Monday 26 March 2012

பிரணயம்!!


சென்ற வாரம் பிரணயம் என்றதொரு மலையாளத் திரைப்படம் பார்த்தேன். பிரணயம் என்றால் காதல், அன்பு என்று சொல்லியிருக்கிறார்கள். முதுமையில் தடம் பத்திருக்கும் மூவரின் வாழ்க்கையில் அவர்கள் அனுபவிக்கும் உணர்ச்சிப் பிரவாகங்கள் தான் இந்த படத்தின் கதை. நம் இந்திய திரையுலகின் மூன்று சிறந்த நட்சத்திரங்கள்-விருதுகள் பல பெற்றவர்கள் இந்த கதாபாத்திரங்களாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். ஜெயப்பிரதா கதாநாயகியாகவும்  மோகன்லாலும் அனுபம் கேரும் கதாநாயகர்களாகவும் தங்கள் மன உணர்வுகளை அருமையாகப் பிரதிபலித்திருக்கிறார்கள்.. இது தன் dream project என்று இதன் இயக்குனர் ப்ளெஸ்ஸி தெரிவித்திருக்கிறார்.
ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தன் மகன் வெளிநாட்டில் வேலை பார்க்க, தன் மருமகளுடனும் பேத்தியுடனும் வாழும் அனுபம் கேரும் தன் மகள், மருமகனுடன் வாழும் ஜெயப்ரதாவும் லிஃட்டில் சந்திக்கிறார்கள். ஜெயப்ரதா லிஃடிலிருந்து வெளியேறும்போது அனுபம் கேருக்கு அது யாரென்று புரிந்து அவர் பெய்ரைச் சொல்லி அழைக்கும்போது, திடீரென்று ஏற்பட்ட இதயத்தாக்குதலில் ஒரு விநாடியில் கீழே விழுகிறார்.  ஜெயப்ரதா பதறித்துடித்து அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார். கண்களிலிருந்தும் கண்ணீர் அருவியாய்ப்பொழிய அவரது முன்னாள் வாழ்க்கை நிழலாய்க் கண் முன் விரிகிறது.

இளம் வயதில் கிறிஸ்தவரான கிரேஸ் என்ற ஜெயப்ரதாவிற்கும் அச்சுதன் என்ற அனுபம் கேருக்கும் காதல் ஏற்பட, எதிர்ப்புகளுக்கிடையில் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். மன வேறுபாடு காரணமாய் மனைவியை அனுபம் கேர் தன் மகனுடன் விரைவிலேயே பிரிய, விவாக ரத்து நடக்கிறது.. அதன் பின் மாத்யூஸ் என்ற மோகன் லாலை ஜெயப்ரதா மணக்கிறார். பிரிவிற்குப் பின் தன் தவறை உணர்ந்த அனுபம் கேர் வேறு திருமணம் செய்யாமல் தனிமையிலேயே வாழ்கிறார்.

