Monday 31 July 2017

தேசீய சித்த மருத்துவமனை!!

சமீபத்தில் செவி வழியாக ஒரு மருத்துவ மனை பற்றி, அதன் தரம் பற்றி கேள்விப்பட்டதும் ஆச்சரியப்பட்டு அதைப்பற்றி செய்திகளைப்படித்த போது உண்மையிலேயே இத்தனை நாள் எப்படி இந்த மருத்துவ மனையைப்பற்றி தெரியாமலிருந்தது என்ற ஆச்சரியம் மேலோங்கியது. சென்னை வாசிகளான சினேகிதிகளைக் கேட்டால் நிறைய பேருக்கு இதைப்பற்றித் தெரியவில்லை. நிறைய பேருக்கு பயன்படுமென்பதால் இந்த மருத்துவ மனை பற்றி விரிவாக எழுதுகிறேன்.சென்னை, தாம்பரத்தில் சானிட்டோரியம் பேருந்து நிலையம் அருகில் பச்சைப்பசேலென்ற‌ மரங்களின் நிழலில் பிரமாண்டமாக எழுந்து நிற்கிறது மத்திய அரசால் நடத்தப்படும் தேசீய சித்த மருத்துவமனை. உள்ளே அங்கு அமைக்கப்பட்டிருந்த பெரிய தோட்டத்தில் பல வகை மூலிகைச் செடிகளின் பெயர்களோடு அவற்றின் மருத்துவ குணம் என்ன என்பதையும் குறிப்பிட்டு  ஒவ்வொரு மூலிகைச் செடியிலும் எழுதி ஒட்டப்பட்டிருந்தது.  அந்த வளாகத்தின் உள்ளே அயோத்தி தாச பண்டிதர் பெயரில் மருத்துவமனைக் கட்டிடம் உள்ளது.

தினமும் 2,500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு செல்கின்றனர். உள்நோயாளிகளாக மட்டும் 180 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பொது மருத்துவம், குணபாடம், சிறப்பு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், நோய் நாடல், நஞ்சு நூலும் – மருத்துவ நீதி நூலும் என 6 துறைகளும் மற்றும் அதற்கான 9 புறநோயாளிகள் பிரிவும் (ஓபி) செயல்படுகிறது. காய்ச்சல், தலைவலி, மஞ்சள் காமாலை தொடங்கி வாதம், சர்க்கரை நோய், சிறுநீரக பிரச்சினை, வயிறு-குடல் நோய், தோல் நோய் என அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவை தவிர பல் மருத்துவம், கண் மருத்துவம் மற்றும் வாரத்தில் ஒரு நாள் முதியோர் மருத்துவப் பிரிவும் செயல்படுகிறது.

மூளை வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தனியாக சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூலம் உள்ளிட்ட நோய்களுக்கு கத்தி இல்லாமல் அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு முதல் கட்ட சிகிச்சை அளிப்பதற்காக தனி சிகிச்சை பிரிவு ஒன்றும் செயல்படுகிறது.

பக்கவாதம், கீழ் வாதம், முடக்கு வாதம் உள்ளிட்ட 80 வகையான வாத நோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். மசாஜ், வர்மம், மருத்துவம், பிசியோதெரப்பி போன்றவைகளால் சிகிச்சை அளிக்கிறார்கள். வாத நோயினால் பாதிக்கப்பட்டவரை ஒரு மண்டலம் (48 நாட்கள்) உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.  எச்ஐவி, சர்க்கரை நோய், புற்றுநோய் மேலும் தீவிரமடையாமல் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கான சிகிச்சையும் அளிக்கிறார்கள். டெங்கு மற்றும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளை சித்த மருத்துவத்தின் மூலம் இங்கே குணப்படுத்தியுள்ளார்கள்.

