Thursday, 24 August 2017

முத்துக்குவியல்-47!!!

மகிழ்ச்சி முத்து:

கடந்த ஜுலை மாதம் எங்கள் இல்லத்தில் புதியதாய் ஒரு பூ பூத்திருக்கிறது! பேத்தி விஹானா பிறந்துள்ளார். அதனால் மீண்டும் உலகம் வண்ண‌மயமாகியுள்ளது!


மனிதநேய முத்து:

பணம், காசு என அலையும் இந்த காலத்திலும் பணத்தை ஒரு பொருட் டாகப் பார்க்காமல் கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு மனிதநேயத்துடன் மருத்துவம் பார்த்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த டாக்டர் வி. ராமமூர்த்தி.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் வசித்து வரும் இவருக்கு சொந்த ஊர் முடிகொண்டான் கிராமம். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு தற்போது வயது 79. மயிலாடுதுறையில் அதே இடத்தில் 1959-ம் ஆண்டு முதல் மருத்துவம் பார்த்துவரும் இவரை தெரியாதவர்கள் அந்த ஊரில் யாரும் இருக்க முடியாது.
இன்றும் அதே துடிப்புடனும் அக்கறையுடனும் சிகிச்சைக்கு வருபவர்களை அணுகி மருத்துவம் செய்கிறார். சிகிச்சை பெற கட்டணமாக இவ்வளவு தர வேண்டுமென இவர் கேட்பதில்லை. அவர் பணத்தை கைநீட்டியும் வாங்குவதில்லை. தங்களால் எவ்வளவு முடியுமோ (ரூ.5 அல்லது ரூ.10 தான்) அவரது மேஜை மீது வைத்துச் செல்லலாம். காசு இல்லை என்றாலும், போயிட்டு வா என தோளைத் தட்டி அனுப்பி விடுவார். இவர் எழுதும் மருந்துகளும் ரூ.20 அல்லது ரூ.30-க்குள்தான் இருக்கும்.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்தால் நீ எந்த ஊரு, என்ன படிக்கிற, எங்க தங்கியிருக்கிற என வாஞ்சையோடு விசாரித்து விட்டு, ஊருக்கு செல்ல செலவுக்கு பணம் வைத்திருக்கியா, இந்தா இதை வைச்சுக்கோ என ரூ.10 அல்லது ரூ.20 கொடுத்து அனுப்புவார் டாக்டர் ராமமூர்த்தி.

எப்படி உங்களால் இது முடிகிறது என அவரிடமே கேட்டதற்கு அவர் “தி இந்து” நிருபரிடம் கூறியது:

சென்னை மருத்துவக் கல்லூரியில்தான் மருத்துவம் படித்தேன். அங்கு பேராசிரியர்களாக இருந்தவர்கள் மருத்துவத் துறையில் மிகப்பெரிய ஜாம்பவான்கள். இவர்கள் யாரும் தனியாக கிளினிக் வைத்து பணம் சம்பாதித்தவர்கள் அல்லர். இவர்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுத்ததெல்லாம் மருத்துவத்தை மனிதாபிமான அடிப்படையில் செய்யுங்கள், பணத்துக்காக செய்யக் கூடாது என்பதுதான்.

ஏழைகளிடம் காசு வாங்காதே, ஒத்தாசையாக இரு என 45 ஆண்டுகளுக்கு முன்பே காஞ்சி மகா பெரியவர் கூறினார். அதை இன்றும் கடைப்பிடித்து வருகிறேன்.

என்னிடம் வரும் மக்கள் பாசத்துடன் வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்கிறேன். மருத்துவத் தொழில் இன்று அப்படி இல்லை. பணம் கொடுத்துதான் மருத்துவராக வேண்டியிருக்கிறது. அந்த பணத்தை திரும்ப சம்பாதிக்க மக்களிடம் பணம் அதிகமாக வாங்க வேண்டியிருக்கிறது.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 20 ஆண்டுகள் பணியாற்றினேன். அப்போது பல்வேறு பணிகளுக்காக ஏராளமானோருக்கு லட்சக்கணக்கான கையொப்பங்களை (அட்டெஸ்டெட்) இலவசமாகவே போட்டிருக்கிறேன்.

