சென்ற வருடம் என் கணவருக்கு மிகுந்த உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதன் பின் தீவிர சிகிச்சைக்கு பின் பூரண நலமடைந்த விபரம் பற்றி இங்கே என் வலைத்தளத்தில் எழுதியிருந்தேன். அந்த ச்மயம் மன உளைச்சல் காரணமாக என் சர்க்கரையின் அளவு அதிகமாக ஏறத்தொடங்கியது. எந்த விதமான டயட்டிற்கும் மருந்துகளுக்கும் குறையவில்லை.
பொதுவாய் சர்க்கரை வியாதிக்கு ஆரம்ப நிலையில் மெட்ஃபோர்மின் மாத்திரைகள் குறைந்த அளவில் கொடுப்பார்கள். பின் சரியான டயட் பின்பற்றாமலிருந்தாலோ, மன உளைச்சல்கள், அளவு கடந்த கார்போஹைட்ரேட் உணவுகள் காரணமாகவோ இந்த மாத்திரையின் அளவுகள் அதிகரிக்கும். அதுவும் போதாமல் ஒரு கட்டத்தில் இந்த மெட்ஃபோர்மின் மாத்திரைகளுடன் வீரியம் மிக்க மருந்துகளைக் கலந்து மருத்துவர்கள் தருவார்கள். இவைகளும் பயன்படாத கட்டத்தில் இன்சுலின் தர வேன்டிய கட்டாயத்தில் நோயாளி இருப்பார். பொதுவான நடைமுறை இது தான்.
வெளிநாட்டிலும் தமிழ்நாட்டிலும் அலோபதி மருத்துவர்கள் மாற்றி மாற்றி கொடுத்த வீரியமம் மிக்க மருந்துகள் கூட பலனளிக்காத நிலையில் சகோதரர் கரந்தை ஜெயக்குமார் எங்கள் சந்திப்பின்போது குறிப்பிட்ட ஒரு சித்த மருத்துவரிடம் சென்று பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன்.
இந்த மருத்துவரைப்பற்றி சகோதரர் ஜெயக்குமார் ஏற்கனவே தன் வலைத்தளத்தில் விரிவாக எழுதியிருக்கிறார். தன் இல்லத்தரசிக்கும் தந்தைக்கும் ஏற்பட்ட உடல் நலப்பிரச்சினைகளை இந்த மருத்துவர் சரி செய்த விதம் பற்றி எழுதியிருப்பதை கீழ்க்கண்ட இணைப்பில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
http://karanthaijayakumar.blogspot.com/2013/10/blog-post.html
சித்த மருத்துவர் தம்பையா அவர்கள் தஞ்சையில் அகத்தியர் இல்லத்தில் மருத்துவமனை ஒன்றினை நடத்தி வருபவர். வடலூர் இராமலிங்க அடிகளாரின் பேரடியாராய் அருட்பெருஞ்சோதி அறக்கட்டளை என்னும் பெயரில் அறக்கட்டளை ஒன்றினை நிறுவி, நடத்தி வருபவர். இதைச்சுற்றி அகத்தியர் ஆலயம், இராமலிங்க அடிகளார் தியான மண்டபம் என அமைதி தவழும் இடங்களும் சுவர்களில் வரைந்திருக்கும் சித்தர்களின் பாடல்களும் நம் மனதிற்கு ஒரு இனம் புரியாத அமைதியினைக் கொடுக்கும்.
மதியம் நூறு முதல் 200 பேர்கள் வரை தஞ்சைப் பெரிய கோயிலுக்கு அருகில் உள்ள திலகர் திடலில் ஏழை எளியவருக்கு தினந்தோறும் அன்னதானம் செய்து அவர்களின் பசியாற்றி வருகிறார்.
மருத்துவர் தம்பையா அவர்களிடம் என் பிரச்சினையைச் சொன்னதும் என் கரத்தைப்பற்றி நாடி பிடித்து பார்த்த மருத்துவர் அவர்கள், ' சர்க்கரையை முழுவதும் குணப்படுத்த இயலாதென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உடலில் பரவியிருக்கும் நச்சுத்தன்மையை நீக்கி சுத்தம் செய்து விட்டாலே பாதி நோய்கள் மறைந்து விடும். அதைத்தான் உங்களுக்கு நான் செய்யப்போகிறேன்.' என்று கூறி மருந்துகள் கொடுத்தார்கள். கூடவே நான் வழக்கமாக எடுத்து வரும் வீரியம் மிக்க அலோபதி மருந்துகளையும் தொடர்ந்து எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள்.
