நம் தமிழ் மண்ணில் பொங்கல் கொண்டாடி யுகங்கள் ஆகி விட்டன. பாலைவனத்தில் தான் பல வருடங்களாகவே பொங்கல் என்றாகி விட்டது. பல இடங்களில் சிதறிக்கிடக்கும் உறவுகளை ஒன்று சேர்த்து சொந்த கிராமத்திற்கு வரவழைத்து பொங்கலைக் கொண்டாட வேண்டும் என்று பல முறை நினைப்பதுடன் சரி. அதை செயலாக்க இன்னும் முடியவில்லை.
இங்கே முன்பெல்லாம் தமிழகப் பொருள்களை வாங்கவென்றே துபாய் சென்று வருவோம். இப்போதெல்லாம் ஷார்ஜாவிலேயே ' சென்னை மளிகை' என்று கடைகள் வந்து விட்டன. பண்டிகை தினங்களில் அததற்குத் தகுந்த மாதிரி பொருள்கள் வந்து விடும். மஞ்சள், பூஜை சாமான்கள், மாலைகள், வாழை இலைகள், மல்லிகைச் சரங்கள், அருமையான மதுரை குங்குமம் என்று கிடைத்து விடும். பொங்கல் சமயம் மஞ்சள் கொத்து, இஞ்சிக்கொத்து, கரும்பு என்று வந்து விடும். விலையை மட்டும் யோசிக்கவே கூடாது. கிடைக்கிறதே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டும்.
மனைவி, குழந்தைகள் என்று ஊரில் இருக்க, இங்கே தனிமையில் வாடும் நண்பர்களை மட்டும் பொங்கல் சாப்பிட அழைப்போம். எல்லோருக்கும் அலுவலம் இருக்கும். யாருக்கும் இங்கே அவ்வளவு எளிதில் விடுமுறை கிடைத்து விடாது. அதனால் அனைவருக்கும் வசதியாக, விடியற்காலையிலேயே பொங்கல் செய்து விடுவேன். விடியற்காலை 4 மணிக்கெல்லாம் குளித்து நாதஸ்வர இசைப்பின்னணியில் பொங்கல் செய்ய ஆரம்பித்தால் 7 மணிக்குள் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், பொங்கல் குழம்பு என்று முடியும்போது நண்பர்கள் எல்லாம் வர ஆரம்பித்து விடுவார்கள். அப்புறம் சிலர் இட்லி கேட்டார்கள் என்பதால் சூடான இட்லியும் சட்னியுடன் செய்து விருந்தளிக்க ஆரம்பித்தோம். ரொம்பவும் நெருங்கிய நண்பர் ஒரு முறை கேட்டுக்கொண்டதால் நியதிகள், மரபுகள் மீறி இஸ்லமிய, கிறிஸ்துவ நண்பர்களுக்காக உருளைக்கிழங்கு வறுவலும், கோழி வறுவலும் டைனீங் டேபிளுக்கு வந்தது. வந்தவர்கள் மன மகிழ்வுடன் பசியாறிச்செல்ல வேண்டும். அவ்வளவு தான்.
இந்த முறை பேரன் முன்னிலை வகிப்பதால் அவருக்காக நேரத்தை முதன் முதலாக மாற்றி எல்லோரையும் போல் நண்பகலில் பொங்கல் வைக்கிறோம்!!
வலையுலக அன்புள்ளங்கள் அனைவரது இல்லங்களிலும்
பொங்கும் பாலென மகிழ்ச்சி பொங்க
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!