Thursday 30 October 2014

கான்ஸருக்கு ஒரு தீர்வு!

கொடிய நோய்கள் முதல் சாதாரண உடல் நலக்குறைவுகள் வரை தீர்வுகள் கிடைத்து நலமடைந்தவர்களின் அனுபவங்களை எங்கு கேட்டாலும் அல்லது எந்த புத்தகத்தில் படித்தாலும் அவற்றினை இங்கே மருத்துவ முத்து என்ற தலைப்பில் நான் அவ்வப்போது அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதி வருகிறேன். அதன் தொடர்ச்சி தான் இந்த க்ட்டுரையும்!

ஒரு மாத இதழில் கான்ஸர் வந்து அவதிப்பட்ட தன் தாய்மாமனின் கதையை ஒரு சகோதரி எழுதியிருந்தார். முழங்கையில் கட்டிகள் வந்து, அவற்றை சாதாரண கட்டிகள் என்று நினைத்திருக்க, மருத்துவரிடம் சிகிச்சைக்காக சென்ற போது அவை கான்ஸர் கட்டிகள் என்றும் உடலுக்குள்ளும் ஆங்காங்கே சிறு சிறு கட்டிகள் என்று பரவி, மூன்றாவது ஸ்டேஜிற்கு அவர் உடல் நிலை சென்று விட்டது என்று தெரிய வந்தபோது, குடும்பமே நிலை குலைந்து விட்டது. கீமோ தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தாலும் அவர் 6 மாதங்களிலிருந்து ஒரு வருடம் வரை தான் உயிருடனிருக்கமுடியும் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.

இந்த நிலையில் நண்பரொருவர், அவருடைய நண்பருக்கு நீண்ட நாட்கள் பக்கவாதத்தை கர்நாடகாவில் பத்ராவதியிலுள்ள ஒரு ஆசிரமத்தில் ஆயுர்வேத சிகிச்சை மூலம் முழுமையாக குணப்படுத்தி விட்டதாகவுச் சொல்லி இவருக்கும் அங்கு சென்று சிகிச்சை தர ஏற்பாடு செய்யலாம் என்று கூறினார். மனமொடிந்து இருந்த நிலையில் யாருக்குமே நம்பிக்கை இல்லாது போனாலும் 'இதையும் முயன்று தான் பார்க்கலாமே' என்ற நினைப்பில் இவரின் தாய்மாமன் அங்கே அழைத்து செல்லப்பட்டார்.

கர்நாடகாவில் ஷிமோகா மாவட்டத்திலுள்ள பத்ராவதியில் 'ஸ்ரீசிவசுப்ரமண்யசாமி' என்ற பெயரில் இந்த ஆசிரமம் இயங்கி வருகிறது. பெங்களூரிலிருந்து கிட்டத்தட்ட ஏழு மணி நேர பிரயாணம். நாள் பட்ட பல நோய்களுக்கு சிகிச்சை தருகிறார்கள்.

அங்குள்ல ஸ்வாமிஜி நம் விபரங்கள், மருத்துவ ரிப்போர்ட்கள், ஸ்கான்கள் எல்லாவற்றையும் ஆழ்ந்து பார்த்து விட்டு, மருந்துகள் தருகிறாராம். சில நோய்களுக்கு அங்கேயே தங்கச் சொல்கிறார்கள். அப்படி தங்குபவர்களுக்கு மருந்துகளுடன் மருத்துவ குணமுள்ள உணவுகளும் தருகிறார்களாம். ஒரு ஊசியின் முனையால் எடுத்து சாப்பிடக்கூடிய மருந்துகளும் இருக்கின்றதாம்.

சகோதரியின் தாய்மாமன் இங்கே சேர்க்கப்பட்ட ஒரு மாதத்தில் உடலில் தெம்பு வந்ததுடன் நன்கு சாப்பிடவும் ஆரம்பித்திருக்கிறார். மேலும் இரண்டு மாத சிகிச்சைக்குப்பிறகு அவரை அழைத்த ஸ்வாமிஜி' இனி உங்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை. சந்தேகமிருந்தால் ஸ்கான் எடுத்துப்பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறினாராம்.. இது நடந்து மூன்று வருடங்கள் ஆகி விட்டன. இவரது தாய்மாமன் இப்போதும் பூரண நலத்துடன் இருப்பதாக அந்த சகோதரி எழுதி இந்த ஆசிரமத்து விலாசமும் கொடுத்திருக்கிறார்.
இங்கே செல்வதானால் இரு நாட்களுக்கு முன்பேயே ஃபோன் செய்து அனுமதி பெற்றுக்கொள்ள‌ வேண்டும்.