இங்கு புறநோயாளிகளின் பதிவும் ஆலோசனையும் சரியாக 8 மணிக்கு ஆரம்பிக்கிறது. பதிவுக்கட்டணம் பத்து ரூபாய் மட்டுமே.  பதிவுப்புத்தகத்தில் நம் விவரங்களைப் பதிவு செய்து, நமக்கென்ன நோயால் பிரச்சினையோ அதற்கேற்ற மாதிரி எண்ணைக்குறிப்பிட்டு அங்கே அனுப்புகிறார்கள். அறைக்குள் சென்று பதிவுப்புத்தகத்தைக் காண்பித்ததும் நம்முடைய பிரச்சினையை விசாரித்து அதற்கேற்ற மாதிரி ரத்தம், சிறுநீர், எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளுக்கு அனுப்புகிறார்கள். இஸிஜி உள்ளிட்ட அனைத்துப்பரிசோதனைகளும் இங்கு இலவசம்.

பரிசோதனைகள் தேவைப்படாதவர்களுக்கு மாத்திரைகள், எண்ணெய், லேகியம் என எழுதிக்கொடுக்க அங்குள்ள பார்மஸியில் வாங்கிக்கொள்ளலாம்.  எண்ணெய், லேஹியம் வாங்க்கொள்ள பாட்டில்கள், டப்பாக்கள் கையோடு கொண்டு செல்வது நல்லது. மருந்துகளை வாங்கிக்கொண்டு மீண்டும் மருத்துவர்களிடம் செல்ல வேண்டும். மருந்துகளை எப்படி சாப்பிட வேண்டும், இஞ்சி சாற்றில் கலந்து சாப்பிடுவது, வெற்றிலையோடு சாப்பிடுவதா அல்லது தேனுடனா என்பது பற்றியும் தைலம் தேய்க்கும் முறை பற்றியும் விளக்கமாகச் சொல்லுகிறார்கள். மருந்துகள் முற்றிலும் இலவசம். ஆனால் மருந்துகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே கொடுக்கப்படுகின்றன. வாராவாரம் நோயாளிகள் வர வேண்டும். மருந்துகளினால் ஏற்படும் முன்னேற்றத்தைப்பற்றி கேட்டுத் தெரிந்த் கொண்ட பிறகே அதற்கேற்ப மருந்துகளில் மாற்றம் செய்து கொடுக்கிரார்கள்.
வாரத்தின் அனைத்து நாட்களும் இங்கு விடுமுறையின்றி இயங்குகிறது.

வளாகத்தினுள் இருக்கும் உணவகத்தில் சிற்றுண்டிகள், காப்பி, டீ சகாய விலையில் விற்கப்படுகின்றன. உள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுக்குக் கட்டணமில்லை. அவர்களின் உடல்நிலைக்கேற்ப வாத, பித்த, க பத்திய உணவுகள் சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.

இங்கு தன் தந்தைக்காக சிகிச்சைக்கு சென்று வந்த ஒருவரின் விமர்சனம்:

து முழுவதும் இலவசமாக மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை, சுத்தம் சுகாதாரம் எல்லாமே பெரிய ஆங்கில கார்பொரெட் மருத்துவமனைக்கு நிகராக இருக்கிறது.
மருந்து கொடுக்கும் இடத்தில் பெரும்பாலும், எண்ணெய், கஷாயம் போன்றவை கொடுக்கப்பட்டாலும் ஒரு துளி கூட கீழே நீங்கள் பார்க்க முடியாத அளவிற்கு உடனுக்குடன் சுத்தம் செய்து பராமரிக்கப் படுகிறது.

ஒரு நயா பைசா கூட செக்யூரிட்டி முதல் சுத்தம் செய்பவர் வரை யாரும் கேட்பதில்லை. அமைதியாக கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, வரிசையை சிறப்பாக ஒழுங்கு படுத்தி, கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாகப் பதில் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார்கள்.
எனக்கு ஆன மொத்த செலவு, கார் பார்க்கிங் 5/-, பதிவு கட்டணம் 5/- மட்டுமே. ஐந்து நாட்களுக்கான மருந்தே வழங்கப்படுகிறது. செவ்வாய்க் கிழமை மதியம் 3மணிக்குச் சென்றால், மூத்த குடிமக்களுக்கு அதிக நாட்களுக்கு மருந்து வழங்கப்படுகிறது.
நான் சென்ற காலை 8 லிருந்து 11 மணிக்குள்ளாக எப்படியும் ஆயிரம் பேராவது, மருத்துவர்களைப் பார்த்து மருந்து வாங்கிச் சென்றிருப்பார்கள், அந்த அளவுக்கு வேகமாகவும், சிறப்பாகவும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கையாள்கிறார்கள்.

