துபாய்
நகரில் 1979ல் கட்டப்பட்ட 39 தளங்கள்
கொண்ட கட்டிடம் இது [மஞ்சள் கட்டிடம்]. 40 வருடங்களுக்கு முன்
நாங்கள் பார்த்து வியந்த கட்டிடம் இது.
ஐக்கிய அமீரகத்தின் 100 ரூபாய்த்தாளில் [ அங்கே பணத்திற்கு திரஹம்
என்று பெயர்] இது அச்சிடப்பட்டிருக்கிறது.
இப்போது உலகிலேயே உயரமான கட்டிடமும் அதனருகேயே
பல உயரமான அழகிய கட்டிடங்கள்
வந்து விட்டாலும் இதன் புகழ் அப்படியே
தானிருக்கிறது.
2.
ஜெயங்கொண்ட சோழபுரத்திலுள்ள பிரகதீஸ்வரர் கோவிலின் நந்தி இது.
நந்தி லிங்கத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது. தினமும் சூரிய ஒளி இந்த நந்தி மீது பட்டுச் சிதறி அந்த ஒளிக்கதிர்கள் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீதும் பட்டு பிரதிபலித்து பிரகாசிப்பது மிகவும் அற்புதமான காட்சி
3. கன்யாகுமரியில் விடியற்காலையில் கதிரவன் கீழ்த்திசையில் எழுந்து வரும் காட்சியைக்காண குவிந்திருக்கும் மக்கள்!!
4.
செட்டிநாட்டு அரண்மனை ஒன்றின் முகப்பு தோற்றம்!
5.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா ராஜாமடம்
அருகே வங்கக்
கடலோரம் ,அமைந்துள்ளது மனோரா என்ற எழில்
கோபுரம் .
அகழி கோட்டை , தங்கும் அறைகள் , 9 அடுக்குகள்
கொண்ட கலங்கரை விளக்க கோபுரம்
போல் விளங்கும் இந்த மனோராவை 1814ல்
கடல் போரில் நெப்போலியனுடன் போரிட்டு
ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதைப் பாராட்டும்
வகையில், தஞ்சையை ஆண்ட தஞ்சாவூர்
மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜி நினைவுச்சின்னமாக
நிறுவினார். . மனோரா கோட்டையில் தமிழ்
, தெலுங்கு , மராட்டி , உருது , ஆங்கிலம் ஆகிய
மொழிகளில் 5 கல்வெட்டுக்கள் உள்ளன .
அறுகோண
வடிவமும் 8 அடுக்குள்ள இந்தக் கோபுரத்தின் உயரம்
120 அடி, உச்சியை அடைய 120 படிகள்
உள்ளன.மனோரா கோட்டையில் 3 வாயில்கள்
உள்ளன. பழங்கால மரபின்படி வாயிற்காப்போன் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
6.
வாட்ஸ் அப்பில் வந்த ஒரு புகைப்படம்! இது ஆண்களுக்காக!!







