Monday 31 December 2012

புதியதோர் உலகம் செய்வோம்!!சென்ற முறை நான் ஊருக்குப்போயிருந்த போது உறவுக்காரக்குழந்தை
[ எட்டு வயது ]தன் அப்பா, அம்மாவுடன் வீட்டுக்கு வந்திருந்தது. பேச்சு வாக்கில் ' உன் ஊர் எது?' என்று கேட்டேன். சற்று நேரம் யோசித்து விட்டு தன் அம்மாவின் ஊரான மயிலாடுதுறையைச் சொன்னது. பக்கத்திலிருந்தவர்கள் ' உன் ஊர் உன் அப்பாவின் ஊர் தான். அம்மாவின் ஊர் இல்லை' என்று சொன்னார்கள். குழந்தை உடனேயே பட்டென்று ' அம்மாவின் வயிற்றில்தான் நான் பிறப்பதற்கு முன்னால் இருந்தேன். அதனால் அம்மாவின் ஊர்தான் என் ஊர். நான் என்ன அப்பாவின் வயிற்றிலா இருந்தேன்?' என்று கேட்டது!

மனசு என்னவோ வேதனையில் வலித்தது. அவர்கள் சிரிப்பில் என்னால் மனப்பூர்வமாய் கலந்து கொள்ள முடியவில்லை. குழந்தைகள் இப்போதெல்லாம் குழந்தைகளாய் வளர்க்கப்படுவதில்லை.
அவர்களின் அளவுக்கு மீறிய பேச்சு, வயதுக்கு மீறிய செயல்கள் எல்லாம் பெற்றோரால் ரசிக்கப்படுகின்றன. ஊக்குவிக்கப்படுகின்றன. அதனால் குழந்தைகள் மனதிலிருந்த வெகுளித்தனம் காணாமல் போய் அங்கே முதிர்ச்சி வந்து விடுகிறது.அந்தக் காலத்தில் குழந்தைப்பேறு பற்றியோ, திருமண உறவு பற்றியோ, தாய்மையடைவதைப்பற்றியோ எதுவுமே தெரியாமல் திருமண வயது வரை பெண்கள் வளர்க்கப்பட்டார்கள். மனதில் வெகுளித்தனம் நிறைய இருந்தது. ஒப்பனை இல்லாமலேயே பெண்கள் அழகாயிருந்தார்கள். குடும்பத்திற்கு எது முக்கியமோ அது மட்டுமே அவர்களுக்கு போதிக்கப்பட்டது. அந்த போதனைகள் பின்னால் புகுந்த வீட்டு நலனும் உறவுகளும் ஆலமரமாக செழிக்க உதவி செய்தது.

எங்கள் குடும்ப நண்பர் வீட்டில் 15 வருடங்களுக்கு முன் அவர்கள் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் அவர்களின் பெண் குழந்தைகள் அம்மாவுக்கு இணையாக தலை குளித்து அடுப்படியில் எங்களுக்காக இடியாப்பம் பிழிவார்கள். தேங்காய் துருவி சட்னி செய்வார்கள். அந்த மாதிரி காட்சிகளை இப்போது  எங்குமே பார்க்க முடிவதில்லை!

அன்றைக்கு எங்கள் வீட்டில் என் கணவரின் நண்பர் பெண் சாப்பிட வந்திருந்தார்கள் தன் கணவருடனும் சகோதரி குடும்பத்துடனும். பேச்சு வாக்கில் இன்றைய குழந்தைகள் நான்கு சுவர்களுக்குள் இருந்து கொண்டு கணினியும் மொபைலில் விளையாட்டுமாய் அடுத்த தலைமுறையினரின் இயந்திரத்தனமான வாழ்க்கைக்குத் தயாராகி வருவதைப்பற்றி பேச்சு எழுந்தது. அதற்கு அந்தப் பெண்ணின் கணவர் சொன்னார், ' நீங்கள் ஏன் அடுத்த தலைமுறை வரை போகிறீர்கள் ஆன்டி? இதோ என் பெண்டாட்டிக்கு ஏதாவது சின்ன வயது சந்தோஷங்கள் இருந்ததா என்று கேளுங்கள். சென்னையில் வளர்ந்த பெண்! கொடுக்காப்புள்ளிகூட தெரியாது. நாவல் பழம் தெரியாது. சாப்பிட்டதில்லை! நாங்கள் எல்லாம் சண்டை போட்டுக்கொண்டு பறிப்போம். தெருதெருவாய் தேடிப்பிடித்து சாப்பிடுவோம்!' என்றார்.ஆதங்கங்கள் இன்றைய வாழ்க்கை முறையைப்பற்றி நிறைய இருக்கின்றன. எப்படி சுற்றுப்புற சூழ்நிலைகளும் சுகாதாரக்குறைவுகளும் புற வாழ்க்கையைப்பாதிக்கிறதோ, அதே போல தற்கால வாழ்க்கை முறையில் நிறைய விஷயங்கள் நம்மை, முக்கியமாக நம் எதிர்கால வாரிசுகளின் அக வாழ்க்கையைப் பாதிக்கின்றன.