நாற்பது வருடங்களுக்குப்பிறகு தன் முன்னாள் கணவரை சந்திக்கையில் பிரிந்த போன தன் மகனை நினைத்தும் மிக இளம் வயதில் தனக்கு அனுபம் கேரிடம் ஏற்பட்ட அன்பை நினைத்தும் குமுறிக் குமுறி தவிக்கிறார் ஜெயப்ரதா. மோகன்லாலிடம் தன் மன உணர்வுகளைப் பகிர்ந்தும் அழுகிறார். பக்க வாதத்தால் செயலிழந்து எந்நேரமும் படுக்கையிலும் வீல் சேரிலும் முடங்கியிருக்கும் மோகன்லால் தன் மனைவியின் உனர்வுகளை முழுமையாகப் புரிந்து கொள்வது தான் இந்தத் திரைப்படத்தில் மிக அழகு. அனுபம் கேர் மருத்துமனையில் இருக்கும்போதே, அவரின் மருமகளிடம் தான் யாரென்று சொல்லி அழுகிறார் ஜெயப்ரதா. வெளி நாட்டிலிருந்து உடனேயே திரும்பிய மகனுக்கு, குழந்தைப்பருவத்தில் தன்னிடமிருந்து பிரிந்து சென்ற தாயிடம் ஏற்பட்ட வெறுப்பு அடங்கவில்லை. வார்த்தைகளால் குதறுகிறார். தன் தந்தையின் வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாமென்கிறார். இதற்கப்பால் ஜெயப்ரதாவும் மோகன்லாலும் அனுபம் கேரும் நண்பர்களாகப் பழகுவதை மோகன்லாலின் மகளால் ஜீரணிக்க முடியவில்லை. அவரும் தன் வார்த்தைகளால் தன் அன்னையைக் காயப்படுத்துகிறார்.
மன அமைதிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் இந்த மூவரும் தன் குழந்தைகளிடம்கூட சொல்லாமல் ரொம்ப தூரத்திற்கு பயணம் செல்லுகிறார்கள். வழியெல்லாம் சிரித்து, ஆடிப்பாடி மகிழ்ந்து போகிறார்கள் இவர்கள். திடீரென்று மோகன்லாலுக்கு மறுபடியும் பக்கவாதம் வந்து தாக்க, அவர் ஒரு மருத்துவமனியில் சேர்க்கப்படுகிறார். உயிருக்குப் போராடி பிறகு கண் விழிக்கும் அந்த நிலையிலும் மோகன்லால் ‘தனக்கு ஏதேனும் ஆகி விட்டால் இருவரும் மறுபடியும் ஒன்று சேர வேண்டும்’ என்கிறார். அதை மறுத்து, தன் கணவரை தான் மிகவும் நேசிப்பதாக சொல்லி அழும் ஜெயப்ரதா, தாங்கள் தங்குமிடத்துக்கு திரும்புகிறார். அந்த நிலையில் அவரின் மகனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. ‘தன் தவறை உணர்ந்து கொண்டதாகவும் தன் தாயின் உணர்வுகளைப்புரிந்து கொண்டதாகவும் தன் அம்மாவை மிக மிக நேசிப்பதாகவும்’ சொல்லி விடை பெற்றுச் செல்லும் மகனை நினைத்து கண்ணீருடனும் சந்தோஷத்துடனும்  புன்னகைக்கிறார் ஜெயப்ரதா. அப்படியே அனுபம் கேரின் மீது சாய்ந்து இறந்து போகிறார்.

‘அவள் அத்தனை பிரியம் என் மீது வைத்திருந்தாள். நானும் அவளிடம் அத்தனை பிரியம் வைத்திருந்தேன்’ என்று கலங்கி அழும் மோகன்லாலை வீல் சேரில் அமர்த்தி அனுபம் கேர் தள்ளிச் செல்ல.. படம் நிறைவடைகிறது.

ஜெயப்ரதாவின் தவிப்பும் கண்ணீரும் நிறைந்த நடிப்பு மனதை நெகிழ்த்துகிறது. மோகன்லாலிடம் அவர் வைத்திருக்கும் பிரியத்தை படம் முழுவதும் அவர் வெளிப்படுத்தும் விதம் ஒரு காவியம். முன்னாள் கணவரைப் பார்த்த பின் அவரிடம் தான் வைத்திருந்த பாசம், பிரியம் எல்லாம் உடைந்து போன சோகமும் ஒரு பெண்ணாக நாற்பது வருடங்களுக்குப்பிறகும் அவரின் மனதை வலிக்கச் செய்கிறது. தன் மகனை நினைத்து, அவனின் வெறுப்பை நினைத்துக் குமுறும்போது ஒரு தாயாக அவர் தவிக்கிறார். ஒரு சமயம் அனுபம் கேரும் அவரும் தனிமையில் சந்திக்கும்போது, அனுபம் ‘ அவனுக்கு தாயன்பு கிடைக்காதது உன் தவறு என்று தான் நினைத்துக்கொண்டிருக்கிறான். எங்கே என்மீது வைத்திருக்கும் அவனின் பிரியமும் மதிப்பும் குறைந்து போய் விடுமோ என்ற பயத்தில் தவறு செய்தவன் நான் தானென்று இதுவரை சொல்லவில்லை. உன் மீது இந்த அளவு வெறுப்பை அவன் காட்டுவதைப்பார்க்கும்போது உண்மையைச் சொல்லி விடுவதே நல்லது என்று தோன்றுகிறது’ என்று கலங்கும்போது ‘வேண்டாம். என்னை இதுவரை தவறாக நினைத்ததே போதும். இனி உங்களையும் தவறாக நினைக்க வேண்டாம்’ என்னும்போது அவரின் நல்ல மனம் வெளிப்படுகிறது.