நான் பெற்ற பெரும் பாக்கியமே எனது மனைவி நீலாதான். எனது மனிதாபிமான சேவைக்கு எனது மனைவியும் முக்கிய காரணம். திருமணமானதிலிருந்து இதுவரையில் பணம் அதிகமாக சம்பாதிக்க வேண்டுமென அவர் கேட்டதில்லை. அதனால்தான் மருத்துவத் தொழிலை சேவையாக செய்ய முடிகிறது. நான் சொத்துகள் எதுவும் சேர்க்கவில்லை, ஆனால் ஏழை மக்களின் பாசத்தைத்தான் சொத்தாக சேர்த்துள்ளேன்.

எனது மகன் சீனிவாசன் மருத்துவம் படித்துவிட்டு சென்னையில் சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். மயிலாடுதுறையிலிருந்து வருகிறோம் என யார் சென்றாலும், அவர்கள் மீது தனி அக்கறை எடுத்து மருத்துவம் செய்கிறார். பலரும் இங்கு வந்து அதை என்னிடம் சொல்லும்போது எனக்கு பெருமையாக இருக்கும். அவன் கார் வாங்கியுள்ளான், பங்களா வாங்கியுள்ளான் என்பதில் எனக்கு திருப்தி இல்லை. அவனும் ஏழைகளுக்கு உதவுகிறான் என்பதில்தான் எனக்கு திருப்தி என்றார் மனிதநேய மருத்துவர் ராமமூர்த்தி.

தகவல் முத்து:

பூண்டு:

பூண்டை பற்றி 3200 பதிப்பிக்கபட்ட மருத்துவ ஆய்வுகள் நிகழ்த்தபட்டுள்ளன. சுருக்கமாக அவை சொல்லும் செய்தி "உலகில் எல்லாரும் தினம் நாலைந்து பூண்டு பற்கள் சாப்பிட்டால் மாரடைப்பு மரணங்கள் 25% குறையும்" என்பதுதான். பூண்டின் மகிமை அதில் உள்ள அலிசினில் உள்ளது.
பூண்டு ரத்த அழுத்தத்தை 10 புள்ளிகள வரை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்ற‌ன. டயஸ்டாலிக், சிஸ்டாலிக் இரண்டு வித பிரஷர்களையும் பூண்டு குறைக்கிறது
பூண்டு டி.என்.ஏ ஆக்சைடைசேஷனால் பாதிப்படைவதை தடுக்கிறது

பூண்டு ட்ரைகிளிசரைடு மற்றும் மொத்த கொலஸ்டிரால் இரண்டையும் குறைக்கும். எல்டிஎல், எச்டிஎல்லை குறைப்பது இல்லை.

இதயத்துக்கு ரத்தத்தை கொன்டு செல்லும் என்டொதெலியம் எனும் நரம்புகளின் லைனிங்கை பூண்டு விரிவாக்குகிறது. இதனால் இதயத்துக்கு செல்லும் ரத்த ஓட்ட அளவு அதிகரிக்கும்.

பூண்டின் கான்சர் எதிர்ப்பு தன்மையை பற்றி 600 ஆய்வுகள் நிகழ்த்தபட்டுள்ளன,
பூண்டு சாப்பிட்டவர்களுக்கு கலோன் கான்சர் வருவது 41% குறைகிறது
வயிற்று கான்சர் வருவதை பூண்டு 47% குறைக்கிறது
நுரையீரல் கான்சர் வருவதை 22% தடுக்கிறது
பிரெயின் கான்சர் வருவதை 34% தடுக்கிறது
விமான பயணத்தில் வரும் இன்ஃபெக்ஷனை தடுக்க பூண்டு உள்ள ஸ்ப்ரே பயன்படுத்தபடுகிறது
குளிர்காலத்தில் பூண்டு சபபிட்டால் சளிபிடிப்பது பாதியாக குறையும்.
ஆய்வு ஒன்றில் சுகர் உள்ளவர்களுக்கு தினம் ஒரு பூண்டு கொடுக்கபட்டதில் சராசரியாக 138 இருந்த சுகர் ஒரு மாதத்தில் 113 ஆக குறைந்தது
பூண்டு தோலுக்கு செல்லும் ரத்த ஒட்டத்தை அதிகரித்து தோலை இளமையாக வைக்கிறது
பூண்டை மெதுவான தீயில் தோலுடன் வறுத்து பின் தோலை நீக்கி உண்ணலாம். வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். அல்லது பாலில் நாலைந்து பற்களை போட்டு பால் இரண்டு கொதி வந்ததும் பாலோடு சேர்த்து பூண்டையும் சாப்பிட வேண்டும்.

