Monday 28 April 2014

இதயத்திற்கும் வயிற்றிற்கும் நலம் காண...!!

இரத்தக்குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் காக்க நாம் வீட்டிலேயே ஒரு ஜூஸ் தயார் செய்து தினமும் அருந்தலாம். என் கணவரின் சகோதரர், இரு முறை இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், இதை தினமும் அருந்துவதை வழக்கமாகக் கொன்டிருக்கிறார்கள். அவ்வப்போது செய்து கொள்ளும் அவர்களுடைய இரத்தப் பரிசோதனைகள், மற்ற‌ இதய பரிசோதனைகள் அனைத்தும் சீராகவே இருந்து வருகிறது. இந்த ஜூஸ் செய்யும் முறையை இப்போது விளக்கமாக எழுதுகிறேன். இதை அனைவரும் தினமும் அருந்தலாம்.






தேவையான பொருள்கள்:

இஞ்சி சாறு‍ 1 கப், பூண்டு சாறு‍ 1 கப், ஆப்பிள் சிடார்  வினீகர்‍ 1 கப், எலுமிச்சை சாறு‍ 1 கப்

செய்முறை:

1 கப் இஞ்சி சாறு செய்ய இரண்டு கப் துருவிய இஞ்சி எடுத்து போதுமான நீரை சேர்த்து மையாக அரைக்க வேண்டும். அரைத்த பேஸ்ட்டுடன் 1 கப் அளவு வரும் வரை நீர் சேர்த்து ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி, அந்த இஞ்சி சாற்றை அரை மணி நேரம் தெளிய விடவும். மேலே தெளிந்து கீழே வெண்மை படிந்திருக்கும். தெளிந்த இஞ்சி சாறு மட்டுமே ஒரு கப் அளந்து எடுத்துக்கொள்ள‌வும்.

பூண்டு சிறியதாய் இருப்பது நல்லது. தோல் உரித்து அல்லது தலையை மட்டும் கிள்ளி எடுத்துக்கொன்டு தோலுடன் மையாக அரைக்கவும். போதுமான நீர் கலந்து மெல்லிய துணியில் வடிகட்டினால் தெளிந்த பூண்டு சாறு கிடைக்கும்.

1 கப் எலுமிச்சை சாறு எடுக்க ஐந்து அல்லது ஆறு எலுமிச்சம் பழங்கள் தேவைப்படும்.

அனைத்து சாறுகளுடன் ஆப்பிள் சிடார் வினீகர் கலந்து சிறு தீயில் அரை மணி நேரம் காய்ச்சவும். 3 கப்பாக குறையும் வரை காய்ச்ச வேண்டும். பின் அதை நன்றாக ஆற வைத்து 3 கப் சுத்தமான தேன் கலந்து ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக்கொள்ளவும்.

இதை தினமும் காலை உணவுக்கு முன் ஒரு மேசைக்கரண்டி சாப்பிட்டு வர வேண்டும்.

ACIDITY எனப்படும் நெஞ்செரிச்சல்:

இந்தப்பிரச்சினை இன்றைக்கு பலரையும் பாதிக்கிற‌து. வாயில் சுரக்கின்ற அமிலம் உண்வுப்பாதையில் திரும்ப வருவதால் வயிறு அல்லது நெஞ்சில் வலியும் எரிச்சலும் ஏற்படுகிறது. இதனால் வயிற்றில் வலி, உப்புசம் ஏற்படுகிறது. சரியான உனவுப்பழக்கத்தின் மூலம் இந்தப்பிரச்சினையை சரியாக்கிக்கொள்ல முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சில் சமயங்களில் மன‌ அழுத்தம், மாத்திரைகள் இவற்றாலும் கூட இந்த அசிடிட்டி உருவாகிறது.

பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களில் உணவு செரிமானத்திற்கு உதவும் பாப்பெயின் மற்றும் புரோமிலெயின் ஆகிய என்சைம்க‌ள் அதிக அளவில் உள்ள‌ன. எனவே இந்தப்பழங்களை அதிக அளவில் சாப்பிடலாம். முட்டைக்கோசு சாறு நெஞ்செரிச்சலுக்கு மிகவும் நல்லது. செரிமானப்பாதைக்கு மிகவும் பயன்படும் குளூட்டாமின் என்னும் அமினோ அமிலம் முட்டைக்கோசில் நிறைய உள்ளது. எனவே முட்டைக்கோஸை சாறகவோ அல்லது சாலட் ஆகவோ அல்லது சூப்பாகவோ அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு இஞ்சி டீ குடிப்பது நல்லது. செரிமானத்திற்கு தேவையான சுரப்பிகளின் செயல்பாடுகளை தூண்டி இது விடுகிறது.

