சென்ற வருடம் இங்கே துபாயில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் அகில உலகக் கண்காட்சி பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். புகைப்படங்களையும் இணைத்திருந்தேன்.
ஒவ்வொரு வருடம் அக்டோபர் இறுதியிலிருந்து மார்ச் வரை இது நடைபெறுகிறது.
அனைத்து நாடுகளும் அவர்களின் அரங்கங்களை அசத்துமாறு ஒவ்வொரு வருடமும் அமைத்திருப்பார்கள். இது அமைந்திருக்கும் இடத்திற்கு குளோபல் வில்லேஜ் என்று பெயர். பொதுவாய் இந்திய அரங்கம் பிரம்மாண்டமாய் இருக்கும். ஆனால் அதில் பெரும்பாலும் தமிழ்நாடு, கேரள மாநிலங்கள் கடைகள் போடுவதில்லை. வட இந்திய மாநிலங்களின் கடைகள் தான் ஆக்ரமித்திருக்கும்.
அலங்காரங்களும் விளையாட்டுக்களும் உணவகங்களுமாய் சிறப்பாய் நடந்து வரும் இந்தக் கண்காட்சியைப்பார்க்க உலகத்தின் பல நாடுகளினின்றும் மக்கள் வந்த வண்னம் இருப்பார்கள். நூற்றுக்கணக்கான நவீன ஹோட்டல்கள் எல்லாம் நூறு சதவிகிதம் நிரம்பி வழியும். இந்தியாவில் இந்த கண்காட்சிக்கு வருவதற்கென்று விசா செலவு, டிக்கட் செலவு எல்லாம் அந்த சமயத்தில் குறைவாக இருக்கும். நிறைய ஏஜென்சிகள் இந்த பயண ஏற்பாடுகளைச் செய்து தருகின்றன!
நீங்கள் ரசிக்கவென்று சில புகைப்படங்கள்!!