Monday 11 August 2014

நட்பெனும் தொடர்பதிவு!

சில மாதங்களுக்கு முன் அன்பு சகோதரிகள் கீதமஞ்சரி, இளமதி இருவரும் இந்தத் தொடர்பதிவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்கள். தொடர் அலைச்சல்கள், வேலைச்சுமைகள் என்று இது வரை நேரம் கிடைக்காமல் இருந்தது. ஒரு வழியாக கிடைத்த சிறிது நேரத்தில் இந்தத் தொடர் பதிவிற்கான கேள்விகளுக்கான பதில்களை எழுதுகிறேன்.

1.உங்கள் 100 வது  பிறந்த நாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?

பிறரைச் சார்ந்து வாழ்வது மூப்பின்போது தவிர்க்க முடியாததாய் தொடர ஆரம்பிக்கிறது. புற வலிகள், தள்ளாமை இவற்றுடன் 100 வயது வரை வாழ்ந்திருக்க மிகுந்த மன பலம் வேண்டும். அந்த மன பலம் மனதுக்கு நெருங்கியவர்களின் அன்பினாலும் பரிவினாலும் சகிப்புத்தன்மையினாலும் மட்டுமே கிடைக்கும். அதனால் நூறாவது பிறந்த நாள் என்று ஒன்று வந்தால் அது என் மனதிற்கு இதம் கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக மட்டுமே இருக்கும். பொருள்ளாதார வசதியும் இருந்தால் அவர்களுக்கு சிறந்த பரிசுகள் கொடுக்கும் நாளாகவும் அது அமையும்!!

2. என்ன கற்றுக்கொள்ள விரும்புறீர்கள்?

பிரியசகி சொன்னது போல மனித மனங்களை! மிகச் சாதாரணமானவராக நாம் நினைப்பவரிடம் பேரன்பு ஒளிந்திருப்பதும் நெருங்கியவராய் நாம் நினைப்பவரிடத்தில் துரோகம் ஒளிந்திருப்பதும் வாழ்க்கையின் ரகசியம். இதில் நுழைந்து மனித மனங்களைக் கற்க முயலும்போது தான் ரகசியம் கொஞ்சமாவது புரிபடுகிறது!!
ஓவியம், இசை, சமையல், தையல் மட்டுமே தெரியும். இன்னும் எத்தனைக் கலைகளை கற்க முடியுமோ அத்தனையையும் கற்க வேண்டும்!

3. கடைசியாக சிரித்தது எப்போ? எதற்காக?
  
 கடைசியக எத‌ற்குச் சிரித்தேனென்பது ஞாபகமில்லை.ஆனால் எப்போது நினைத்தாலும் என் பேரன் கேட்ட ஒரு கேள்வி என்னை சிரிக்க வைக்கும். குழந்தைகளுக்கு துக்கமோ, வலிகளோ, எதுவும் தெரியாதல்லவா? தெரிந்தவர் ஒருத்தரின் மரணச்செய்தியைச் சொல்ல உறவினர் ஒருத்தர் என் சம்பந்தி வீட்டுக்கு வந்திருக்கிறார். செய்தியைச் சொல்லி ' அவர் மேலே போய்விட்டார்' என்றிருக்கிறார். இதைக் கவனித்துக்கொன்டிருந்த என் பேரன்   [ பெயர் விமல் ஆதித்யா] ' எப்ப்டி மேலே போனார்? ஃப்ளைட்டில் ஏறிப் போனாரா?" என்று கேட்க, துக்கத்தை சொல்ல வந்தவருக்கே சிரிப்பு வந்ததை தவிர்க்க முடியவில்லை!

4. 24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

இப்போதெல்லாம் அறிவித்து விட்டுத்தான் பவர் கட் செய்கிறார்கள். அதனால் முதல் நாளே அடுத்த நாளுக்கு சாப்பிட தயிர்சாதம், புளியஞ்சாதம் செய்து விடுவேன். [ சாப்பட்டுப்பிரச்னை தான் முதல் பிரச்சினை! அதனால் அதை முதலில் சரி செய்து கொள்ள‌ வேண்டும்.]
பின் ரொம்ப நாளாக படிக்க வேண்டுமென்று நினைத்து முடியாமல் தேங்கிக்கொன்டிருந்த புத்தகங்களை தயாராய் எடுத்து வைத்துக்கொள்வேன். இன்வர்ட்டரின் சக்தி தீரும் வரை கணினியில் பிடித்த பாடல்களைக் கேட்பதும் வலைத்தளங்களில் மேய்வதுமாக பாதி நாள் கழிந்து விடும்.
ஆனல் எல்லாவற்றையும் விட ரொம்பவும் சுலபமான விஷ‌யம், ரொம்ப நாட்களாய் போக வேண்டுமென்று விரும்பி, ஆனால் போக முடியாமலேயே இருந்த இடங்கள் அல்லது வெளியூரிலுள்ள உறவினர் வீடுகளுக்குச் செல்வது!

