Wednesday, 20 February 2013

முத்துக்குவியல்-18!!


ஒரு மாத இதழில் படித்த இந்த செய்தி என்னை மிகவும் பாதித்தது. அனைவரும் இந்த செய்தி தரும் எச்சரிக்கைகளால் விழிப்புணர்வு பெற வேன்டுமென்றே இங்கே இதை எழுதுகிறேன்.

அதிர்ச்சியடைய வைத்த முத்து:

அமெரிக்காவில் கடந்த ஜுன் மாதம் 29 வயது இளைஞன் தன் படுக்கையறையில் ஏராளமான தீக்காயங்களுடன் இறந்து கிடந்திருக்கிறான். போலீஸ் ஒரு தடயமும் இல்லாமல் மூளையைப்போட்டு கசக்கிக் கொண்டு காரணம் தேடியிருக்கிறது. கடைசியில் இந்த மரணத்துக்கு அவன் உபயோகித்த லாப்டாப்பே காரணம் என்று கண்டு பிடித்தனர்அந்த இளைஞன் தனது மெத்தையில் நீண்ட நேரம் லாப்டாப்பை வைத்து உபயோகித்திருக்கிறான். லாப்டாப்பின் அடியில் இருக்கும் cooling fanஆல் லாப்டாப்பிலிருந்து வெளியே வரும் அதிக பட்ச வெப்பத்தை வெளியே தள்ளி லாப்டாப்பை கூலாக வைத்திருக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் தாங்க முடியாத உஷ்ணத்தால் லாப்டாப் தீப்பிடித்து மெத்தை என்பதால் சுலபமாகப் பரவி அந்த இளைஞனின் உயிரைப்பறித்து விட்டது. 

தமிழ்நாட்டின் கணினி நிறுவனர் சொல்வது:

லாப்டாப்பில் ஐஸ் கூல் டெக்னாலஜி என்ற ஒன்று இருக்கிறது. அதாவது லாப்டாப்பின் CPU-உடன் இந்த கூலிங் ஃபான் இணைக்கப்பட்டு இருக்கிறது. லாப்டாப் இயங்க ஆரம்பிக்கும்போது இந்த ஃபான் சுற்ற ஆரம்பிக்கும். இது லாப்டாப்பின் வெப்பத்தை வெளியே அனுப்பி வெளியே இருக்கும் குறைந்த காற்றை லாப்டாப்பிற்குள் அனுப்புகிறது. ஆனால் மெத்தை மாதிரி இடங்களில் லாப்டாப்பை பயன்படுத்தும்போது மெத்தைக்கும் லாப்டாப்பிற்கும் இடையே காற்றை வெளியேற்ற இடம் இருக்காது. அதனால் வெப்பம் அதிகம் ஏறி லாப்டாப் வெடிக்கிறது.

ஒரு போதும் மெத்தை, தலையணைகளுக்கிடையில் லாப்டாப்பை வைத்து உபயோகிக்காதீர்கள். குழந்தைகள் லாப்டாப்பை பயன்படுத்தும்போது இரண்டு மடங்கு ஜாக்கிரதையாக இருக்க வெண்டும். குழந்தைகள் இதில் விளையாட்டுக்களை விளையாடும்போது லாப்டாப்பின் பயன்பாடு 100 சதவிகிதம் ஆகி எளிதில் சூடாகி விடும். எனவே லாப்டாப்பில் விளையாட உங்கள் குழந்தைகளை அனுமதிப்பது நல்லதேயில்லை. 

எச்சரிக்கைகள்:

லாப்டாப்பை தொடையில் அதிக நேரம் வைத்து உபயோகிப்பதும் நல்லதல்ல. ஜீன்ஸ், பெர்முடாஸ் போன்ற உடைகள் வெப்பத்தை அதிகபப்டுத்தக்கூடியவை.
லாப்டாப் பயன்படுத்தும் அனைவருமே கூலிங் பாட் என்ற சாதனத்தை வாங்கி பொருத்திக்கொள்வது நல்லது. இது லபடாப் அதிகம் சூடாவதை தவிர்க்க உதவும். லாப்டாப்பை மரத்தினால் ஆன பலகையில் வைத்து உபயோகிப்பது ரொம்பவே நல்லது.