அவசியமான முத்து:

இந்தியாவில உங்க செல்போன் தொலைந்து விட்டால் இனிமேல் கவலைப்பட வேண்டாம். எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை :
உங்கள் செல்போனிலிருந்துக்கு*#06# டயல் செய்யுங்கள்.

உடனே உங்கள் மொபைலில் ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்.
இதுதான் உங்கள் போனின் IMEஈ ணொ.அதனை உடனே பத்திரமாக உங்கள் ஃபைலில்   ப‌திவு செய்து வைத்துக்கொள்ளுங்கள்.ஃபோன் காணாமல் போய் விட்டால் உங்கள் நம்பரை cop@vsnl.net க்கு மெயில் செய்யுங்கள்.
காவல் நிலையத்திற்கெல்லாம் போக வேண்டியதில்லை.
உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடித்து விடுவார்கள்.

உங்க மொபைல் போன் நம்பரை மாற்றி விட்டால்கூட‌ போன் எங்கிருந்து வேலை செய்கிறது என்பதை சுலபமாக‌ தெரிந்து கொள்ளலாம்!!

மருத்துவ முத்து:

சர்க்கரை நோயாளிகளில் நிறைய பேர் வயது முதிரும்போது சிறுநீரகத்தொல்லைகளுக்கும் ஆளாவார்கள். சிறுநீரக செயல்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிக்கும். சிலருக்கு சிறுநீரகத்தின் வடிகட்டிகள் செயலிழக்க ஆரம்பித்து சிறுநீரில் புரதம் வெளியேற ஆரம்பிக்கும். இது அதிகமாக வெளியேறும்போது இரத்தத்தில் கிரியாட்டினைன் கழிவுகள் அதிகமாக ஆரம்பிக்கும். யூரியாவும் அதிகரித்து, யூரிக் அமிலமும் அதிகரிக்க ஆரம்பிக்கும்.

இவற்றையெல்லாம் சரியானபடி ஆராய்ந்து தகுந்த மருந்துகள் கொடுத்து நம் உடல்நலத்தை கண்காணிக்க நல்லதொரு மருத்துவர் தேவை. உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியமும் ஆகி விடும். பொதுவாகவே உணவில் உப்பை குறைப்பது மிகவும் அவசியம். பாதி வியாதிகள் இதனாலேயே சரியாகி விடும்.

சமீபத்தில் இதற்கான மருத்துவமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ள‌ன.

1. உப்பிற்கு பதிலாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்    இந்துப்பை வாங்கி பொடி செய்து வைத்துக்கொண்டு அதை சமையலுக்கு உபயோகப்பயன்படுத்தி வருவது உடம்பிற்கு மிகவும் நல்லது.
எந்த கெடுதலும் இல்லை. சாதாரண சமையல் உப்பில் கிடைக்கும் சுவை இதிலும் கிடைக்கும். கால்.கை வீக்கம் தோன்றினால் டாக்டர்கள்," உப்பை குறைங்க" என்பார்கள். அப்படி ஒரு பிரச்சினை இந்துப்பில் வருவதில்லை. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், மற்றவர் அனைவருக்கும் இது சிறந்த உப்பு ஆகும்!!! ஆயுர்வேத நிபுணரும், பேராசிரியருமான எஸ்.சுவாமிநாதன் அவர்கள் " இந்துப்பு மனதிற்கு நல்லது.
வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்க வல்லது., இலேசானது.
சிறிதளவு உஷ்ணமுள்ளது,  கடலுப்பை உண்ணும் போது அது முடிவில் இனிப்பாக மாறிவிடும். அது விரைவில் சீரணமாகாது. ஆனால் இந்துப்பு இதற்கு நேர்மாறானது. கடலுப்பினால் ஏற்படும் கெடுதலைக்கூட தடுத்து விடும்" என்று கூறுகிறார்கள்.

