Wednesday 10 December 2014

தீர்த்தமலை!!

சமீபத்தில் அவ்வளவாக யாரும் அறியாத, ஒரு பழமையான கோவில் பற்றி அறிந்தேன். அதன் விபரங்கள் இதோ!

தீர்த்தமலை

தர்மபுரி மாவட்டம் அரூரிலிருந்து கொட்டப்பட்டி சாலையில் 18 கிலோ மீட்டர் தூரத்தில் தீர்த்தமலை கிராமம் உள்ள‌து. இங்குள்ள‌ அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மலைக்கு தீர்த்தமலை என்றே பெயரிய்யு அழைக்கிறார்கள். மலை அடிவாரத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் மேலேறினால் சிறிது நேரத்தில் மலைக்கோவிலை அடைந்து விடலாம். மலை உச்சியில் தான் தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. மலைப்பகுதியில் நடந்து செல்வதற்க்கு வசதியாக கற்காரையிலான சாய்தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. தரைமட்டத்திலிருந்து சுமார் ஐனூறு அடி உயரத்தில் அமைந்திருக்குமó மலைக்கோவிலுக்குச் செல்லும் வழியில், ஆங்காங்கே நடை மேடை மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது.




ராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட ராமபிரான் வழிபட்ட திருத்தலம். ராம பிரான் சிவபெருமானை இரண்டிடங்களில் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்துள்ளார். அதில் ஒன்று பெருஞ்சிறப்பு பெற்ற ராமேசுவரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்த தீர்த்த மலை.
இந்தக் கோவில் கி.மு 203ல் கட்டப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் அருணகிரி நாதரால் பாடப்பட்ட ஒரே தலம். 1040ல் ராஜேந்திர சோழனால் முன் மண்டபம் புதுப்பிக்கப்பட்டது. நாயக்க மன்னர்கள் ஆட்சியில் அங்குள்ள இன்னொரு கோவிலான காசி விஸ்வநாதர் கோவிலின் முன் மண்டபம் கட்டப்பட்டது.

தீர்த்தமலை அடிவாரத்திலும் மலை மீதும் தீர்த்தகிரீஸ்வரர், ராமலிங்க சாமி, சப்தகன்னியர், வடிவாம்பிகை அம்மன் என்று தனித்தனிக்கோவில்கள் உள்லன.
மலைக்கு மேற்கே வாயுதீர்த்தம், வருண தீர்த்தம் உள்ளது. கிழக்கில் இந்திர தீர்த்தம் உள்ளது. வடக்கே அனுமந்த தீர்த்தம் உள்ளது.




தெற்கே எம தீர்த்தம் உள்ளது. மலையின் உச்சியில் வசிஷ்டர் தீர்த்தம் உள்ளது.இப்படியாக தீர்த்தங்களால் சூழப்பெற்ற அற்புத மலை தீர்த்த மலை என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மன் கோவிலுக்குப் பின்புறம் மலை உச்சியிலிருந்து பாறைகள் வழியாக ஊற்று நீர் 2000 வருடங்களாக கொட்டிக் கொண்டேயிருக்கிறது. வருடம் முழுவதும் மழை பொய்த்தாலும் இந்த ஊற்று நீர் கொட்டிக்கொண்டேயிருக்கிறது. இந்த ஊற்று நீரின் மூலம் எது, எங்கிருந்து ஊற்ரெடுத்து பிறக்கின்றது என்ற கேள்விக்கு விடை தெரிய வெளி நாடுகளிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் பலர் வந்து ஆராய்ச்சி செய்தும் அவர்களால் எதையும் கண்டறிய முடியவில்லை. மேலிருந்து விழும் நீர் தலையிலோ உடலிலோ பட்டால் நோய்கள் முழுமையாக நீங்கும், பாவங்கள் எல்லாம் அழிந்துவிடும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் தீர்த்தமலைக்கு வந்த வண்ணமாகவே இருக்கிறார்கள்!!

34 comments:

priyasaki said...

தகவல்கள் மிக ஆச்சரியமாக இருக்கு.அழகிய சூழல் நிறைந்த கோவில்.பகிர்வுக்கு நன்றி மனோக்கா.

நிலாமகள் said...

நீங்க பார்த்து வியந்த தீர்த்த மலையை நாங்களும் பார்க்க ஆசைப்படும்படி எழுதியிருப்பதற்கு நன்றி!

V Mawley said...

இது மாதிரி தகவல்கள் தான் நமது நாட்டின் சிறப்பம்சங்கள் ,,நல்ல பகிர்வு ..நன்றி ..

மாலி.

'பரிவை' சே.குமார் said...

தீர்த்தமலை குறித்து அறியத் தந்தீர்கள் அம்மா... வாழ்த்துக்கள்.

இளமதி said...

தீர்த்த மலை பெயரைக் கேட்கும்போதே மனதில் இனம்புரியாத ஒரு உணர்வு தோன்றுகிறது!