சிரிக்க வைத்த முத்து:

மருமகள் தன் ஊருக்குப்போயிருந்த போது, என் மருமகளின் அப்பா பக்கத்தில் யாரோ இறந்து விட்டதை தன் மகளிடம் வந்து சொல்ல, அதைப்பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க, என் மூன்று வயது பேரன் ஆர்வம் தாங்காமல்   என்ன செய்தி என்று நச்சரிக்க, என் மருமகள் சட்டென்று எதுவும் சொல்லத்தெரியாமல் ‘ அவர் மேலே போய்ட்டாராம்’ என்று சொல்ல, என் பேரன், ' மேலேன்னா, அவர் ஃப்ளைட் ஏறி மேலே துபாய் போயிட்டாரா?' என்று கேட்க அந்த துக்க செய்தி கொடுத்த பாதிப்பையே இவர் பேச்சு மறக்கடித்து எல்லோருக்கும் சிரிப்பை வரவழைத்து விட்டது!

தகவல் முத்து:X48C:

எதிர்காலத்தில் எல்லா வகையிலும் பயன்படுத்தக்கூடிய பயணிகள் விமானத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. போயிங் விமானத்துடன் இணைந்து X48C என்ற மாடல் முக்கோண விமானத்தை தயாரித்துள்ளது. பின்னர் இதனை விரிவுபடுத்தி பல விமானங்களை தயாரிக்க உள்ளது. சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.

உளவு விமானத்தைப்போல இந்த விமானத்தில் ஜன்னல் ஓர இருக்கைகள் இருக்காது. மாறாக அதிக இருக்கைகள், மற்றும் அதிக எரிதிறன் கொண்டதாக இருக்கும். அதிக சரக்குகளையும் இதில் ஏற்றிக்கொண்டு செல்ல முடியும். முக்கோண வடிவம் என்பதால் எளிதில் காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லக்கூடிய திறமை வாய்ந்தது.

அடுத்த 15 ஆண்டுகளில் மிகச் சிறந்த பயணிகள் விமானமாக இருக்கும் என்பதுடன் ராணுவப்பயன்பாட்டுக்கும் மிக அதிக அளவில் பயன்படுமென்றும் நாசா விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

41 comments:

இராஜராஜேஸ்வரி said...

அதிர்ச்சியடைய வைத்த முத்து: எச்சரிக்கை தந்தது ..

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

Useful information Mano. Thanks for sharing it.

”தளிர் சுரேஷ்” said...

பயனுள்ள தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...


முதலில் சொன்னது முத்தல்ல..இப்படியும் நடக்குமா என்று அதிர்ச்சி அளிக்க வைத்த குத்து!

Radha rani said...

விழிப்புணர்வான பதிவு.. பகிர்விற்கு மிக்க நன்றி மேடம்.

pudugaithendral said...

அதிர்ச்சி அடைந்த முத்து நிஜமாவே பலருக்கு விழிப்புணர்வு தந்திருக்கும்.

பகிர்வுக்க்கு மிக்க நன்றி

எம்.ஞானசேகரன் said...

நானும் இந்த தவறைச் செய்துகொண்டிருந்தேன். இப்போது திருந்திவிட்டேன். நல்ல தகவல்!

இளமதி said...

மனோ அக்கா...நல்ல பயனுள்ள தகவல் அதிர்ச்சி முத்துமூலமும், சிரிக்கவைத்த மற்றும் தகவல் முத்தும் அருமை. சிறப்பு... வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

அதிர்ச்சியடைய வைத்த முத்து...

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முத்து என்பதால் பகிர்கிறேன்...

வெங்கட் நாகராஜ் said...

தில்லியில் கூட இது மாதிரி ஒரு முறை நடந்தது.....

படுக்கையில் கணினி வைத்து பயன்படுத்துவது ஆபத்துதான்....

தி.தமிழ் இளங்கோ said...

பயனுள்ள தகவல்! லாப்டாப் பயன்படுத்தும் எனது மகனிடம் சொல்ல வேண்டும்.

RajalakshmiParamasivam said...

லேப்டாப் பற்றிய முத்து நிஜமாகவே அதிர்ச்சி தந்தது.இதை என் facebook ல் ஷேர் செய்துகொள்ளலாமா?

நன்றி பகிர்விற்கு.

கே. பி. ஜனா... said...

லாப்டாப் விட்டு சற்றுத் தள்ளியே அமர வைத்து விட்டது! அதிர்ச்சியான தகவல்!

Asiya Omar said...

முத்துக்குவியல் வழக்கம் போல் அருமை..

நிலாமகள் said...

சுலப பயன்பாட்டிலிருக்கும் நவீன கருவிகளை கையாள்வதில் கவனம் தேவை தான். நல்லதை சொல்லிக் கொண்டே இருப்பதும் நம் கடமைதான்.

பேரனின் குழந்தைமைப் பேச்சு அழகு. நமக்கென்ன என்றிராமல் தனக்குத் தெரிந்ததைக் கொண்டு புரிந்து கொள்ள முயலும் ஆர்வம்!வளர்வதற்குள் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கும் விமானத்தில் சென்று விடுவார் தன தந்தையும் விஞ்சி.