2. சில சர்க்கரை நோய்க்கான மருந்துகள்கூட சிறுநீரில் புரதம் வெளியேறக்காரணமாகின்றன என்பது சமீபத்தில் நான் அறிந்து கொண்ட உண்மை. நீண்ட நாட்களாக, வருடங்களாக ஒரே விதமான மருந்துகளை எடுத்து வருபவர்கள் உங்கள் மருத்துவரை அணுகி அது பற்றி கலந்து பேசி அறியுங்கள். சில மாத்திரைகள் இந்த புரதம் வெளியேறுதலை அதிகரிக்க வல்லவை என்பதையும் சில மாத்திரைகள் சிறுநீரில் புரதம் வெளியேறுதலையும் வயிற்றுப்பிரச்சினைகளையும் குறைக்க வல்லவை என்பதையும் நல்ல மருத்துவர்கள் விளக்கி உங்கள் மருந்துகளை மாற்றிக்கொடுப்பார்கள். மொத்தத்தில் சிறு நீரகத்தைப் பாதுகாத்துக்கொள்ளுவதற்கு நமது முயற்சியும் கட்டாயம் தேவை.

3. மூக்கிரட்டை வேர் சிறுநீரகத்திற்கு மிக நல்லது.
அது சிறுநீரகத்தின் செயல்பாட்டுத்தன்மையைப்புதுப்பிக்க உதவுகிறது. அதை ஒரு பானைத்தண்ணீரில் ஊறப்போட்டு அந்தத் தண்ணீரைக் குடித்து வரலாம். மூக்கிரட்டைப்பொடியும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. அதில் கால் ஸ்பூனை விடக்குறைந்து எடுத்து சற்று மிதமான வெண்ணீர் ஒரு தம்ளரில் கலந்து காலை வெறும் வயற்றில் குடித்து வருவதும் நல்லது.

21 comments:

கம்பவாரிசு அதிரா:) said...

மனோ அக்கா நலமாக மகிழ்ச்சியாக இருப்பது தெரிகிறது. மீண்டும் பேத்தியாகியிருப்பதுக்கு வாழ்த்துக்கள்..பேபிக்கு நீங்க அப்பம்மாவா இல்ல அம்மம்மாவா எனத் தெரியவில்லை.

அத்தனை முத்துக்களும் அருமை.

பூண்டு பற்றிய குறிப்பு மிக நன்று. கடசியாகக் கூறியிருப்பது நன்னாரி வேர் போல இருக்கே.. இல்லை இது வேறு வகையேதானோ.

திண்டுக்கல் தனபாலன் said...

அத்தனை முத்துக்களும் சிறப்பு...

Thulasidharan V Thillaiakathu said...

அனைத்தும் அருமையான முத்துக்கள்! முதல் முத்து நிஜமாகவே உங்களுக்கு ஒரு முத்து!! பொக்கிஷ முத்து! அந்தப் பொக்கிஷ முத்திற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

கீதா: துளசியின் கருத்துடன்.....மனோ அக்கா உங்கள் மருத்துவ முத்துக்களைக் குறித்துக் கொண்டேன். நானும் இனியவள் ஆயிற்றே!!! மொபைல் ஃபோன் தொலந்தால் யெஸ் அக்கா எனது மொபைல் தொலைந்த போது இதே பி எஸ் என் எல் சேவையைப் பயன்படுத்தி ட்ரேஸ் செய்ய முனைந்தேன். ஆனால் அந்தச் சேவை வேலை செய்யவே இல்லை. மற்றும் பல லிங்குகள் வந்தன. உங்கள் ஃபோன் கிடைத்தால் நீங்கள் எவ்வளவு பரிசு கொடுப்பீர்கள் என்றெல்லாம் வேறு கேள்விகள் கேட்ட ஒரு பக்கம் வந்தது. அதே போன்று தான் ஆன்லைன் காவல்துறை பக்கத்து மொபைல் ஃபோன் தேடல் பக்கமும்....அதுவும் வேலை செய்யவில்லை. எனவே இச்சேவைகளைக் குறித்து இன்னும் விரிவாக யாரேனும் விளக்கம் அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்..

அனைத்து முத்துகளையும் ரசித்தோம் அக்கா

KILLERGEE Devakottai said...

பேத்தி விஹானாவுக்கு வாழ்த்துகள்.
டாக்டர். வி. ராமமூர்த்தி போற்றுதலுக்குறியவர்.

தி.தமிழ் இளங்கோ said...

உங்கள் குடும்பத்திற்கு ஒரு புதிய வரவாக, நல்முத்தாக வந்துள்ள உங்கள் அருமை பேத்திக்கு வாழ்த்துகள்.

சேவை மனப்பான்மை கொண்ட மயிலாடுதுறை டாக்டர் பற்றிய தகவல்கள் நெகிழ்ச்சி ஊட்டுவனவாக உள்ளன. கோவையிலும் இவரைப் போலவே ஒரு டாக்டர். என்று படித்து இருக்கிறேன். நாடு உய்ய நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதே ஆறுதல்.