இந்த இயந்திரத்தன்மை விடுத்து, நல்ல விஷயங்களையும் நல்ல பழக்க வழக்கங்களையும் ரசித்து அவர்கள் வாழ வேண்டும்! நம் எதிர்கால மன்னர்கள் அன்பும் கருணையும் கொண்ட அறிவுப்பூர்வமான புதியதோர் உலகம் சமைக்க வேண்டும்!

ஆரோக்கியமான,
அல்லல்களற்ற,
அனைத்து இனிமைகளும் அடங்கிய புதியதோர் உலகம் நாளை பிறக்கவிருக்கும் புத்தாண்டில்
அனைவருக்கும் கிடைக்க,


அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


 

 

 

 

27 comments:

Angel said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா .


(மீண்டும் வந்து விரிவாக பின்னூட்டமிடுவேன் )

அம்பாளடியாள் said...

மிகவும் சிறப்பான பகிர்வு !...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும்
உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு.....

இளமதி said...

நல்ல சிந்தனை..
அருமையான விஷயம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ப.கந்தசாமி said...

புத்தாண்டு மகிழ்ச்சி வருடம் முழுவதும் நிலைத்திருக்க வாழ்த்துகிறேன்.

ராமலக்ஷ்மி said...


தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

---

உண்மைதான். நகர வாழ்வில் இந்த தலைமுறை இழந்தவை ஏராளம்.

”தளிர் சுரேஷ்” said...

குழந்தைகளின் சுட்டித்தனம் அதிகரித்து விட்டது உண்மைதான்! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

பூந்தளிர் said...

இனிய ஆங்கில புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

என் மகன்கள்தான் சிறு வயதில் அப்படிச் சொன்னார்கள் என்று நினைத்தேன். குழந்தைகள் பொதுவாகவே அம்மா ஊரைத்தான் தன் ஊராக நினைக்கிறார்கள் போல!!

சிறு பிள்ளைகளாக, அறியாதவர்களாகத்தான் அப்படிச் சொல்கிறார்கள். வளர வளர எண்ணம் மாறிவிடும். ஆனால், கேட்பவர்கள்/அப்பா வீட்டுக்காரர்கள் அதைப் பெரிய குறையாக நினைத்து, உடனே வாதித்து மாற்ற முனைகிறார்கள். என் சின்னவன் ரொம்ப நாளாக, தான் பிறந்த அபுதாபிதான் அவனது சொந்த ஊர் என்று சொல்லிக் கொண்டிருந்தான்!! :-)))

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

உங்களின் ஆதங்கம் நன்கு புரிகிறது.
நன்றாகவே எடுத்துச்சொல்லியுள்ளீர்க்ள்.
நல்ல பகிர்வு. பாராட்டுக்கள்.

அன்பான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

சாந்தி மாரியப்பன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

Asiya Omar said...

அருமையான பகிர்வு அக்கா. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

Anonymous said...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் 2013 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நன்றாகவே எடுத்துச்சொல்லியுள்ளீர்கள்.
Vetha. Elangathilakam.

நிலாமகள் said...

மகிழ்வும் நன்றியும் சகோ...

அம்மா உயிர்;

(அடையாளமற்றவள்!) அப்பா உடல்.

மனோ சாமிநாதன் said...

புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி ஏஞ்சலின்! உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி அம்பாளடியாள்! உங்களுக்கும் எனது இனிமையான புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி இளமதி! உங்களுக்கும் எனது இனிமையான புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

தங்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி சகோத‌ரர் பழனி கந்தசாமி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி! உங்களுக்கும் எனது இனிமையான புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் சுரேஷ்! உங்களுக்கும் எனது இனிமையான புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் இதயம் நிறைந்த நன்றி பூந்தளிர்! உங்களுக்கும் எனது இனிமையான புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ஹுஸைனம்மா! உங்களுக்கும் எனது இனிமையான புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

க‌ருத்துரைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்க‌ளுக்கும் இனிய‌ ந‌ன்றி ராஜ‌ராஜேஸ்வ‌ரி! உங்க‌ளுக்கும் என் அன்பு நிறைன்த‌ புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்க‌ளுக்கு அன்பு ந‌ன்றி அமைதிச்சார‌ல்! உங்க‌ளுக்கும் என் அன்பு புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் வாழ்த்துக்க‌ளுக்கும் அன்பு ந‌ன்றி ஆசியா! உங்க‌ளுக்கும் என் அன்பு நிறைந்த‌‌ புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்!

மனோ சாமிநாதன் said...

க‌ருத்துரைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்க‌ளுக்கும் இனிய‌ ந‌ன்றி வேதா! உங்க‌ளுக்கும் என் அன்பு நிறைந்த‌‌ புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்!


G.M Balasubramaniam said...


இதற்கு கருத்திடும்போதுஒன்று நினைவுக்கு வருகிறது சாக்ரடீஸ் காலத்திலேயே அவரவர் தலைமுறைக்குப்பின் எல்லாம் கெட்டுப் போய்விட்டதாகக் கருத்துஇருந்ததாம். குழந்தைகள் வளர்ப்பில் தாய்க்கு அதிகம் பொறுப்பு இருக்கிறது. ஆனால் தாய்மார்கள் எப்போதும் தங்கள் உறவுகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். “ உறவுகள்” என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன் . படித்துப் பாருங்களேன்.