கூடவே, பொதுவாய் சர்க்கரை உடலில் அதிகமாகும்போது அதற்காக சில குறிப்பிட்ட மெட்ஃபோர்மின் மருந்துகள் எடுத்துக்கொள்ள நேரும்போது உடம்பில் வயிற்றில் அசிடிட்டியும் அதிகரிக்கிறது. அதனால் வாயு அதிகரிக்கிறது. அதன் காரணமாய் உணவில் பாகல், சுண்டைக்காய், அகத்தி போன்ற கசப்பான காய்களையும் பித்தம் உண்டாக்கும் பீர்க்கையையும் நீக்குமாறும் நாட்டுப்பழங்களை அறவே நீக்குமாறும் சொன்னார்கள்.
20 நாட்களுக்குப்பிறகு சர்க்கரையின் அளவு மெதுவாகக் குறையத்தொடங்கியது. அதன் பிறகு வீரியம் மிக்க அலோபதி மருந்துகள் ஒத்துக்கொள்ளாததால் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றைக்குறைத்து எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள். ஒரு கட்டத்தில் அந்த மருந்துகளை முழுவதுமாக நிறுத்த வேண்டியதாயிற்று. இப்போது சர்க்கரைக்கு ஆரம்ப காலத்தில் எடுத்துக்கொண்ட சாதாரண மெட்ஃபோர்மின் மாத்திரையே எடுத்துக்கொண்டிருக்கிறேன். முன்போல போதிய பழங்கள் சாப்பிட முடிவதோடு, மனதில் அமைதியும் நிறைய வந்து சேர்ந்திருக்கிறது.
ஒரு மருத்துவரிடம் நாம் போகும்போது நமது உடல்நலம் பற்றிய வேதனை, குழப்பம், வலி இவற்றுடன் தான் செல்கிறோம். நம் மனக்கவலையைப்போக்கி, மனதுக்கு தைரியம் கொடுத்து, நம் சந்தேகங்கள் யாவற்றையும் தன் விளக்கங்களால் தீர்த்து, திரும்பி வரும்போது ஒரு புதிய நம்பிக்கையையும் மனதிற்குக் கொடுப்பது ஒரு சில சிறந்த மருத்துவர்களால் மட்டுமே முடியும். அந்த மாதிரி தன்மையுள்ள ஒரு மருத்துவரை திரு. தம்பையா அவர்களிடம் நான் காண நேர்ந்தது வெகு நாட்களுக்குப்பிறகு மனதுக்கு மிகுந்த நிம்மதியையும் மன நிறைவையும் அளித்தது.
இந்த அனுபவத்திற்குப் பிறகு என் நண்பர்கள், உறவினர்கள் சிலரை மருத்துவர் தம்பையா அவர்களிட்ம் அனுப்பியிருக்கிறேன். அவர்களும் தங்களின் கடுமையான நோயின் தாக்குதல்களிலிருந்து விடுபடத் தொடங்குவதாக சொல்லுவது மனதுக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது.
இதற்காக மருத்துவர் தம்பையா அவர்களுக்கும் சகோதரர் ஜெயக்குமார் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றியை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்!!!
நான் அடைந்த நிம்மதியை பலவிதமான நோய்களின் தாக்குதலினால் வாடி நிற்கும் பலரும் அடைய வேண்டுமென்பதற்காகவே இங்கே என் பிரச்சினையையும் எழுதியிருக்கிறேன். இந்தக் கட்டுரை யாருக்கேனும் பயன்பட்டால் இந்தப் பதிவை எழுதியதற்கான பலன் கிடைத்ததென்று மகிழ்வேன்.
விலாசம்:
டாக்டர் தம்பையா,
அகத்தியர் இல்லம்,
ரத்தினவேல் நகர்,
மாதாக்கோட்டை சாலை,
தஞ்சாவூர்.
இந்த மாதாக்கோட்டை சாலை தஞ்சாவூரிலுள்ள பழைய ஹவுஸிங் யூனிட் அருகே குழந்தை யேசு கோவிலுக்கு எதிரே காவேரி நகருக்கென்று ஒரு சாலை பிரிந்து செல்லும். அந்த சாலையிலேயே பயணித்தால் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அகத்தியர் இல்ல்ம் என்ற போர்டு இருக்கும். அதிலிருந்து சற்று உள்நோக்கி பயணிக்க வேண்டும்.
மருத்துவர் ஐயா ஞாயிறு தவிர மற்ற கிழமைகளில் காலை நேரங்களில் மட்டுமே வைத்தியம் பார்க்கிறார். முன்கூட்டியே ஃபோன் செய்து விட்டு செல்வது நல்லது.