மிக நல்ல பகிர்வு அக்கா!
போய்ப் பார்க்கக் கிட்டினால் அதைவிட மகிழ்வேது..!

அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி அக்கா!

unmaiyanavan said...

பழமை வயந்த ஒரு கோயிலை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி.

தி.தமிழ் இளங்கோ said...

தீர்த்தமலை கோயிலைப் பற்றி இன்றுதான் கேள்விப்படுகிறேன். இதுபோல வெளியே அவ்வளவாகத் தெரியாத எத்தனை மலைக் கோயில்கள் அங்கு உள்ளனவோ என்று தெரியவில்லை. பகிர்வுக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

ஒரு முறை சென்று வர வேண்டும் எனும் ஆவல் வருகிறது...

Yaathoramani.blogspot.com said...

இதுவரை அறிந்திராத ஸ்தலம்
படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

பார்க்க வேண்டிய இடமாய்த் தெரிகிறது. எவ்வளவு பழமையான கோவில்...

”தளிர் சுரேஷ்” said...

பழமையான கோவில் பகிர்வுக்கு நன்றி!

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
பார்ப்பதற்கே எவ்வளவு அழகாக இருக்கிறது.
வாய்ப்பு கிடைக்கும் பொழுது ஒரு முறை அவசியம் சென்று வர வேண்டும்
நன்றி சகோதரியாரே

கோமதி அரசு said...

அழகான மலைக்கோவில்.
பார்க்கும் ஆவலை உங்கள் பதிவு ஏற்படுத்திவிட்டது.

இராஜராஜேஸ்வரி said...

தீர்த்தமலை கோவிலைப்பற்றி சிறப்பான பகிர்வுகள். பாராட்டுக்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

இந்தக் கோயிலைப் பற்றி அறிந்திருந்தாலும், இப்போதுதான் தகவல்கள் தெரிந்து கொள்கின்றோம். அழகிய வருணனை. செல்ல வேண்டும் என்று குறித்துக் கொள்ளும் வகையில். மிக்க நன்றி

வெங்கட் நாகராஜ் said...

இது வரை கேள்விப்படாத ஒரு கோவில். தகவல் தந்தமைக்கு நன்றி. அடுத்த பயணத்தில் முடிந்தால் செல்ல வேண்டும்.....
குறித்து வைத்துக் கொண்டேன்....

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இதுவரை இந்த கோயிலைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. கோயில் உலாவின்போது பார்க்க ஆசை வந்துவிட்டது. நன்றி.

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி பிரியசகி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி நிலாமகள்!

மனோ சாமிநாதன் said...

நீண்ட நாள் கழித்து வ‌ருகையும் கருத்துரையும் தந்ததற்கு இனிய நன்றி மாவ்லி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி குமார்!!

மனோ சாமிநாதன் said...

அழகிய பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி இளமதி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி சொக்கன் சுப்ரமண்யம்!

மனோ சாமிநாதன் said...

நிச்சயம் வெளியே தெரியாத புராதன கோவில்கள் நிச்சயம் இருக்கின்றன! அதனால் தான் இந்தக்கோவில் பற்றி தகவல்கள் தெரிந்ததும் இங்கே பகிர்ந்தேன்! கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

மனோ சாமிநாதன் said...

அவசியம் சென்று பார்த்து பதிவு எழுதுங்கள் தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் இனிய நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கோமதி அரசு!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பின்னூட்டத்திற்கும் அன்பு நன்றி சகோதரர் துளசிதரன்!

மனோ சாமிநாதன் said...

அவசியம் சென்று பார்த்து பதிவெழுதுங்கள் வெங்கட்!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தளிர் சுரேஷ்!

KILLERGEE Devakottai said...


அம்மா தங்களை வலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன் வருகை தரவும்

துளசி கோபால் said...

அடடா.... இப்படிக் கொசுவத்தி ஏத்திட்டீங்களே!

நான் ஒம்பதாப்பு படிச்ச காலத்தில் தீர்த்தமலைக்குத்தான் ஒருநாள் பள்ளிக்கூட எக்ஸ்கர்ஷன் போனோம். மாமா(அக்காவின் கணவர்) அப்போ அங்கே பி. டி. மாஸ்ட்டர். எப்பவும் பி.டி. மாஸ்ட்டர்கள்தான் எக்ஸ்கர்ஷன் இன்சார்ஜ்,கேட்டோ.

அங்கே போய் உப்புமா செய்யலாமுன்னு பிரமாண்டமான பெரிய வாணலி , உப்புமாவுக்குத் தேவையான சாமான்கள் எல்லாம் 'லிஸ்ட்' போட்டு பஸ்ஸில் எடுத்துப்போனோம்.

பசங்க வெங்காயம் பச்ச மிளகாய் அரிஞ்சு கொடுக்க மாமாதான் உப்புமா கிளறினார்.

அப்பதான் தெரிஞ்சது லிஸ்ட்லே ஒரு சாமான் மிஸ்ஸிங்!

கடைசியில் உப்பில்லாத உப்புமா தின்னோம்:-)