அதிசய முத்து:
அமெரிக்காவின் வடக்கேயுள்ள வடக்கு அலாஸ்காவில் உள்ள பரோ என்னும் நகரம்[ utqiagvik] டிசம்பரில் ஒவ்வொரு வருடமும் இருளில் மூழ்குகிறது. மார்ச் முடிய சூரியனைக்காணாமல் இருளிலேயே மூழ்கியிருக்கும் இந்த நகரம் சுமார் 4000 மக்கள் வாழும் நகரம். நார்மல் வெப்ப நிலை அந்த சமயத்தில் சைபருக்கும் கீழே செல்லுகிறது. இந்த நகரத்தில் கிடைக்கும் எண்ணெய் வளமும் ஆய்வுகள் ஆராய்ச்சிக்கூடங்களும் மக்களை எப்போதும் வசதியாக வாழ வைக்கிறது. சுமார் 67 நாட்களுக்கு சூரியன் உதிக்காமல் இருக்கும் இந்த நகரம்.
67 நாட்களுக்குப்பிறகு முதல் சூரிய வெளிச்சம் வரும்போது சூரியனின் ஒரு சிறு பகுதி மட்டும் தான் தெரியுமாம். அது ஒரு மணி நேரம் மட்டுமே நீடிக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த சூரிய வெளிச்சமும் வெப்பமும் 20 நிமிடங்கள் கூடுமாம். இப்படியே அதிகரித்து அடுத்த வாரம் சூரிய வெளிச்சம் 4 மணி நேரம் நீடித்திருக்குமாம். இப்படியாக கூடி, மே மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து ஆகஸ்ட் வரை இரவு நேரத்திலும் மறையாது சூரியன் இருப்பதால் ‘ நள்ளிரவு சூரிய நகரம்’ என்றும் இந்த நகரம் அழைக்கப்படுகிறது. ஆகஸ்ட் மாத நடுவில் சிறிது சிறிதாக அஸ்தமனம் ஆரம்பிக்கிறது. முதல் சில நாட்கள் சில மணி நேரங்கள் மட்டுமே இருளில் மூழ்கும் நகரம் படிப்படியாக சூரிய வெளிச்சம் குறைந்து நவம்பர் இறுதியில் இருளில் மூழ்குகிறது.
சிரிப்பு முத்து:
டாம் என்ற பூனையும் ஜெர்ரி என்ற எலிக்குமான சண்டைகள் கார்ட்டூன்களாக எழுபதுகளில் தொலைக்காட்சிகள் அனைத்திலும் வந்து புகழ் பெற்றது. இப்போதும்கூட அதன் வீடியோக்களை மக்கள் அவ்வப்போது பார்த்து ரசிப்பதுண்டு. அந்த அளவிற்கு அவற்றின் தாக்கம் மக்களிடம் இப்போதும்கூட இருக்கிறது. இந்த வீடியோ இந்தியாவிற்கும் சைனாவுக்குமான பிரச்சினைகளை மையமாக வைத்து தயாரித்து சிரிக்க வைத்துள்ளார்கள். நான் மிகவும் ரசித்தேன். நீங்களும் ரசியுங்கள்.
கவிதை முத்து:
இப்படியும் கூட கவிதை எழுதலாம். இந்த காலத்து சிறுவர்களின் கற்பனை திகைக்க வைக்கிறது!வாட்ஸ் அப்பில் வந்தது.
இசை முத்து:
சங்கர் மஹாதேவன் பாடிய ‘ உன்னைக் காணாது நான் “ பாடல் தனை எல்லோரும் கேட்டு ரசித்திருப்பீர்கள். அதில் பல குரல்கள், பல வாத்திய இசைகள் சங்கர் மகாதேவனோடு கூடவே இழைந்து நம்மை மெய்மறக்க வைக்கும். இதன் கீழே ஒருவர் ‘ என்ன அழகு என் தமிழ்! என் தமிழ் நதி போல எல்லாவற்றையும் தன்னோடு சேர்த்துக்கொள்ளும்’ என்று குறிப்பிட்டிருப்பார். அது தான் உண்மை! அதோடு ஸ்வரங்களும் இணையும்போது மொழிக்கும் தேசத்துக்கும் அப்பாற்பட்ட இசை இழைந்து நம்மையும் மயக்குகிறது.