புதுப் புது தகவல்களால் முத்துக்குவியல் ஜொலிக்கிறது.

ப.கந்தசாமி said...

தெரிந்து கொண்டேன்.

எல் கே said...

சில தகவல்கள்

இந்த சம்பவம் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகி விட்டது. பல்வேறு ரூபங்களில் மீண்டும் மீண்டும் சுற்றிக் கொண்டே இருக்கிறது

வெறும் லேப்டாப் இதற்கு காரணம் அல்ல. லேப்டாப் அப்பொழுது சார்ஜ் ஆகிக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் நடந்த விபத்து .

இரண்டாவது, லேப்டாப் ஓவர் ஹீட் ஆனால் ஆப் ஆகிவிடும். என் அனுபவத்தில் கண்டுள்ளேன்.

http://www.cbc.ca/news/canada/british-columbia/story/2009/08/26/bc-overheating-laptop-fire-death-vancouver.html

எல் கே said...

இந்த மாதிரி பல செய்திகள் இணையத்தில் திரும்ப திரும்ப உலவுகின்றன. இந்த மாதிரி செய்திகளை கீழ்கண்ட தளத்தில் உறுதி செய்து கொள்ளலாம்

http://www.hoax-slayer.com/

எல் கே said...

http://www.hoax-slayer.com/laptop-fire-warning.shtml

RAMA RAVI (RAMVI) said...

அனைத்து முத்துக்களுமே அருமை.

லாப்டாப் உப்யோகிக்கும் பொழுது ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.
நன்றி நல்ல தகவல் பகிர்வுக்கு.

aavee said...

பயனுள்ள பகிர்வு..!

ADHI VENKAT said...

லாப்டாப் உபயோகத்தை பற்றிய தகவலுக்கு நன்றி. லாப்டாப்பை மேஜை மேல் வைத்திருக்கும் நான் சில சமயங்களில் BACK PAIN காரணத்தால் தலையணையில் வைத்துக் கொள்வேன். இனி அதை செய்ய மாட்டேன்.

பேரனின் ஆர்வத்துக்கு பாராட்டுகள்..

சமீரா said...

நல்லதொரு எச்சரிக்கை முத்து...நன்றி!!

மாதேவி said...

நல்ல விழிப்பு பகிர்வு.

விமானத்தகவல்கள் என முத்துக்குவியல் நன்று.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் பயனுள்ள எச்சரிக்கைப்பதிவு.

பகிர்வுக்கு மிக்க நன்றி, மேடம்.

'பரிவை' சே.குமார் said...

அம்மா...

லாப்டாப் பற்றிய செய்தி எல்லாருக்கும் அவசியமானது...

உங்கள் பேரனின் கேள்வி சிரிக்க வைத்தது...

ஸ்ரீராம். said...

லாப்டாப் பற்றிய செய்தி அதிர்ச்சியை எல்கேயின் கமெண்ட் சற்றே தணிக்கிறது. ஆனாலும் எச்சரிக்கையாக இருத்தல் நலம்.

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி ராஜராஜேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the nice feedback Vidhya!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி சுரேஷ்!

மனோ சாமிநாதன் said...

நகைச்சுவையுடன் கூடிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ராமமூர்த்தி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி ராதாராணி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!
வருகைக்கு அன்பு நன்றி சகோதரர் பழனி கந்தசாமி!

மனோ சாமிநாதன் said...

விரிவான அழகிய பின்னூட்டத்திற்கு இனிய நன்றி நிலாமக‌ள்!!

வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம்! தாமதமாக பதில் எழுதுவதற்கு மன்னியுங்கள்! தமிழ்நாட்டில் பல வேலைகளின் அலைச்சலால் உடன் பதில் எழுத முடியவில்லை. தாராளமாக நீங்கள் லாப்டாப் பற்றிய செய்தியை FACE BOOK-ல் பகிர்ந்து கொள்ளலாம்

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜனா!

பாராட்டுக்கு அன்பு நன்றி ஆசியா!

விரிவான தகவல்களுக்கு இனிய நன்றி எல்.கே!

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ரமா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு இனிய நன்றி கோவை ஆவி!

விரிவான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி ஆதி!

வருகைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி சமீரா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு உள‌மார்ந்த நன்றி மாதேவி!

கருத்துரைக்கு அன்பு நன்றி குமார்!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி இளமதி!

முதல் வருகைக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும் இனிய நன்றி கவிப்ரியன்!

மனோ சாமிநாதன் said...

கருத்துப்பகிர்வுக்கு அன்பு நன்றி புதுகைத்தென்றல்!

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்!