5.உங்களுடைய குழந்தையின் திருமணநாள் அன்று அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

உணர்ச்சிப்பெருக்கான அன்றைய தினத்தில் மனதின் ஆழத்திலிருந்து ' என்றைக்கும் நீ மகிழ்வுடன் இருக்க வேண்டும்' என்று வரும் சாதாரண வாழ்த்திற்குக்கூட‌ வலிமை அதிகம்!! நானும் அதைத்தான் சொன்னேன்!

6.உலகத்தில் நடக்கும் பிரச்சனைகளை உங்களால் தீர்க்க முடியுமென்றால் எந்த பிரச்சனையை நீங்கள் தீர்க்க விரும்புவீர்கள்.?

அமைதியின்மை!

7.உங்களுக்கு ஒரு பிரச்சனை அதை தீர்க்க யாரிடம் அட்வைஸ் கேட்க விரும்புவீர்கள்.?

பிரச்சினைகளைத் தனியாக சமாளித்த அனுபவங்கள் உண்டென்றாலும் சில சமயங்களில் கணவரும் மகனும் உதவுவது உண்டு!

8.உங்களைப் பற்றி ஒருவர் தவறான செய்தியைப் பரப்புகிறார். 
அதைக் கேள்விப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?


இளமையில் நிச்சயம் தாக்கம் இருக்கும். இப்போது அது போன்றவற்றையெல்லாம் கடந்து வந்து விட்டதால் இந்த மாதிரி விஷயங்கள் பாதிப்பு ஏற்படுத்தாது. இருப்பினும் தேவையில்லாமல் நம்மைப்பற்றி தவறான செய்திகள் பரவும்போது அதற்கான நடவடிக்கை எடுக்கும் தார்மீகக் கடமை நமக்கு இருக்கிறது.

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்துவிட்டால்,அவரிடம் என்ன சொல்வீர்கள்?

நண்பர் இறந்து அவரின் மனைவிக்கு ஆறுதல் சொல்லப்போன கொடுமையான அனுபவம் இருக்கிறது. அவரின் இழப்புக்கு என்னவென்று ஆறுதல் கூறுவது? வார்த்தைகளுக்கு அர்த்த்ம் இல்லாத நேஎரங்களில் இதுவும் ஒன்று!

10.உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீங்க.?

நிறைய [ கொஞ்ச‌ம் சத்தமாக] பாட்டு கேட்பேன். அதுவும் பி.சுசீலா பாடிய பழைய பாடல்கள், 'கண்கள் எங்கே,  மாலைப்பொழுதின்  மயக்கத்திலே'   போன்ற‌ அமுத  கானங்களை !  

என்னை அன்புடன் அழைத்து என் எண்ணங்கள் சிலவற்றை இங்கே எழுதச் செய்ததற்கு அன்பிற்கினிய கீதமஞ்சரி, இளமதிக்கு என் மனம் கனிந்த நன்றி!!

இந்தத் தொடர்பதிவை தொட‌ர்ந்திட நான் அழைப்பது:

சகோதரிகள்:

1. ப்ரியா-http://wordsofpriya.blogspot.com/
2. ஹுஸைனம்மா  -http://hussainamma.blogspot.ae/
3. நிலாமகள் http://nilaamagal.blogspot.ae/
4. எழில்- http://nigalkalam.blogspot.com/

சகோதரர்கள்:

1. தமிழ் இள‌ங்கோ--http://tthamizhelango.blogspot.com/
2. கரந்தை ஜெயக்குமார்- http://karanthaijayakumar.blogspot.com/
3. சாமானியன்--http://saamaaniyan.blogspot.ae/

24 comments:

unmaiyanavan said...

அனைத்து பதில்களும் மிகவும் தெளிவாக இருக்கிறது.
தங்களின் பேரன் கேட்ட கேள்வி என்னையும் சிரிக்க வைத்துவிட்டது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான பொறுமையான நியாயமான அசத்தலான பதில்கள்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் said...

எதார்த்தமான பதில்கள் அக்கா...

ஸ்ரீராம். said...

கிடைத்த சிறிது நேரத்தில் வேகமாக பதில் சொல்லி இருப்பதாக நீங்கள் சொன்னாலும், பதில்கள் சிந்தித்து ஆழமாக எழுதப் பட்டிருக்கின்றன. அருமை.

priyasaki said...

பதில்கள் எல்லாமே மிக நன்றாக எழுதியிருக்கிறீங்க மனோ அக்கா. உங்களின் அறிவார்ந்த அனுபவத்தை எழுத்தில் எழுதியிருக்கிறீங்க. சுட்டிப்பேரன் கேட்ட கேள்வியை வாசித்து நானும் சிரித்துவிட்டேன். வாழ்த்துக்கள்.