மற்றும் வழக்கம் போல பயனுள்ள தகவல்கள் பரிமாற்றத்திற்கு நன்றி.

இமா க்றிஸ் said...

உங்கள் பேத்தியின் வரவையிட்டு உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள் அக்கா.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அனைத்து முத்துகளும் அருமை. பேத்தி முத்து கண்டு மகிழ்ச்சி.

கரந்தை ஜெயக்குமார் said...

அன்புப் பெயர்த்திக்கு வாழ்த்துக்கள்
மருத்துவர் போற்றுதலுக்கு உரியவர்

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி அதிரா! நான் அப்பம்மா தான்! மகன் துபாயில் business செய்கிறார்.

நீங்கள் சொல்வது போல இந்த மூக்கிரட்டை வேர் பார்ப்பதற்கு நன்னாரி வேர் போல இருக்கும். ஆனால் அதன் பயன்கள் பெரிது.

பாராட்டிற்கும் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

பொக்கிஷ முத்திற்கான உங்களின் இனிய வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி சகோதரர் துளசிதர‌ன்/கீதா!

கீதா! மொபைல் கண்டுபிடிப்பதற்கான தகவல்கள் ஒரு நண்பர் கொடுத்தது அது தான் பகிர்ந்திருந்தேன். நீங்கள் சொல்வது போல கூடுதல் தகவல்கள் அதைப்பற்றிக் கிடைத்தால் நன்றாக இருக்கும்!!
பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் அன்பார்ந்த நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

பேத்திக்கான அன்பு வாழ்த்துக்களுக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பார்ந்த நன்றி சகோதர‌ர் தமிழ் இளங்கோ!

மனோ சாமிநாதன் said...

இமா! ரொம்ப நாட்களுக்குப்பின் உங்களை இங்கே பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது! வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி இமா!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

பேத்திக்கான இனிய வாழ்த்துக்களுகும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

சாரதா சமையல் said...

பேத்திக்கு இனிய நல்வாழ்த்துக்கள்!!

mera balaji said...

குட்டி புதிய பூவுக்கு இனிய வாழ்த்துக்கள். பூண்டு பற்றிய செய்தி குரித்துக் கொண்டென்.

Anuprem said...

உங்க வீட்டு குட்டி பாப்பா வரவுக்கு எனது வாழ்த்துக்களும் ...


அனைத்து முத்துகளும் சிறப்பு....நினைவில் கொள்ள வேண்டிய பல பயனுள்ள தகவல்கள்...

கீதமஞ்சரி said...

பேத்திக்கு அன்பும் ஆசியும். வழக்கம்போல முத்துக்கள் அனைத்தும் மனம் நிறைக்கின்றன. மருத்துவர் வி. ராமமூர்த்தி அவர்கள் பற்றி முன்பே அறிந்திருக்கிறேன். அற்புதமான சேவை மனம் கொண்டவர். இந்துப்பு பற்றிய தகவலுக்கு நன்றி. ஆங்கிலத்தில் அதன் பெயர் என்னவென்று அறிந்தால் சொல்லுங்களேன். இங்கு கடைகளில் ஏராளமான உப்புகள் கிடைக்கின்றன. இதுவும் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன். உபயோகமான தகவல் பகிர்வுக்கு மிகவும் நன்றி மேடம்.

சீராளன்.வீ said...

வணக்கம் !


முத்தெனக் கவிகள் சொல்லி
...மொழிந்திட வந்த வேளை
வித்தவள் பெயர்த்தி வண்ணம்
...விளைத்தன நெஞ்சில் எண்ணம்
நித்தமும் வந்தால் இங்கே
...நினைவுகள் தேனாய் மாறும்
புத்தகம் இனியும் வேண்டாம்
...பொலியுமும் பதிவு போதும் !

வளரிளம் தளிரே உம்மை
...வாழ்த்திடும் உள்ளம் போலே
உளமொடு உயிரும் சேர்த்து
...உனைத்தினம் காக்கும் பாட்டி
விளரியின் அழகைக் கண்டு
...மெச்சியே அணைப்பாள் !பூசை
விளக்கென நீயும் ஒளிர்வாய்
...வேலனை வேண்டு கின்றேன் !

அத்தனையும் அருமை! அழகான உங்கள் பெயர்த்தி நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன் வாழட்டும் தலைமுறை .........