துபாயின் உலகப்புகழ் பெற்ற ஷேக் சாயெத் சாலையில் எமிரேட்ஸ் டவர் அருகில் துபாயின் புதிய அடையாளமாக எதிர்கால அருங்காட்சியகத்தின் கோலாகல திறப்பு விழா22-02-22 அன்று நடைபெற்றது. இதனை அமீரக துணை அதிபர் ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் தொடங்கி வைத்தார்.
இந்த அருங்காட்சியகம் 235 அடி உயரம் கொண்டது. கோள வடிவில் இதன் அமைப்பு மிகவும் வித்தியாசமானது. உலகின் மிக அழகான 14 அருங்காட்சியகங்களில் இதுவும் இடம் பெற்றுள்ளது. வெளிப்புறத்தில் அரபிக் வட்டெழுத்துக்களுடன் கலை நேர்த்தியுடன் இது உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் ஏழு தளங்கள் உள்ளன. இதில் ஐந்து தளங்களில் பார்வையாளர்களை பிரமிப்பூட்டும் வகையில் பல்வேறு காட்சியமைப்புகள் இடம் பெற்றுள்ளன. இதை முழுதும் பார்வையிட 2 முதல் 3 மணி நேரம் பிடிக்கிறது. ஒரு தளம் முழுவதும் குழந்தைகளுக்கானது.அருங்காட்சியகத்தில் 2071 ஆண்டை நோக்கிய விண்வெளி தொழ்ல் நுட்பங்கள், சுற்றுச்சூழல், உயிர் பொறியியல், சுகாதாரம், வாழ்வியல் நலம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் காட்சியமைப்புகள் இடம் பெற்றுள்ளன. உள்ளே நுழைந்தால் சினிமா செட்டுக்குள் நுழைந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
உதாரணமாக, ' நியூ மூன்' என்ற தலைப்பில் உள்ள காட்சியமைப்பு நிலவை எப்படி முழு கிரகத்துக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக மாற்ற முடியும் என்பதை காட்டுகிறது. அதே போல பூமியிலிருந்து 600 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து பார்த்தால் எப்படி இருக்குமோ அதனை தத்ரூபமாக அங்குள்ள ஒரு அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேதகு ஷேக் முகமது பின் ராஷித் அவர்களால் எழுதப்பட்ட ஒரு கவிதை அரபிக் காலியோகிராபி வடிவத்தில் இதன் மீது பொறிக்க்ப்ப்பட்டுள்ளது. அதன் பொருள்:
" நாம் நூறாண்டுகள் வாழ முடியாமல் போகலாம். ஆனால் நாம் கற்பனைத்திறனுடன் உண்டாக்கியிருக்கும் ஆக்கங்கள் நாம் மறைந்த பின்னும் நமக்குப்பின்னால் உயிர்ப்புடனிருக்கும். எந்த விலைமதிப்பற்ற கண்டுபிடிப்பும் அதன் செயலாக்கமும் யார் அதை கற்பனை செய்து, வடிவமைத்து அதை செயல்படுத்துகிறார்களோ, அவர்களிடம் தான் இந்த உலகின் எதிர்காலமே அடங்கியிருக்கிறது."
இந்தக்கட்டிடத்தின் பரப்பளவு 30,000 சதுர மீட்டர். அதில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஆல் ஆன பரப்பளவு 17,000. சதுர மீட்டர். 14 கிலோ மீட்டர் நீளத்திற்கு லெட் லைட்டிங் இந்தக் அக்ட்டிடத்தில் செய்யப்பட்டுள்ளது. 4000 மெகா வாட்ஸ் சோலார் பவர் இந்த மியூசியத்திற்காக உபயோகிக்கப்பட்டுள்ளது. இதைச் சுற்றியுள்ள தோட்டத்தில் 80 வகை செடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தூண்களே எங்குமில்லாமல் உருவாக்கப்பட்ட சாதனை இது.
இதன் முன்னால் 3 விரல்களைக் காண்பிக்கும் ஒரு கை முன்னிலைப்படுத்துள்ளது. " WIN, LOVE AND VICTORY! " என்பதைக்குறிக்கிறது!!
இதற்காக வானில் பறந்து சென்று பல்வேறு இடங்களில் இறங்கி பலருக்கும் அழைப்பிதழ்களை வழங்கினார் ஜெட் மனிதர் ஒருவர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் பெயர் ரிச்சார்ட் பிரவுனிங். உடலில் ஜெட் பாக் எனப்படும் சூட் அணிந்து 2019ம் வருடம் நவம்பர் மாதம் மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து ஏற்கனவே இவர் கின்னஸ் சாதனையை ஏற்படுத்துயுள்ளார்.
எதிர்காலம் இப்படித்தானிருக்கும் என்பதற்கு அடையாளமாக இவர் வானில் பறந்து அழைப்பிதழ் வழங்கினார் என்று சொல்லப்படுகிறது.
22 comments:
பறக்கும் மனிதர் - வியப்பு.
படங்கள் - பிரம்மாண்டம்.