மோகன்லாலும் ஜெயப்ரதாவும் ஒருத்தருக்கொருத்தர் பிரியமாகப் பேசிக்கொள்ளும்போதும் மோகன்லால் தன் மனைவியை மிக உயர்ந்தவராய் ஆராதித்துப் பேசும்போதும் அவர்களைத் தள்ளி நின்று ரசிப்பதும் சில சமயம் அந்த அன்பைப்பார்த்து மனம் கலங்கி  தன் இழப்பு நினைவுக்கு வந்து ஒரு விநாடி சோகமாவதுமாக அனுபம் கேர் மிக அழகாக நடித்திருக்கிரார்.

மோகன்லால் நடிப்பைப்பற்றி சொல்லவே வேண்டாம். கேரளத் திரையுலகில் தன் நடிப்பால் உயர்ந்து நிற்பவர். அனுபம் கேர் ரோல் தான் அவருக்கு முதலில் கொடுக்கப்பட்டது. அதை மறுத்து இந்தக் கதாபாத்திரம்தான் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டாராம் மோகன்லால். அதை அவர் மிக அழகாக நியாயப்படுத்தியிருக்கிறார் தண் தன் மிகச் சிறந்த நடிப்பினால். இயங்க முடியாத உடலின் வலியையும் அவஸ்தையையும் பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
மொத்தத்தில் மன உணர்வுகளை மிக அழகாகப் பிரபலித்த படம் இது!!  

படங்கள் உதவி: கூகிள்

38 comments:

தமிழ் உதயம் said...

படத்தை பார்க்கும் ஆர்வத்தை தந்துவிட்டது விமர்சனம். நல்ல விமர்சனம்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இப்போதுதான் பார்த்து முடித்தேன்.

நான் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவன்.என்னால் ப்ரணயத்தின் தாக்கத்திலிருந்து மீள சிறிது நேரமாகலாம்.எத்தனை அருமையான கதையும் கதாபாத்திரங்களும்?

வாழ்க்கை கனவை விட அற்புதமானதுதான்.

முந்திக்கொண்டுவிட்டதற்காகப் அன்பு நிறைந்த பொறாமையும் பகிர்வுக்கும் உன்னதமான ரசனைக்குப் பாராட்டுக்களும்.

Yaathoramani.blogspot.com said...

ஒரு அருமையான திரைப்படத்தை
மிகச் சிறப்பான முறையில் அறிமுகம் செய்துள்ளீர்கள்
தங்கள் விமர்சனம் அவசியம் படத்தை பார்க்கத் தூண்டுகிறது
பகிர்வுக்கு நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

விமர்சனம் மிக நன்றாக எழுதியுள்ளீர்கள் பாராட்டுக்கள்.

Jaleela Kamal said...

மிக அருமையான விமர்சனம் மிக அருமை,
ரொம்ப மாதம் கழித்து அருமையான் படத்தை இங்கே உங்கள் எழுத்து மூலம் பார்த்தாச்சு மனோ அக்கா

குறையொன்றுமில்லை. said...

படத்தை பார்க்கும் ஆர்வத்தை தந்துவிட்டது விமர்சனம். நல்ல விமர்சனம்.

Menaga Sathia said...

உங்கள் விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது.நல்ல விமர்சன்ம்!!

ADHI VENKAT said...

அருமையான விமர்சனம் அம்மா. படத்தை பார்க்கும் ஆவலை தூண்டி விட்டு விட்டது.

தளிகா said...

மூன்று கதாபாத்திரங்களையும் இவ்வளவு அழகாக தேர்ந்தெடுத்ததற்கான காரணம்படத்தின் இறுதியில் அவர்களது நடிப்புத் திறமையில் தெரிய வரும்.ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மனதில் பதிந்து போனவை.டயலாக் ப்ரெசென்டேஷன் ரொம்பவே அழகு..மோஹன்லாலின் நடிப்பு அருமையோ அருமை..முதுமையிலான ஆழ்ந்த காதலை இவ்வளவு அழகாக காட்டியதாக நான் எந்த திரைப்படத்திலும் பார்த்ததே இல்லை.கண் முன் அனைத்தையும் நீங்கள் தெளிவாக எழுதிய விதம் அருமை..வாழ்த்துக்கள் மனோ ஆண்ட்டி

கீதமஞ்சரி said...

