அசத்திய தகவல் முத்து:
நவரத்தினங்களின் உண்மைத்தன்மையைக் கண்டு பிடிக்க:
1. நல்ல முத்தென்பது நுரையற்ற பாலில் மிதக்கும்.
2. மரகதத்தை குதிரையின் முகத்தருகே கொண்டு சென்றால் அது தும்ம வேண்டும்.
3. கோமேதகத்தை பசும் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.
4. நீலக்கல்லை பச்சிலை சாற்றில் போட்டால் மெதுவாக சப்தம் எழுப்பும்.
5. வைடூரியத்தை பச்சிலை சாற்றில் போட்டால் அது நீல நிறமாக மாறும்.
6. புஷ்பராகத்தை சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரைப்பூ மணம் கமழும்.
7. பச்சைக்கல்லை குத்து விளக்கின் முன்னே வைத்தால் சிவப்பாக தெரியும்.
ரசித்த முத்து:
பாரதி பாஸ்கர் நடுத்தர வயதில் அல்லாடும் பெண்களைப்பற்றி எழுதியதில் சில வரிகள்!
ஒரு அம்மாவிடம் காட்டும் எரிச்சலை, எரிந்து விழுகிற சிடுசிடுப்பை வீட்டில் யாரிடமும் காட்டி விட முடியாது. அம்மா? அவள் மீது தான் பூமாதேவி என்ற லேபிள் குத்தியிருக்கிறதே, அதனால் அவள் தாங்கிக் கொள்வாள்.
குடும்பமே ஹாலில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருக்க, இரு அடுப்புகளில் இரு தோசைக்கல்களைப் போட்டு மாற்றி மாற்றி தோசை ஊற்றி, அடுக்களைக்கும் ஹாலுக்கும் ஓடி ஓடி சுடச்சுட பரிமாறியதும் இவளே. இன்று திருமணம் ஆன மகன், தன் மனைவி அடுக்களையில் இருந்தாலும் தானே வந்து காப்பி போட்டுக்கொண்டு, அவளுக்கும் ஒரு தம்ளர் கொடுப்பதை பார்த்தும் பாராமல் இருக்கிறவளும் இவளே!
ஆரம்பத்தில் மாமியாரிடம் பேச்சு வாங்கி கஷ்டப்பட்டு, இன்றைக்கு மருமகளிடம் பேச முடியாது நயத்தகு நாகரீகம் பாராட்டும் இவள் வாழ்வு ஒரு எழுதப்படாத சரித்திரம்.
இளமையில் எதையும் தாண்டி ஓடி விட முடிகிறது. நடுத்தர வயதிலோ உரிய மரியாதை இல்லாத உழைப்பு விழலுக்கு இரைத்த நீரோ என்ற ஏமாற்றம் தாக்குகிறது. தனக்கான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தேடும் பெண்ணின் வலியும் ஆழ்மன எக்கமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது!
ரசித்த கவிதை:
இது ஒரு சினேகிதியிடமிருந்து வந்த எஸ்.எம்.எஸ்!
நிலவை நேசி மறையும் வரை!
கனவை நேசி கலையும் வரை!
இரவை நேசி விடியும் வரை!
மலரை நேசி உதிரும் வரை!
நட்பை நேசி உயிர் பிரியும் வரை!
புன்னகைக்க வைத்த வாசக முத்து:
காதல் திருமணம்: தானாய் போய் கிணற்றில் விழுவது.
பெரியவர்கள் செய்து வைக்கும் திருமணம்: பலர் சேர்ந்து கிணற்றில் தள்ளுவது.