சென்ற வாரம் புது வருடப்பிறப்பன்று இன்னொரு உலக சாதனையை முறியடித்து கின்னஸ் உலக சாதனை செய்தது துபாய். குவைத் தனது நாட்டு அரசு அமைப்பின் ஐம்பது ஆன்டுகள் நிறைவிற்காக 2012ம் ஆண்டு ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வாணவேடிக்கைகள் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்தது. இப்போது புது வருடப்பிறப்பன்று துபாய் தன் அழகிய அதிசயங்கள் அனைத்திலும் 99.4 கி.மீ சுற்றளவில் 4 லட்சத்து ஐம்பதாயிரம் வாணவேடிக்கைகள் நிகழ்த்திக்காட்டி கின்னஸ் சாதனை செய்து முடித்தது.
பல மாதங்களுக்கு முன்பே இந்த வாணவேடிக்கை நடப்பதாக அறிவிக்கப்பட்ட அத்தனை அதிசயங்களைச் சுற்றி அமைந்துள்ள சாதாரண ஹோட்டல்கள் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் வரை 100 சதவிகிதம் நிறைந்து விட்டது! நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில மணித்துளிகள் முன்பே அதைச்சுற்றியிருந்த முக்கிய சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு விட்டது.
துபாய் நகரின் பிரமிக்கத்தக்க, அழகிய அதிசயங்களைப் பார்க்கலாமா?
World Islands:
இது பற்பல சிறு சிறு தீவுகள் அடங்கிய ஒரு கூட்டமே. இது துபாய் கடற்கரைக்கு 4 கிலோ மீ தொலைவில் கடலினுள் அமைந்திருக்கிறது. உலக வரைபடத்தின் தோற்றத்தில் இருக்கும் இவை ஒவ்வொன்றும் உலக நாடுகளின் பெயரிலேயே விற்கப்படுகிறது. பல கோடி செலவில் உருவாக்கப்பட்டு வரும் இந்த சிறு தீவுக்கூட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வருகிறது.
Palm Jumeirah:
THE PALM ISLANDS என்பது பனைமர வடிவில் வில்லாக்கள் கட்டப்பட்ட பகுதி. மிகப்பெரிய செல்வந்தர்களால் மட்டுமே இந்த வில்லாக்களை வாங்க முடியும். இது Palm Jumeirah, Palm Jebel Ali and Palm Deira என்று மூன்று பிரிவாகக் கட்டப்படுகிறது. Palm Jumeirah முடிந்து விட்டது. தெற்கு ஆசியாவிலிருந்து வந்த, ஏறத்தாழ 40,000 தொழிலாளர்களைக் கொண்டு இத்தீவைக் கட்டமைத்தார்கள்.
.மற்ற இரண்டும் இன்னும் ஆயத்த வேலைகளில் இருக்கின்றன.
ATLANTIS, the Palm:
110 ஏக்கரில் அமைந்துள்ள, உலகப்புகழ் பெற்ற ஐந்து நட்சத்திர ரிஸார்ட் ஹோட்டல் இது. 1500 விருந்தினர் அறைகளும் 20 உணவகங்களும் மெஸபடோமியர் காலத்துக் கோவிலும் பல ஏக்கரில் அமைந்துள்ள பார்க், 65000 கடல் வாழ் உயிரினங்கள், மீன்கள் கொண்ட Aquarium மும் அடங்கிய மிகப்பெரிய ஹோட்டல் இது.
Burj Al Arab:
இது துபாயிலுள்ள ஜுமேரா கடற்கரையிலிருந்து 280 மீட்டர் தொலைவில் கடலில் அமைந்துள்ள செயற்கையான தீவு ஒன்றில் நிர்மாணிக்கப்பட்ட ஐந்து நட்சத்திர சொகுசு ஹோட்டல். அங்கிருந்து ஒரு பாலம் மூலம் கரைக்கு வருவது போல அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே ஒரு நாள் இரவிற்கு அதிக வாடகையை வசூலிக்கும் ஹோட்டலாக இது திகழ்கிறது. இதில் அமைந்துள்ள ராயல் சூட் ஒரு இரவிற்கு 48000 டாலர்கள் வாடகை என்று பிரமிக்க வைக்கிறது!!
BURJ KHALIFA [ BURJ DUBAI]:
828m, [2717 ]அடி உயரம் கொண்ட, உலகின் உயர்ந்த சாதனைச் சின்னம் இது. இதில் 30000 வீடுகள், ஏழு நட் சத்திர ஹோட்டல்கள், மிகப்பெரிய வணிக வளாகமாகிய துபாய் மால், 30 ஏக்கரில் அமைந்துள்ள BURJ LAKE எல்லாம் அடங்கியிருக்கிறது.
பல உலக சாதனைகளை இந்த BURF KHALIFA முறியடிக்கிறது. உலகின் மிக உயர்ந்த உணவகம், உலகில் அதிகதூரம் உயரே செல்லும் லிஃட் என்று பலவித சரித்திரங்கள் இதில் அடக்கம்.

![]() |
| வாண வேடிக்கைகளில் !!! |

| வாண வேடிக்கைகளில் அட்லாண்டிஸ்!! |
இது துபாயிலுள்ள ஜுமேரா கடற்கரையிலிருந்து 280 மீட்டர் தொலைவில் கடலில் அமைந்துள்ள செயற்கையான தீவு ஒன்றில் நிர்மாணிக்கப்பட்ட ஐந்து நட்சத்திர சொகுசு ஹோட்டல். அங்கிருந்து ஒரு பாலம் மூலம் கரைக்கு வருவது போல அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே ஒரு நாள் இரவிற்கு அதிக வாடகையை வசூலிக்கும் ஹோட்டலாக இது திகழ்கிறது. இதில் அமைந்துள்ள ராயல் சூட் ஒரு இரவிற்கு 48000 டாலர்கள் வாடகை என்று பிரமிக்க வைக்கிறது!!
![]() |
| வாண வேடிக்கைகளில் பூர்ஜ் அல் அராப்!!! |
828m, [2717 ]அடி உயரம் கொண்ட, உலகின் உயர்ந்த சாதனைச் சின்னம் இது. இதில் 30000 வீடுகள், ஏழு நட் சத்திர ஹோட்டல்கள், மிகப்பெரிய வணிக வளாகமாகிய துபாய் மால், 30 ஏக்கரில் அமைந்துள்ள BURJ LAKE எல்லாம் அடங்கியிருக்கிறது.
பல உலக சாதனைகளை இந்த BURF KHALIFA முறியடிக்கிறது. உலகின் மிக உயர்ந்த உணவகம், உலகில் அதிகதூரம் உயரே செல்லும் லிஃட் என்று பலவித சரித்திரங்கள் இதில் அடக்கம்.
![]() |
| வாண வேடிக்கைகளில் பூர்ஜ் கலீஃபா!! |