உள்ளே தங்கி சிகிச்சை பெறும் வசதிகளும் உண்டு, ஜெனரல் வார்ட் என்றால் 20/- ஒரு நாளைக்கும், ஏசி ரூம் என்றால் 350/- ஒரு நாளைக்கும் வாங்குவதாக அறிகிறேன். அட்டைக் கடி வைத்தியம் முதல் பல பாரம்பரிய சித்த வைத்திய முறைகள் இலவசமாக மக்களுக்கு அரசாங்கம் இந்த மருத்துவமனை மூலம் அளிக்கிறது. 
மேலும் விவரங்களுக்கு:

http://www.nischennai.org/

35 comments:

ராஜி said...

பயனுள்ள தகவல். வெளில இருந்து இந்த மருத்துவமனையை பார்த்திருக்கேன். ஆனா விவரம் தெரியாது. பகிர்வுக்கு நன்றிங்க.

KILLERGEE Devakottai said...

ஆச்சர்யமான தகவல்தான் சகோ நன்றி.

அப்பல்லோ போன்ற பந்தா, பகட்டு இல்லாத காரணத்தால் மக்களிடம் அறியப்படாமல் இருக்கிறதோ... ?

Yaathoramani.blogspot.com said...

அனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு
கொஞ்சம் அறிந்திருந்தேன்.இத்தனை விரிவாக
பகிர்ந்து அறியத் தந்தமைக்கு மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

வாழ்க அவர்கள். சிறந்த தகவல்கள். நல்லதொரு பகிர்வு.

ர. சோமேஸ்வரன் said...

பல முறை இந்த மருத்துவமனையை கடந்து சென்றிருக்கிறேன் ஆனால் அதை பற்றி கேள்விப்பட்டதேயில்லை, தங்களின் பதிவு மூலமாக அறிந்துகொள்ள முடிந்தததில் மகிழ்ச்சி, பயனுள்ள பதிவு.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வு. இம்மருத்துவமனை பற்றிய பகிர்வை நானும் படித்திருந்தேன்.

மத்திய அரசின் சுகாதாரத் துறை கீழே செயல்படுகிறது இந்த மருத்துவமனை.

Thulasidharan V Thillaiakathu said...

இந்த மருத்துவமனை பற்றி தெரியும் மனோக்கா! எனக்குத் தெரிந்த ஒருவர் அங்கு குழந்தையின்மைக்காகச் சிகிச்சை எடுத்துக் கொண்டுவருகிறார். நான் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது உங்கள் பதிவு மேலும் பல தகவல்களைக் கொடுத்திருக்கிறது. மிக்க நன்றி

கீதா

தி.தமிழ் இளங்கோ said...

பயனுள்ள பதிவு.

துரை செல்வராஜூ said...

ஆடம்பரம் இல்லாவிட்டால் நம் மக்களுக்குப் பிடிக்காதே!..

புதிதாகத் தெரிந்து கொண்டேன்..
தேசிய சித்த மருத்துவ மனையைப் பற்றிய தகவல்களுடன் பயனுள்ள பதிவு..

வாழ்க நலம்!..

Geetha Sambasivam said...

நல்லதொரு மருத்துவமனை. ஆனால் நகரின் தென்கோடியில் இருப்பதால் பலராலும் விரைவில் அணுக முடியாதது! என்றாலும் இதன் சிறப்புக்கள் குறித்து அறிந்திருக்கிறேன். விபரமாகப் பகிர்ந்தமைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

பலருக்கும் பயன்படும் பகிர்வு...

எனது g+ பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறேன்... நன்றி...

ராமலக்ஷ்மி said...

அக்கறையுடன் பகிரப் பட்டிருக்கும் தகவல்கள். நன்றி.

கோமதி அரசு said...

மருத்துவ தொழிலை வியாபாரம் ஆக்காமல் எளிமையாக அனைவருக்கும் மருத்துவம் பார்ப்பது மகிழ்ச்சி.
நல்ல பகிர்வு.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய‌ நன்றி ராஜி!

