Tuesday, 19 March 2013

சமையலறையில் மருத்துவம்!!


நம் சமையலறையில் நாம் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கும் எத்தனையோ பொருள்கள் மருத்துவ நன்மைகளை அதிகமாய்த் தரக்கூடியவை.
நமக்கு அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு உபாதைகளுக்கு, உடனேயே மருத்துவரிடம் செல்லாமல் நமக்கு நாமே கை வைத்தியம் செய்து கொள்ள‌க்கூடிய மருத்துவ முறைகள் ஏராளமாய் வெந்தயம், ஏலம், மிளகு, எள், சீரகம், உளுந்து போன்ற பொருள்களில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் சில முத்துக்கள் இங்கே!

மருத்துவ முத்துக்கள்!!

அரிசித்திப்பிலியும் 10 சீரகமும் பொடித்து தேனில் கலந்து கொடுத்தால் தொடர் விக்கல் சரியாகும்.உஷ்ணத்தால் வரும் வயிற்றுப்போக்குக்கு சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயத்தைப்போட்டு குடித்தால் உடனேயே வயிற்றுப்போக்கு சரியாகி விடும்.

சளியினால் தலைகனம் வரும்போது:7,8 கிராம்பை சந்தனக்கல்லில் மையாக அரைத்து நெற்றியில் பற்று போட்டால் பலன் கிடைக்கும்.முருங்கைப்பூவை பொரியல், சூப் என்று செய்து சாப்பிட்டு வந்தால் வாயுத்தொல்லை நீங்கும்.

நாலைந்து செம்பருத்திப்பூக்களை 2 கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் சாறை காலையும் மாலையும் பருகி வந்தால் இதய சம்பந்தமான பிணிகள் அத்தனையும் நீங்கும்.வாசனைப்பொருள்களின் அரசி என்ற‌ழைக்கப்படும் ஏலக்காய் பல மருத்துவ குணங்கள் கொண்டது. இதில் எளிதில் ஆவியாகக்கூடிய பல எண்ணெய்கள் இருப்பதால் இதன் ம‌ருத்துவ குணங்கள் அதிகம்.

ஜலதோஷத்தால் மூக்கடைப்பு ஏற்பட்டு அவதிப்படும் குழந்தைகளுக்கு 4 ஏலக்காய்களை நெருப்பிலிட்டு அந்தப் புகையை முகரச்செய்தால் மூக்கடைப்பு பிரச்சினை உடனே சரியாகும்.

டீ தயாரிக்கும்போது டீத்தூளுடன் நிறைய ஏலக்காய்கள் சேர்த்து த‌யாரிக்கும் தேனீர் மன அழுத்தத்தைக்கூட சரியாக்குகிறது.  4 ஏலக்காய்களையும் சிறு துண்டு சுக்கையும் நீர் விட்டு அரைத்து தண்ணீர் கலந்து பருகினால் தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் சரியாகும்! நெஞ்செரிச்சலும் வாயுத்தொல்லையும் இருக்கும்போது, சில ஏலக்காய்களை மென்று தின்றால் வாயு பிரிந்து நெஞ்செரிச்சல் குறைகிறது.

தொண்டை கட்டி பேச குரல் எழும்பாதபோது, மஞ்சள், தேன், சுண்ணாம்பு மூன்றையும் குழைத்து தொண்டையிலும் கால் பெருவிரலிலும் தடவவும்.எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.விடாத விக்கல் ஏற்படும்போது ஒரு ஸ்பூன் சர்க்கரையை விழுங்கவும். சீனி கரையாது உடனேயே விழுங்கி விட வேண்டும். உள்ளே மணலாய் செல்லும் சர்க்கரை தொண்டையிலுள்ள நுண்ணிய நரம்பு முனைகளை வருடி, முக்கியமாக விக்கல் தொடரக்காரணமான ஃப்ரிபினிக் என்னும் நரம்பை அமைதிப்படுத்தி, விக்கலை நிறுத்தி விடுகிறது.

படங்கள்: கூகிளுக்கு நன்றி!!


22 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிலவற்றை வீட்டில் குறித்துக் கொண்டார்கள்... நன்றி...

Yaathoramani.blogspot.com said...

Payanulla pathivu Pakirvukku vaazhthukkal

Asiya Omar said...

நல்ல பகிர்வு அக்கா.

இளமதி said...

மிக அவசியமான நல்ல மருத்துவ முத்துக்கள் மனோஅக்கா.

