Sunday 11 September 2022

முத்துக்குவியல்-67!!!

 உயர்ந்த முத்து:

ஓம்கர்நாத் ஷர்மா மிகவும் சாதாரண மனிதார். வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு மன நலம் குன்றியிருக்கும் ஒரே மகனுடனும் மனைவியுடனும் சிரமமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்.  ஆனால் அவர் ஒரு அசாதாரண வேலையை அனுதினமும் செய்து கொண்டிருக்கிறார். 


80 வயதான ஏழ்மையான இவர் தனிப்பட்ட முறையில் சிறு வ‌யதிலேயே ஒரு விபத்தில் கால்கள் ஊனம் அடைந்திருந்தாலும் ஏழை மகக்ளுக்கு உதவி செய்வதற்காகவே தினமும் பல கிலோ மீட்டர்கள் அந்த ஊனத்துடன்  நடக்கிறார். வசதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் மக்கள் வீட்டில் தேவையில்லாமல் வைத்திருக்கும் மருந்துகளை இவர் தினமும் சேகரித்து அவற்றை மருந்து வாங்க இயலாமல் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு கொடுக்கிறார்.எந்த வித சுநலமுமில்லாமல் ஆதாயமுமில்லாமல் ஏழை மக்களுக்காகவே தினமும் பல கிலோ மீட்டர்கள் நடந்து மருந்துகளை சேகரித்து எழைகளுக்கு கொடுத்து உதவுகிறார்.


 உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவைச்சேர்ந்த இவர் இளம் வயதில் ரத்த வங்கியில் வேலை பார்த்தவர். மக்கள் இவரை ' மெடிசின் பாபா' என்றழைக்கிறார்கள். 15 வருடங்களாக இந்தத்தொண்டினை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். அவரது சேவையைக்கண்டு நெகிழ்ந்து போன பல தரப்பு மக்களும் தினமும் அவர் இருக்கும் இடத்துக்கு வந்து தாங்களே தங்களிடம் தங்கிப்போன மருந்துகளை மனமுவந்து தருகிறார்கள். 

மருத்துவ முத்து:

சமீபத்தில் ஊரில் இருந்த போது, எங்கள் காரை ஓட்டுவதற்கு அவ்வப்போது வீட்டிற்கு வரும் ஓட்டுனரிடம் ஒரு முறை பேசிக்கொண்டிருந்த போது, மிகவும் உடல் நலிந்திருந்த அவரின் மாமனாரைப்பற்றி விசாரித்தேன். அவர் இப்போது நலமுடனிருப்பதாகவும் அவரின் சர்க்கரை நோய் அவரை விட்டு நீங்கி விட்டதாயும் தெரிவித்தார். எப்படி சர்க்கரை முற்றிலும் நீங்கியதென விசாரித்த போது, அவர் தெரிவித்த விபரம்:


தேன் கனி என்ற ஒரு பிரவுன் கொட்டை, [ படத்திலிருப்ப்து போல] நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த கொட்டையை கவனமாக உடைத்தால் வெள்ளரி விதை போல ஒன்று உள்ளிருக்கும். அதை காலையில் வெறும் வயிற்றில் ஒரு விதையை சிறிது இலேசான சூட்டுடன் கூடிய வென்னீருடன் சேர்த்து விழுங்கி விடவும். இது போல 48 நாட்கள் சாப்பிட்ட பின் டெஸ்ட் செய்து பார்த்தால் சர்க்கரை அளவு மிகவும் குறைந்திருக்கும். சிலர் காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றும் சாப்பிடுவார்கள். இவரின் மாமனார் காலையில் மட்டும் ஒரு விதை சாப்பிட்டு வந்தாயும் தற்போது சர்க்கரை அடியோடு இல்லையென்றும் மாத்திரைகள் எல்லாவற்றையும் நிறுத்தி விட்டதாயும் சொன்னார். இதை கடித்து சாப்பிடுவது கடினம். ஏனென்றால் அத்தனை கசப்பாக இருக்கும். தொடர்ந்து சாப்பிடும்போது சர்க்கரை முற்றிலும் நீங்கி விட்டதென்றும் சொன்னார்..

அருமையான முத்து:

பொதுவாய் சர்க்கரை நோய்க்காக மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகள் அதிக பக்க விளைவுகள் கொண்டவை. ஆனால் மருத்துவர்கள் யாரும் அந்த பக்க விளைவுகள் பற்றி பேசுவதில்லை. இந்த மருந்துகளை தொடங்கியதிலிருந்தே நிறைய சர்க்கரை நோயாளிகளுக்கு வயிற்று பிரச்சினைகள் ஆரம்பமாகி விடும். அஜீரணம், வயிற்றுப்போக்கு , பல வகையான வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் என்று அவதிப்படுவார்கள். ஆனால் நிறைய பேருக்கு காரணம் புரியாது. சிலருக்கு சிறுநீரகமும் பாதிக்கப்படும். சிறுநீரில் புரதம் வெளியேறத்தொடங்கி விடும். இது பற்றியும் மருத்துவர்கள் அடுத்தடுத்த பரிசோதனைகளில் கண்டு பிடித்தால்கூட சொல்ல மாட்டார்கள். கிரியாட்டினின் கூடியிருப்பதாக இரத்தப்பரிசோதனை முடிவில் வந்த பிறகு தான் சொல்லுவார்கள். 

இங்கேயுள்ள மருத்துவர் மட்டும் எந்தெந்த சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் என்னென்ன பாதிப்புகள் கொடுக்கும் என்று தெளிவாக, அருமையாக சொல்லியிருக்கிறார். அதற்கான வீடியோ தான் இது. 

9 comments:

ஸ்ரீராம். said...

தேன்கனி கோட்டை பற்றிய செய்தி ஆச்சர்யம் அளிக்கிறது.  இதுபோல வேறு சில மருந்துகளும் முன்னர் சொல்லப்பட்டிருக்கின்றன.  ஒருவருக்கு ஒன்று வேலை செய்தால், எல்லோருக்கும் அது பயனளிக்குமா, தெரியவில்லை.

ஸ்ரீராம். said...

மருந்துகள் சேகரித்து மக்களுக்குச சேவை செய்பவர் பாராட்டப்பபடவேண்டியவர் -எ தூவும் கால்கள் இலலாத நிலையிலும், மனநிலை சரியில்லாத மகன் மற்றும் மனைவியுடன் ஏழ்மை நிலையில் வாழ்ந்தாலும்.  காணொளி பயனுள்ளது.

ராமலக்ஷ்மி said...

‘மெடிசின் பாபா’ ஓம்கர்நாத் ஷர்மாவின் சேவை மகத்தானது. தேன் கனி விதையின் மருத்துவப் பலன் பற்றியத் தகவல் பலரையும் சென்றடையட்டும். காணொளியிலுள்ள தகவல்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

திண்டுக்கல் தனபாலன் said...

காணொளி அருமை... நன்றி...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

தேன் கனி கொட்டை பற்றி பகிர்ந்ததற்கு நன்றி.
மெடிசின் பாபா வியக்கவைக்கிறார்.

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் ஸ்ரீராம்! தேன்கனி கொட்டையைப்பற்றி முன்பு கேள்விப்பட்டிருக்கிறேன். இதை நேரடியாகவே பயன்படுத்தி ஒருவர் பலன் கண்டதால் தான் ஆதாரத்துடன் இந்த விஷயம் பற்றி எழுதினேன். யாருக்காவது முழுமையான பலன் கிடைத்தால் மகிழ்ச்சி தான்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துப்பகிர்வுக்கு அன்பு நன்றி கிரேஸ்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துப்பகிர்வுக்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!