கிருஷ்ணப்ரியா said...

அருமையான பதிவு மேடம்.
உங்களத் தேடி வந்ததால் நல்லதொரு பதிவு வாசிக்கக் கிடைத்தது
மகள் தற்சமயம் ஷார்ஜாவில்.
உங்கள் எண் அல்லது முகவரி தந்தால் அவளை வந்து பார்க்கச் சொல்வேன்.
என் மின்னஞ்சல் முகரிக்கு அனுப்புவீர்களா

இளமதி said...

அக்கா!...

அனைத்து விடைகளும் ஆழ்ந்த பொருளாம்
இணைத்தனை இங்கே இயல்பாய்! - உனைநான்
நினைக்கும் பொழுது நெருங்கும் அமைதி!
வினையுமே ஓடும் விரைந்து!

அத்தனை பதில்களும் அருமையானவை அக்கா!
உங்கள் எண்ணங்களும் எழுத்துக்களும்
என்றென்றும் யதார்த்தமானவை!
எனக்கு மிகமிகப் பிடித்தமான வலையுறவு நீங்கள்!
வாழ்த்துக்கள் அக்கா!

saamaaniyan said...

மனித மனங்களை பற்றிய பதில் அருமை ! உலகில் மிக கடினமான விசயம் ஆசாபாசாங்களற்று, நடுநிலை பார்வையோடு மனித மனங்களை புரிந்து கொள்ள கற்பதுதான் !

குழந்தைகளின் கள்ளங்கபடமற்ற கேள்விகளுக்கு முன்னால் துக்கமும் மறந்து போகும் !

" தேவையில்லாமல் நம்மைப்பற்றி தவறான செய்திகள் பரவும்போது அதற்கான நடவடிக்கை எடுக்கும் தார்மீகக் கடமை நமக்கு இருக்கிறது. "

நல்ல பதில் !

உங்களின் பதில்களில் வாழ்க்கை அனுபவம் மிளிருகிறது ! முத்துச்சிதறல்களாய் !!

என்னை தங்களின் நட்பு வட்டத்தில் இணைத்தமைக்கு நன்றிகள் பல. சென்ற மாதமே நண்பர் கீல்லர்ஜீ ( பேரு தாங்க பயமா இருக்கும் ! ப‌திவுகள் அருமை !! www.killergee.blogspot.ae
) புண்ணியத்தில் இந்த தொடர்பதிவில் பங்குபெற்றுள்ளேன்.

பதிவின் இணைப்புக்கான சுட்டி : http://saamaaniyan.blogspot.fr/2014/06/blog-post_23.html

படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை பதியுங்கள்.நன்றி

சாமானியன்
saamaaniyan.blogspot.fr

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

நல்ல பதில்கள்

நிலாமகள் said...

உங்களை நேரில் பார்த்து பேசிய நிறைவு கிடைத்தது பதிவின் வழி.

அழைப்புக்கு நன்றி! காலக் கெடு தராமைக்கும்!

ஹுஸைனம்மா said...

சிந்தனையைத் தூண்டி விடும் பதில்கள்.

என்னையும் அழைத்திருக்கிறீர்கள். நிச்சயம் எழுதுகிறேன். நன்றி அக்கா.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான பதில்கள்
எனக்கும் ஒர் அழைப்பு விட்டுள்ளீர்கள்
அவசியம் எழுதுகின்றேன்
நன்றி சகோதரியாரே

மனோ சாமிநாதன் said...

விரிவான, அழகிய பின்னூட்டத்திற்கு அன்பான நன்றி சொக்கன் சுப்ரமண்யம்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுடன் கூடிய அருமையான கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்த்ரைக்கு அன்பு நன்றி குமார்!

மனோ சாமிநாதன் said...

அருமையான பின்னூட்டத்திற்கும் பராட்டிற்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

இனிய் கருத்துரைக்கு அன்பு நன்றி பிரியசகி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கிருஷ்ணப்ரியா!

மனோ சாமிநாதன் said...

உங்களுக்குப் பிடித்த வலையுறவாக நானிருப்பது எனக்குப் பெருமை இளமதி! மனமார்ந்த பாராட்டுக்கவிதைக்கு அன்பு நன்றி !!

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சாமானியன்! தங்களின் தொடர்பதிவிற்கான பதில்களையும் ரசித்துப்படித்தேன்! மிக அருமை!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கிரேஸ்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி நிலாமகள்!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாரட்டிற்கும் இனிய நன்றி ஹுஸைனம்மா! அவசியம் எழுதுங்கள். நிச்சயம் உங்கள் பதில்கள் வித்தியாசமானதாகவே இருக்கும்!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!!