இத்தனை அருமையான ஒரு மருத்துவத் தீர்வை சொன்னதற்கு அந்த சகோதரிக்கு இங்கே நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

விலாசம்:

ஸ்ரீ சிவ‌சுப்ரமண்யசாமி ஆஸ்ரமம்,
டி.கே.ரோடு, பத்ராவதி 577301,
ஷிமோகா மாவட்டம், கர்நாடகா
தொலைபேசி: 08282 267206


25 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் பயனுள்ள தகவல்களுடன் கூடிய அருமையான பகிர்வுக்கு நன்றிகள்.

Yarlpavanan said...

சிறந்த உளநல வழிகாட்டல்
தொடருங்கள்

ஸ்ரீராம். said...

என்ன அற்புதம்? தகவலுக்கு நன்றி. சமீபத்தில்தான் மூளைப் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடித்த ஒரு இந்தியரைப் பற்றிப் படித்தேன்.

தி.தமிழ் இளங்கோ said...

கான்சர் நோய்க்கு குணமளிக்கும் மருத்துவரைப் பற்றிய தகவலுக்கு நன்றி!

(முன்பு தஞ்சை மருத்துவர் தம்பையா அவர்கள் தரும் சர்க்கரை நோய்க்கான நம்பிக்கையான மருத்துவமுறை பற்றிய உங்கள் அனுபவத்தை சொல்லி இருந்தீர்கள் உங்கள் பதிவைப் படித்த பிறகு,எனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி வருகிறேன்.)

தினேஷ்குமார் said...

வணக்கம் அம்மா ....

மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அம்மா...

தீர்வு இல்லாத இயக்கமேதும் அவனியில் இல்லை என்பது உண்மை...

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள முத்தான தகவல்கள்..பாராட்டுக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

பயனுள்ள தகவல். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

நிலாமகள் said...

மருந்தே இல்லை என மரணத்துக்கு வேதனையோடு காத்திருப்போருக்கு அருமருந்து இந்த தகவல்! நல்ல சேவை!

கரந்தை ஜெயக்குமார் said...

பயனுள்ள தகவல் சகோதரியாரே
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்

Yaathoramani.blogspot.com said...

அனைவரும் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டிய
தகவலினை ஆதாரப்பூர்வமாக விரிவாக விலாசத்துடன்
பகிர்ந்தவிதம் மிக்க மகிழ்வளிக்கிறது
பகிர்வுக்கு மிக்க நன்றி
இதை நான் தங்கள் அனுமதியை எதிர்பார்த்து
பகிர்வு செய்கிறேன்.வாழ்த்துக்களுடன்'''

சாகம்பரி said...

எனக்கும் இவரை 20 வருடங்களுக்கு முன்பே என் தந்தையார் மூலமாக தெரியும். மூலிகைகள் நிறைந்த மலைப்பகுதியில் இந்த ஆசிரமம் அமைந்துள்ளது.

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி யாழ்பாவணன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் மருத்துவர் தம்பையா அவர்களைப்பற்றி தெரிந்தோரிடம் பரிந்துரை செய்து வருவதற்கும் அன்பு நன்றி அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி தினேஷ்குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டுகளுக்கு அன்பு நன்றி ராஜ ராஜேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

அன்பார்ந்த பாராட்டிற்கு இனிய நன்றி ஆதி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

மற்ற‌வர்களுக்கு உதவக்கூடிய நல்ல செய்திகளை பகிர்வு செய்ய அனுமதி எதுவும் தேவையில்லை சகோதரர் ரமணி! அவசியம் இதைப்பகிர்வு செய்யுங்கள்! இனிய‌ கருத்துரைக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கு இந்த மருத்துவரைத்தெரியும் என்பது கூடுதலான நல்ல செய்தி சாகம்பரி! மேலும் தகவல்கள் தெரிந்தால் அவசியம் பகிர்ந்து கொள்ளுங்கள். வருகைக்கு அன்பு நன்றி!!

UmayalGayathri said...

நல்ல மருத்துவ தகவல்.நிறையமக்கள் பயனடைய வேண்டும்.

அண்ணி ஜீன் மாதம் தான் இந்நோயால் காலமானார்கள். 4 ஸ்டேஜ். 6 மாதம் என டாக்டர்கள் சொல்லி விட்டார்கள். மருந்துகள் உட்கொண்டும் (சென்னை)பயன் இல்லாமல் 6 மாதத்தில் முடிவுற்றது அவர்கள் வாழ்க்கை.

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா! இது புதிய தகவலாக இருக்கின்றதே! நல்ல விடயமாயிற்றே! அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி! தொடர்கின்றோம்.

துளசி கோபால் said...

அரிய தகவலுக்கு நன்றி மனோ.

இங்கே என் நண்பர்களுக்கும் விவரம் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன்.