துபாயின் முன்னணி பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார இடங்களில் ஒன்றான குளோபல் வில்லேஜ் துபாயில் சுற்றுலா பயணிகளைக் கவரும் விதமாக செயல்பட்டு வருகிறது. குளோபல் வில்லேஜ் உலகெங்கும் உள்ள ஷாப்பிங், பாரம்பரிய உணவு, பொழுதுபோக்கு அனுபவங்களைத்தரும் பல நாடுகள் ஒருங்கிணைந்த திறந்தவெளி அரங்கமாகும். கடந்த அக்டோபர் 5ம் தேதி திறக்கப்பட்ட இந்த குளோபல் வில்லேஜ் ஏப்ரல் மாதம் 10ம் தேதி வரை வரை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும்.
முதன் முதலாக் 1997 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு துபாய் கிரீக் பகுதியில் அரங்கேறியது. 2005 ஆம் ஆண்டு முதல் ஷேக் ஜாயத் சாலையில் உள்ள தற்போதுள்ள நிரந்தர இடத்தில் குளோபல் வில்லேஜ் செயல்பட்டு வருகிறது. தினமும் மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை செயல்பட்டு வருகிறது. 90 நாடுகளைச் சேர்ந்த பண்பாட்டு அடையாளங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இடம், உலகின் மிகப்பெரிய சுற்றுலா, ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு பூங்காவாகக் கருதப்படுகிறது. இந்தியா, சவுதி அரேபியா, ஏமன், பாகிஸ்தான், சிரியா, லெபனான், எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முக்கியமானதாகும். ஒவ்வொரு ஆண்டும் இங்கு 50 லட்சம் மக்கள் வந்து செல்கின்றனர். இந்த குளோபல் கிராமம் 17, 200,000 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. சீனியர் சிட்டிசன்களுக்கு நுழைவுக்கட்டணமில்லை.
துபாயில் ஒவ்வொரு வருடமும் நான் மிக விரும்பிப்பார்ப்பது இந்த குளோபல் வில்லேஜ் மட்டுமே. ஆனாலும் கோவிட் காரணமாக 2019, 2020ம் வருடங்களில் செல்லவில்லை. குளோபல் வில்லேஜும் இயங்காமலிருந்தது. 2021 இறுதியில் மறுபடியும் சென்று வந்தோம். வழக்கம்போல் பாதி இடங்கள் மட்டுமே பார்க்க முடிந்தது. உங்களுக்காக இதோ சில அழகான புகைப்படங்கள்!
|
நுழைவாயில் |
|
உள்ளே நுழைந்ததும் பல நாட்டு புகழ்பெற்ற சின்னங்கள் வரவேற்கும்!
|
|
அழகிய செவ்விந்திய மனிதன்
|
|
ஈபில் டவர்
|
|
துருக்கி நாட்டு அரங்கம் |
|
ஏமன் நாடும் பஹ்ரைன் நாடும் அடுத்தடுத்து!
மீதமுள்ள புகைப்படங்கள் அடுத்த பதிவில்....!! |