முதுமையின் நிதானத்தில் உள்ளம் பேசும் மொழியை அழகியத் திரைப்படமாக்கிய இயக்குநரைப் பாராட்டவேண்டும். படத்தின் சுவை குன்றாமல் அற்புதமாய் விமர்சித்திருக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் பாராட்டும் மேடம்.

ஸ்ரீராம். said...

மிக நல்ல பகிர்வு. அழகான கதைக்களம். படம் பார்க்கும் ஆவலைத் தூண்டி விட்டர்கள். மோகன்லால் பாத்திரம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாகக் காட்டாமல் அவரையும் ஆரோக்கியமானவராகக் காட்டியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன்!

Vijiskitchencreations said...

அம்மா சொன்னாங்க, நல்ல படம் என்று கேள்விபட்டேன்.. நிங்கள் தந்த விமர்சனத்தை பார்க்கும் போது அவசியம் பார்க்க வேண்டும், மோகன்லாலின் நடிப்பு அற்புதம் என்று எல்லோரும் சொன்னாங்க. நான் இனிமேல் தான் பார்க்கனும்.நன்றி.

ரிஷபன் said...

விமர்சனமே அழகிய கவிதையாய்.

raji said...

நேற்று இரவுதான் பார்த்தேன்.இன்று முழுதும் அதைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தேன்.இப்பொழுது டேஷ்போர்டில் ‘பிரணயம்’ என்ற தலைப்பைப் பார்த்ததும் அவசரமாக ஓப்பன் செய்து படித்தேன்.

என் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் பதிவு.
மிக அருமையான விமர்சனம்.விமர்சனம் என்று கூறுவதை விட அருமையான அனுபவம் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும் என தோன்றுகிறது.பகிர்விற்கு நன்றி.

ஸாதிகா said...

பிரஷண்ட் போட்டுக்கறேன் அக்கா.

middleclassmadhavi said...

ரொம்ப ஆழ்ந்து படத்தின் கதையினுள்ளே போனேன் உங்கள் விமர்சனத்தால்....

நல்ல விமர்சனம்.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான விமர்சனம்...

மோகன் லால், அனுபம் கேர் இருவருமே நடிப்பில் சிகரங்கள்.... போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள் எனத் தோன்றுகிறது.

பார்த்திட வேண்டியது தான்....

Anonymous said...

நல்ல விமரிசனம். நான் படங்கள் அதிகம் பார்ப்பதில்லை சகோதரி. மோகன்லால் மிகப்பிடிக்கும். நல்ல இடுகைக்கு நன்றி. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ரமேஷ்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் சுந்தர்ஜி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!!

மனோ சாமிநாதன் said...

இனிமையான பாராட்டிற்கு அன்பு நன்றி ஜலீலா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் க‌ருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரி லக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி மேனகா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஆதி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் அன்பு நன்றி தளிகா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் கருத்திற்கும் இனிய நன்றி கீதா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!!

மனோ சாமிநாதன் said...

அவ‌சியம் பாருங்கள் விஜி! மிகவும் ரசிக்க வைக்கும் படம்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் ரிஷபன்!

மனோ சாமிநாதன் said...

உண்மை தான் ராஜி, இது ஒரு நெகிழ வைத்த அனுபவம் என்று சொல்வது தான் சரி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு அன்பு நன்றி ஸாதிகா!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி மாதவி!!

மனோ சாமிநாதன் said...

அவசியம் இந்த படத்தைப்பார்த்து விட்டு உங்கள் க‌ருத்தைச் சொல்லுங்கள் சகோதரர் நாகராஜ்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி வேதா!

Asiya Omar said...

மனோ அக்கா,இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை உங்கள் விமர்சனம் தூண்டி விட்டுவிட்டது.முதுமையில் புரிதலுடன் கிடைக்கும் அன்பிற்கு ஈடும் உண்டோ!