எனக்கும் எங்கள் வீட்டில் யாவருக்குமே இப்படிக் கைவைத்தியங்கள்தான் மிகவும் பிடித்தமானது. என் பெற்றோர் தாய்நாட்டில் வாழ்வதால் இப்பகூட ஏதும் அவசியமான இப்படி உடனடி வைத்தியத்திற்காக அவர்களைத்தொடர்புகொண்டு கேட்பது வழமையாகக் கொண்டுள்ளேன்.

அக்கா... மிகுந்த மலச்சிக்கல், அல்லது மூலம் போன்ற கொடுமைக்கு ஏதும் இதுபோன்று சொல்லுங்கள். உதவியாக இருக்கும். என் குடும்பத்தில் ஒருவருக்கு இதனால் மிகுந்த துன்பம்.

அருமையான பகிவு அக்கா. மிக்க நன்றி!

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் பயனளிக்கும் பதிவு.

சமையலறையில் உள்ள பொருட்களைக்கொண்டே மருத்துவக்குறிப்புகள் கொடுத்துள்ளது, மிகச்சிறப்பாக உள்ளது.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

RajalakshmiParamasivam said...

அருமையான விட்டு மருத்துவ குறிப்புகள். பகிர்விற்கு நன்றி.

RAMA RAVI (RAMVI) said...

மிகவும் அருமையான மருத்துவ முத்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

கே. பி. ஜனா... said...

சமையலறை மகத்துவம்! பயனுள்ள பகிர்வு!

ezhil said...

அருமையான மருத்துவக்குறிப்புகள்... பகிர்தலுக்கு நன்றி...

பூ விழி said...

மருத்துவ குறிப்புகளுக்கு நன்றி

உஷா அன்பரசு said...

பயனுள்ள குறிப்புகள். நன்றி!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல குறிப்புகள். புக்மார்க் செய்து கொண்டேன்.

Radha rani said...

மிகமிக நல்ல தகவல் முத்துக்கள் மேடம்..பகிர்விற்கு நன்றி.

கோமதி அரசு said...

அருமையான மருத்துவ முத்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

நல்ல குறிப்புகள் அம்மா....

Ranjani Narayanan said...

//தொண்டை கட்டி பேச குரல் எழும்பாதபோது, மஞ்சள், தேன், சுண்ணாம்பு மூன்றையும் குழைத்து தொண்டையிலும் கால் பெருவிரலிலும் தடவவும்.//
கால் பெருவிரலிலுல் தடவ வேண்டும் என்ற குறிப்பு முன்பு அறியாதது.

தினகரன் வசந்தம் இதழில் இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள், மனோ!

ஸ்ரீராம். said...

நம்முடைய சமயலறையிலேயே மருத்துவத்தை வைத்துக் கொண்டு மாத்திரைக்கு வெளியில் அலைகிறோம்! வாயுத் தொல்லை, தலைப்பாரம், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கான மருத்துவக் குறிப்புகள் எனக்கு உபயோகமானவை.

Kanchana Radhakrishnan said...

பகிர்வுக்கு நன்றி.

மனோ சாமிநாதன் said...

அருமையான பின்னூட்டங்கள் அளித்த சகோதரர்கள் வை.கோபாலகிருஷ்ணன், திண்டுக்கல் தனபாலன், ஸ்ரீராம், ரமணி, ஜனா, வெங்கட் நாகராஜ், குமார், சகோதரியர் எழில், மலர், ரஞ்சனி, ராஜலக்ஷ்மி, காஞ்சனா, மாதேவி, கோமதி,ராதாராணி, ஆசியா, இளமதி, ரமா, உஷா அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றி!!

சாந்தி மாரியப்பன் said...

பயனுள்ள குறிப்புகள் மனோம்மா. கிராம்பைப்போலவே சுக்கை இழைத்துப் பற்றுப்போட்டாலும் வலி குணமடைகிறது என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

தினகரன் வசந்தத்தில் இடம் பெற்றமைக்கு இனிய வாழ்த்துகள்.

புரட்சி தமிழன் said...

உணவே மருந்தாக இருக்கும் போது நம்மக்கள் மருந்தையே உணவாக உண்கிறார்கள்.

நிலாமகள் said...

விக்கலில் தொடங்கி விக்கலில் முடிந்த அனைத்து குறிப்புகளுமே மிக மிக உபயோகமானவை. நன்றி.