Thursday, 31 December 2020

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

 


2020ம் ஆண்டு இன்னும் சிறிது நேரத்தில் முடியப்போகிறது! துன்பங்களும் இழப்புகளும் போராட்டங்களுமாய் இந்த வருடம் கழிந்து சென்றது! கொரோனா என்னும் தொற்றால் கிடைத்த அனுபவங்கள், பாடங்கள் ஒருவேளை நமக்குக் கிடைத்த நன்மைகள் பட்டியலில் சேரலாம். இன்னொன்று, கொரோனாவால் பிரயாணங்கள், திருமணங்கள், துக்கங்களை முதலியவற்றைத்தவிர்த்ததினால் அதிக செலவுகள் செய்யாமல், இருப்பதை வைத்துக்கொண்டு பல மாதங்கள் ஓட்டியது அடுத்த நன்மை! இப்படிப்பட்ட சில நன்மைகள் தவிர, சுற்றிலும் நோக்கினால் உலகெங்கும் பொருளாதார இழப்பை சமாளிக்க முடியாமல் ஒவ்வொரு நாடும் திணறுகின்றன. விழுந்த அடிகளை சமாளித்து மீண்டு எழுவதற்கு பல திட்டங்களை வகுக்குகின்றன. உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலையை விட்டு அனுப்பப்பட்டார்கள்! ஆயிரக்கணக்கான தொழில்கள் மூடப்பட்டன! 



இந்த 2021 ஆண்டாவது அனைத்து துன்பங்களும் நோய்களும் விலகி ஓடி, எல்லோர் வாழ்க்கையிலும் வசந்தமும் நன்மைகளும் வர வேண்டும்! வீட்டிலேயே ஆன்லைன் வகுப்புகளில் அடைந்து கிடைக்கும் குழந்தைகள் முன்போல் துள்ளிக்குத்து பள்ளிகளுக்கு செல்வதும் ஆசை தீர ஓடியாடி விளையாடுவதும் நடந்தேற வேண்டும்! 


அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


7 comments:

ஸ்ரீராம். said...

நன்றி.  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மனோ அக்கா.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. தங்களுக்கு மனம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு நம் அனைவரின் வேண்டுதல்களின்படி வளமையுடன் வளம் சேர்க்கட்டும். ஆண்டவனை நானும் பணிவுடன் பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Anuprem said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அக்கா ..

அனைவருக்கும் இந்த ஆண்டு சிறப்பாக மகிழ்வாக அமைய எங்களது வாழ்த்துக்களும் ...

Geetha Sambasivam said...

அனைவரின் பிரார்த்தனைகளும் பலித்து இந்தப் புத்தாண்டு அனைவர் வாழ்க்கையிலும் அமைதியையும் சந்தோஷத்தையும் கொண்டு வரட்டும்.இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

மனோ சாமிநாதன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அளித்த அனைவருக்கும் அன்பு நன்றி!!