மனோ சாமிநாதன் said...

நானும்கூட அப்படித்தான் நினைத்தேன் கில்லர்ஜி! நன்றாக நடக்கும் எதுவும் வெளி உலகத்திற்கு அவ்வளவாகத் தெரிவதில்லையே! வருகைக்குக் கருத்துரைக்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

நல்வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் ந்பு நன்றி சகோதர‌ர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்களுடன் கூடிய இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!!

பூ விழி said...

பயனுள்ள பகிர்வு நன்றி

Anuprem said...

நல்ல தகவல்கள்...

நானும் இந்த மருத்துவ மனை பற்றி அறிந்தது உண்டு....

எனக்கு தெரிந்தவர்களும் அங்கு வைத்தியத்திற்காக செல்கிறார்கள்....அவர்களின் அனுபவங்களையும் நல் முறையிலே சொன்னார்கள்...

என்றும் அவர்களின் பணி சிறக்கட்டும்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இக்காலகட்டத்தில் இவ்வாறான ஒரு மருத்துவமனையா? வியப்பாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி.

அபயாஅருணா said...

பயனுள்ள தகவல்.. நானும் இதைப் பார்த்திருக்கிறேன் பஸ்ஸில் போகும்போது . .அங்கு இத்தனை வசதி இருப்பது பற்றித் தெரியாது .நன்றி

நிலாமகள் said...

ஆம் சகோ... அட்டைக் கடி வைத்தியம் வெரிக்கோஸ் வெயின் சரியாக செய்யப்படுவது. ஒவ்வொருவருக்கும் இந்த சிகிச்சைக்காக தனித்தனி அட்டை பூச்சிகளைப் பயன்படுத்துவதும் அவற்றைப் பாதுகாத்து தொடர்ந்து அவர்கள் குணப்படும் வரை வைத்திருப்பதும் சிறப்பு.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சோமேஸ்வரன்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கீதா! உங்கள் சினேகிதிக்கு சிகிச்சைக்கான பலன் தெரிகிறதா?

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இள்ங்கோ!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் துரை. செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி கோமதி அரசு!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி பூவிழி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கும் மருத்துவ மனை பற்றிய தகவல்களுக்கும் அன்பு நன்றி அனுராதா பிரேம்குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி அபயா அருணா!

மனோ சாமிநாதன் said...

நெடுநாள் கழித்து வருகை தந்ததற்கும் மருத்துவ மனை பற்றிய தகவல்கள் சொன்னதற்கும் அன்பு நன்றி நிலாமகள்!

mera balaji said...

அன்பு அக்கா நலமா
1 மாதமாக விடுமுரையில் இந்தியா பயணம் .வந்த பின்பு வீடு சுத்தம் உடல்நிலை சரியில்லை .1 வாரம் ஆனது. உங்கள் பொளாக் வந்தால் ஏகப்பட்ட தகவல்களூடன் வாவா என்றது. நான் இந்த மருத்துவமனை பற்றி கேள்விபட்டு நிறைய பேரிடம் விசாரித்ததில் யாருக்கும் தெரியலை.விவரமான் தகவ்ல்களுக்கு நன்றி.உங்கள் முத்து குவியலில் மற்ற ஒரு செய்தி என்க்கு மிக்க ஆறுதலாக இருந்தது.அதுதான் குதிகால் வலிக்கான மருந்து.வலினால் நான் கடந்த 4 வருடங்களாக மிகவும் துன்பபட்டேன்.அது இப்போது சயாடிகா நர்ம்பு வலியாக மாறி கஷ்ட்ட பட்டேன் இந்த முரை ஊருக்கு சென்ற போது ஆயூர்வேதத்தில் மருந்து வாங்கி வந்தேன்.இனி தஞ்சாவூர் நண்பர்கள் யாராவது இருக்கார்களா என பார்க்க வேண்டும் மருந்து வாங்கிவர சொல்லவேண்டும்.இன்று உங்கள் வாழைப்பூ மிளகு குழம்பு வைத்தென் .நன்ராக இருந்தது.மிக்க நன்ரி தகவல்களுக்கும் குழம்புக்கும்