அசிடிட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் மசாலா கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகள், அமிலத்தன்மை நிறைந்த உண‌வுகளான தக்காளி, சிட்ரஸ் பழங்களைத் தவிர்க்க வேண்டும். காப்பி, டீ போன்ரவைகளை கண்டிப்பாக தவிர்த்து, க்ரீன் டீ குடிப்பது நல்லது. கொழுப்புச்ச்த்துள்ள‌ பால், அசைவ உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். சீரகம், சோம்பு, புதினா இவற்றை உணவில் அதிக அளவில் பயன்படுத்துவது நல்லது.

28 comments:

Menaga Sathia said...

பயனுள்ள குறிப்பு,பகிர்வுக்கு நன்றிம்மா!!

கோமதி அரசு said...

அருமையான பயனுள்ள குறிப்பு.
நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

பயனுள்ள குறிப்புகள்.....

Avargal Unmaigal said...

உபயோகமான குறிப்பு..பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

நீங்கள் குறிப்பிட்ட வினிகரை மதிய மற்றும் இரவு சாப்பாட்டிற்கு முன்பு ஒரு டீ ஸ்பூன் அளவில் அருந்திவிட்டு அதன் பின் உணவு உண்டால் நம் உடம்பில் உள்ள சுகர் அளவு 30 சதவிகிதம் குறையும். இது சகர் நோயாளிக்கு உதவும்

Yaathoramani.blogspot.com said...

பயனுள்ள குறிப்பு
பதிவாக்கித் தந்தமைக்கு
மிக்க நன்றி

RajalakshmiParamasivam said...

உபயோகமான மருத்துவக் குறிப்பு. வீட்டிலேயே செய்யும் முறை சொல்லிக் கொடுத்தற்கு நன்றி மனோ மேடம்.

கரந்தை ஜெயக்குமார் said...

மிகவும் பயனுள்ள பதிவு சகோதரியாரே
நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் பயனுள்ள குறிப்புகள். பகிர்வுக்கு நன்றிகள்.

ப.கந்தசாமி said...

ஆப்பிள் செடார் வினிகர் எவ்வளவு எடுத்துக் கொள்ளவேண்டும்?

திண்டுக்கல் தனபாலன் said...

மிக மிக பயனுள்ள குறிப்பு... சேமித்துக் கொண்டேன்... நன்றி...

புவனேஸ்வரி ராமநாதன் said...

அனைவருக்கும் உதவக்கூடிய வகையில் அருமையான தகவல்களைப்
பகிர்ந்துள்ளீர்கள் மனோம்மா. மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.

unmaiyanavan said...

பயனுள்ள பதிவை பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.

test said...

வணக்கம் நண்பர்களே

உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் வருகைக்கும் அன்பு நன்றி மேனகா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு இனிய நன்றி கோமதி அரசு!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

சர்க்கரை நோய்க்கு நல்லதொரு குறிப்பு தந்ததற்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி அவர்கள் உண்மைகள்!!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ராஜலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு அன்பு நன்றி சகோதரர் பழனி கந்தசாமி!

ஆப்பிள் சிடார் வினீகர் 1 கப் எடுத்துக்கொள்ள‌ வேண்டும் இந்த ஜூஸ் செய்வதற்கு!

மனோ சாமிநாதன் said...

நல்லதொரு குறிப்பை சேமித்துக்கொண்டதற்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

இனிய வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி புவனேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி சொக்கன் சுப்ரமண்யம்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் சொல்லிய தகவல்களுக்கும் அன்பு நன்றி கார்த்திக் சேகர்!

ezhil said...

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

மிகவும் பயனுள்ள பதிவு.
மிக்க நன்றி சகோதரி.
இனிய பாராட்டுக்கள்.
Vetha.Elanagthilakam.