கண்ணாடியில் வரையும் திறமை வெகு சிலருக்கே வரும். அந்த வகையில் ஓவியம் அருமையாக இருக்கிறது.”

ரசனை மிகுந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு என் அன்பு நன்றி, மேனகா!

மனோ சாமிநாதன் said...

மனம் திறந்த பாராட்டுக்கு அன்பு நன்றி, வானதி!!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுப்பதிவிற்கு என் இதயங்கனிந்த நன்றி, ஆஸியா!!

மனோ சாமிநாதன் said...

அருமையான பாராட்டு மனசை இதமாக்குகிறது, அதிரா! நான் எந்தப் போட்டியையும் நடத்தியதில்லை. ஆனால் 18 வருடங்களுக்கு முன் ‘சாவி’ இதழ் நடத்திய ஓவியப்போட்டியில் முதல் பரிசைப் பெற்றிருக்கிறேன். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து இங்கு என் வீட்டுக்கு வந்து சாப்பிட்ட ‘சாவி’ அவர்கள் என் சமையலையும் ஓவியங்களையும் மிகவும் பாராட்டிச்சென்றார்!

மனோ சாமிநாதன் said...

இமா, உங்களின் பாராட்டு மனதில் மகிழ்ச்சியை நிறைத்தது! ஒவ்வொரு கலைஞனுக்கும் அவனுடைய திறமையை மேலும்மேலும் வளர்ப்பதே இந்த மாதிரி பாராட்டுக்கள்தான்!!

மனோ சாமிநாதன் said...

அன்பான பாராட்டிற்கு மனங்கனிந்த நன்றி, இர்ஷாத்!!

ஸாதிகா said...

அக்கா ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்.

செந்தமிழ் செல்வி said...

அன்பு சகோதரி,
வாவ்! அழகான ஓவியம்! வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது அழகை!

Krishnaveni said...

Magnificent art work madam

கவி அழகன் said...

நல்ல படைப்பு

ஜெயா said...

எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை மனோ அக்கா......

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு அன்பு நன்றி, ஸாதிகா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி, செல்வி!!

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the lovely compliment, Krishnaveni!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள யாதவன் அவர்களுக்கு!

முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுப்பதிவிற்கு அன்பு நன்றி, ஜெயா!!

Jaleela Kamal said...

அருமையான ஓவியம், சூப்பர் மனோ அக்கா

மனோ சாமிநாதன் said...

மனந்திறந்த பாராட்டிற்கு அன்பு நன்றி, ஜலீலா!

ராமலக்ஷ்மி said...

மிக மிக அருமைங்க.

Kanchana Radhakrishnan said...

மனோ அன்னம் விடுதூது மிக அருமை.

மனோ சாமிநாதன் said...

மனந்திறந்த பாராட்டுக்கு என் நன்றி, ராமலஷ்மி!

மனோ சாமிநாதன் said...

அன்புப் பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றி, காஞ்சனா!!

Thenmozhy said...

Siruvayathil sipikkul oru muthu matum irukum endru katrarindhen....

Indha sippikkul mattum epadi pala muthukkal...
Multi talented....
"Hearty congrats"

கலாகுமரன் said...

மிக மிக அழகான கண்ணாடி ஓவியம். மற்ற ஓவியங்கள் வரைவதைக்காட்டிலும் இதற்கு பொருமை அதிகம் தேவை. உங்கள் தளத்தில் மற்ற (பலவித) ஓவியங்களையும் கண்டு ரசித்தேன். தற்போதும் ஓவியங்களை வரைகிறீர்களா? நேர்த்தியான உடல் மொழி,நளினம்... தாங்கள் எவ்வளவு ரசித்து வரைந்துள்ளீர்கள் என்பதை காட்டுகிறது. ”இனிய ஓவியா” எனும் ப்ளாக்கில் ஓவியம் குறித்து சில பதிவுகளை எழுதியுள்ளேன் நேரம் இருந்தால் பாருங்க..

http://eniyaoviya.blogspot.com/2012/12/part-2.html