தகவல்கள் - சுவாரஸ்யம்.
ஆகா...!
மனோ அக்கா! வாவ்! என்ன ஒருபிரம்மாண்டம்! தூண்கள் இல்லாமல் கட்டப்பட்டது வியப்பு. மூன்று விரல்களின் பொருள் அருமை. எல்லாத்தையும் விட நான் மிகவும் ரசித்தது மேதகு ஷேக் முகமது பின் ராஷித் அவர்களால் எழுதப்பட்ட கவிதை. அதன் பொருள் அழகான பொருள் பொதிந்த வரிகள், உண்மைதான் இல்லையா.
கீதா
பிரமிக்கத்தக்க கட்டிடமாக ஜொலிக்கிறது.
வளரட்டும் என்னையும் வாழ வைத்த எமராத். (Emirates)
சூப்பர் பதிவு. இந்த எதிர்கால மியூசியம் பற்றியும், பறக்கும் மனிதன் கொடுத்த இன்விடேஷன் பற்றியும் என் அக்கா பெண் கூறினாள். கனடாவிலிருந்து இந்தியா திரும்பும் வழியில் துபாயில் ஸ்டாப் ஓவர் எடுக்கலாம் என்று ஒரு எண்ணம் இருக்கிறது. பார்க்கலாம்
அழகான படங்கள்+விவரிப்பு. இந்த மியூசியம் பற்றியும் பறக்கும் மனிதன் கொடுத்த இன்விடேஷன் பற்றியும் என் அக்கா பெண் கூறினாள். கனடாவிலிருந்து இந்தியா திரும்பும் வழியில் துபாயில் இறங்கி விட்டு வரலாம் என்று ஒரு ஐடியா இருக்கிறது. அப்போது உங்களையும் சந்திக்கலாம்.
படிக்கப் படிக்க வியப்பு மேலிடுகிறது
படங்களும் தகவல்களும் மிகவும் சிறப்பு. தூண்களே இல்லாமல் கட்டப்பட்டது என்பதும் வியப்பு. ஒவ்வொரு விரலும் சொல்லும் பொருளும் அருமை. கவிதைக்கான பொருள் நன்று. நாங்க துபாயெல்லாம் வந்தது இல்லை.(என்னமோ உலகம் சுத்தினாப்போலத் தான். ம.சா. கத்தல்) இத்தனைக்கும் நெருங்கிய உறவுகள் இருக்காங்க. வாய்ப்பு நேரவில்லை.
வானில் பறந்து அழைப்பிதழ் கொடுத்தவர் வியக்க வைக்கிறார்.
நாளை இப்படி இருக்கும் என்பதை படிக்கும் போதுநிறைய பேர் பறப்பது போல காட்சி கண்ணில் வருகிறது.
கட்டிட கலை பிரமிக்க வைப்பது உண்மை.
படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
பதிவின் தகவல்கள் அனைத்துமே வியப்பு.. வியப்பு..
கூடவே - எதிர் வரும் நூற்றாண்டுகள் எப்படியிருக்குமோ என்ற கவலையும் ஏற்படுகின்றது..
பிரமிக்கவைக்கும் கட்டிடம். பறக்கும் மனிதர் வாழ்க.
பதிவை ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!
கருத்திட்டமைக்கு அன்பு நன்றி தனபாலன்!
ரசித்து பாராட்டி, கருத்துரை சொன்னதற்கு அன்பு நன்றி கீதா!
பிரமிப்புடன் ரசித்து எழுதியதற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!
என்ன இருந்தாலும் இங்கே பல வருடங்கள் வாழ்ந்தவர் இல்லையா நீங்கள்?
ரசித்துப் பாராட்டிய இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன்!
எப்போது கனடாவிலிருந்து கிளம்புகிறீர்கள்? அவசியம் துபாயில் ஸ்டாப் ஓவராக வைத்துக்கொள்ளுங்கள்! அவசியம் நாம் சந்திக்கலாம்!
அடுத்த வாரத்திலிருந்து ஜூன் வரை மட்டும் தஞ்சையில் இருப்பேன்.
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் கரந்தை ஜெயக்குமார்!
ரசித்து இனிய கருத்துரை சொன்னதற்கு அன்பு நன்றி கீதா சாம்பசிவம்!
துபாயை அவசியம் ஒவ்வொருத்தரும் பார்க்க வேண்டும். உலகத்தின் பல அதிசயங்கள் இங்கே தானிருக்கின்றன!
பாராட்டி, அழகாய் கருத்துரையும் சொன்னதற்கு அன்பு நன்றி கோமதி அரசு!
வாருங்கள் சகோதரர் துரை செல்வராஜ்!
உங்கள் பயம் , கவலை சரியானது தான்! ஆனால் மாற்றங்களை யாருமே மாற்ற முடியாதே!
பிரமிக்க வைக்கும் தகவல்கள்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
தூண்களற்ற கட்டுமானம் வியப்புக்குரியது. படங்களும் தகவல்களும் நன்று.
Post a Comment