இந்த முறை ஷார்ஜாவில் இருந்த போது கடந்த டிசம்பர் மாதம் கடல் வாழ் உயிரினங்கள் விற்கவும், காய்கறிகள், பழங்களுக்கெனவும் 195 மில்லியன் திர்ஹாம்ஸ் செலவில் ஒரு மிகப்பெரிய வளாகம் திறக்கப்பட்டது.[ திர்ஹாம் என்பது ஐக்கிய அரபுக்குடியரசின் நாணயத்தின் பெயர். ஒரு திர்ஹாம் தற்போதைய இந்திய ரூபாய்கள் ஏறக்குறைய பதினெட்டிற்கு சமமானது] முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்த வளாகத்தின் பெயர் அல் ஜுபைல் ஸூக் என்பதாகும். இஸ்லாமிய கலாச்சார பாணியில் 37000 சதுர மீட்டர்களில் 370 கடைகளை தன்னுள் அடக்கி பரந்து விரிந்து மிக அழகாய் நிற்கிறது இந்த வளாகம்! கீழ்த்தளம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒரு பகுதி பழங்கள், காய்கறிகளுக்கென்று 212 கடைகளை தன்னுள் அடக்கியுள்ளது. புலாலுக்கு மற்றொரு பகுதி 67 கடைகளையும், கடைசிப் பகுதி கடல் வாழ் உயிரினங்களுக்காக 91 கடைகளையும் கொண்டிருக்கிறது.
இந்த வளாகத்தை நீங்களும் கண்டு ரசியுங்கள்!!
இந்த வளாகத்தை நீங்களும் கண்டு ரசியுங்கள்!!
| முகப்பு! |
| வளாகம் அருகே முகப்பு! |
![]() |
| உள்ளே நுழைந்ததும்.... |
![]() |
| பழக்கடைகள்!! |
![]() |
| மீன் கடைகள்!! |
| மீன்கள் வாங்கிய பின் அவற்றை சுத்தம் செய்ய பணம் கொடுத்து அதற்கான ரசீதை இங்கே கொடுத்தால் மீன்களை சுத்தம் செய்து தருவார்கள்! |
![]() |
| மீன்களை சுத்தம் செய்யும் இடம்!! |
| காய்கறி கடைகள்!! |





