ஐக்கிய அரபு அமீரகத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கான மக்கள் தொகையில் இந்தியர்களே முதலிடம் வகிக்கின்றனர். இங்கு இந்துக்களுக்காக அபுதாபி அருகே பிரமாண்ட கோயில் கட்டப்பட்டு வருகிறது. பாரத பிரதமர் மோடி ஏற்கனவே இதற்கு அடிக்கல் நாட்டியிருப்பது பற்றி ஏற்கனவே ஒரு பதிவெழுதியிருக்கிறேன். அதேபோன்று, 2வதாக புதிய கோயில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தக நகராக கருதப்படும் துபாய் நகரத்தின் ஜெபல் அலி பகுதியில், 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.149 கோடி செலவில் பிரம்மாண்டமான இந்து கோயில் கட்டமைப்பு பணிகள் நிறைவு பெற்று வரும் அக்டோபர் மாதம் 4ந்தேதி திறக்கப்பட உள்ளது.
சீக்கிய குருநானக் தர்பார் அருகே அமைந்துள்ளள இந்த கோயில் பாரம்பரிய இந்திய கலை நுணுக்கங்களுடனும் சற்று அரேபிய கலையழகுடனும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
1950 களில் திறக்கப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பழமையான இந்து கோவில்களில் ஒன்றான பர் துபாயின் ஸூக் பனியாஸில் உள்ள சிந்தி குரு தர்பார் கோயிலின் விரிவாக்கம் இந்த கோயில்.
இது வரை துபாயில் இயங்கி வரும் பழமையான குருநானக் தர்பார் |
துபாய் நகருக்குள் இருக்கும் பழைய துபாயிலுள்ள சிவன் கோவிலில் |
இந்திய தொழிலதிபரும் சிந்தி குரு தர்பார் கோயிலின் அறங்காவலர்களில் ஒருவருமான ராஜு ஷிராஃப் “ “உள்ளூர் பொருளாதாரத்திற்கு நாங்கள் திருப்பித் தர விரும்புகிறோம். மத சகிப்புத்தன்மையைக் கொண்டாடியதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைமைக்கு நாங்கள் வைத்திருக்கும் நன்றியைத் திருப்பிச் செலுத்துவதற்கான எங்கள் வழி இது” என்று கூறியுள்ளார்.
வழிபாட்டாளர்கள் 4,000 சதுர அடி விசாலமான விருந்து மண்டபத்தை கலாச்சார நிகழ்வுகள், மதக் கூட்டங்கள் மற்றும் சமூக கூட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.
இந்த கோயில் கிழக்கு நோக்கிய கட்டமைப்பாகும், இது இந்திய கோயில் கட்டிடக்கலை மற்றும் இந்து வாஸ்து சாஸ்திரத்தின் விதிமுறைகளின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவில் கட்டமைப்பில் இரண்டு அடித்தளங்கள் உள்ளன, ஒரு தரை தளம் மற்றும் முதல் தளம். கோயிலின் மொத்த உயரம் 24 மீட்டர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..