Wednesday 7 December 2011

முருங்கைக்கீரை அடை

சமையல் பகுதிக்கு வந்து ரொம்ப நாட்களாகி விட்டதால் இந்த முறை ஒரு ருசிகரமான சமையல் குறிப்பை சமையல் முத்தாகப் படைக்கிறேன்.

பொதுவாக அடை என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் வித விதமான அடைகள் இருக்கின்றன. கார அடையில் நிறைய வகைகள். முறுமுறுவென்ற அடை, மிருதுவான அடை, பருப்புக்கள் அதிகம் சேர்க்காத மரவள்ளி அடை, சர்க்கரை வள்ளி அடை, பரங்கி அடை இப்படி பல வகைகளில் அடைகள் செய்யும் விதங்கள் இருக்கின்றன.

அது போல‌ அடைக்குத் தொட்டுக்கொள்ள‌ ஒவ்வொருத்த‌ரின் ரசனை ஒவ்வொரு விதம். சிலருக்கு கெட்டியான தேங்காய்ச் சட்னி வேண்டும். சிலருக்கு காரமான மிளகாய்ச் சட்னி வேண்டும். சிலருக்கோ வெல்லமும் வெண்ணெயும் வேண்டும். உணவகங்களில் அடைக்கு அவியல்தான் காம்பினேஷன் என்கிறார்கள். சிலருக்கு எதுவுமே தொட்டுக்கொள்ளாமல் சும்மாவே சாப்பிடப்பிடிக்கும்.[எனக்கும் அப்படித்தான்]

நான் இங்கே கொடுக்கப் போவது முருங்கைக்கீரை அடை!




முருங்கைக்கீரை அடை

தேவையான பொருள்கள்:
துவ‌ர‌ம் ப‌ருப்பு= 1 க‌ப்
பாசிப்ப‌ருப்பு‍ = அரை க‌ப்
க‌ட‌லைப்ப‌ருப்பு=‍ 1 க‌ப்
உளுத்த‌ம்ப‌ருப்பு‍ =அரை க‌ப்
புழுங்க‌ல‌ரிசி‍ = அரை க‌ப்
ப‌ச்ச‌ரிசி= அரை க‌ப்
வ‌ற்ற‌ல் மிள‌காய்‍=8
சோம்பு=1 ஸ்பூன்
பொடியாக‌ அரிய‌ப்ப‌ட்ட‌‌  வெங்காய‌ம்=2
தேங்காய்த்துருவ‌ல்=அரை க‌ப்
க‌டுகு‍=1 ஸ்பூன்
நெய்‍= 1 ஸ்பூன்
எண்ணெய்=1 ஸ்பூன்
க‌றிவேப்பிலை=சிறிது
முருங்கைக்கீரை= 1 க‌ப்
தேவையான‌ உப்பு
செய்முறை:

ப‌ருப்பு வ‌கைகளையும் அரிசி வகைகளையும் தனித்தனியாக, போதுமான‌ நீரில் சில‌ ம‌ணி நேர‌ங்க‌ள் ஊற‌ வைக்க‌வும்.

முத‌லில் அரிசி வ‌கைக‌ளை மிள‌காய், சோம்பு சேர்த்து இலேசான‌ கொர‌கொர‌ப்புட‌ன் அரைக்க‌வும்.

பிற‌கு ப‌ருப்பு வ‌கைக‌ளைச் சேர்த்து கொர‌கொர‌ப்பாக‌ உப்புட‌ன் சேர்த்து அரைக்க‌வும்.

தேங்காய்த்துருவ‌ல், முருங்கைக்கீரை, வெங்காய‌ம் சேர்க்க‌வும்.

நெய், எண்ணெய் இர‌ண்டையும் சேர்த்து சுட‌ வைத்து க‌டுகு, காய‌ம், க‌றிவேப்பிலைக‌ளைத் தாளித்து அடை மாவில் கொட்டி க‌ல‌க்க‌வும்.

தோசைக்க‌ல்லில் மெல்லிய‌ அடைக‌ளாய் வார்த்து, பொன் முறுவ‌லாய் ஆகும் வ‌ரை வேக‌விட்டு எடுக்க‌வும்.

சுவையான‌ முருங்கைக்கீரை அடை சூடாக‌ இப்போது த‌யார்!!!













33 comments:

இராஜராஜேஸ்வரி said...

சுவையான‌ முருங்கைக்கீரை அடை பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

தமிழ் உதயம் said...

முருங்கை கீரை அடை நன்றாக இருந்தது.

Asiya Omar said...

//சுவையான‌ முருங்கைக்கீரை அடை சூடாக‌ இப்போது த‌யார்!!!//

சும்மாவே சாப்பிடுவேன்.அருமை மனோஅக்கா.

ஸாதிகா said...

ஹெல்தியான அடை.அவசியம் செய்து பார்த்து விடவேண்டும் அக்கா.

ADHI VENKAT said...

நல்லதொரு குறிப்பு. முருங்கைக்கீரை அடை பிரமாதமாய் இருக்கும். நான் வெண்ணெய், வெல்லம் கட்சி.

RAMA RAVI (RAMVI) said...

சுவையான அடை. உடனே சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது.

முருங்கைக்கீரைக்கு பதில் வேறு கீரை கொண்டும் செய்யலாமா மேடம்?(ஏனென்றால் முருங்கை கீரை சாப்பிடுவதில்லை.)

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சுவையான‌ முருங்கைக்கீரை அடை சூடாக‌ இப்போது த‌யார்!!!//

ஆஹா! பதிவைப்படித்ததும் அடை சாப்பிட்ட மகிழ்ச்சி ஏற்பட்டது.

பாராட்டுக்கள். vgk

வை.கோபாலகிருஷ்ணன் said...

Madam, I have Submitted this article in Indli for you. First vote is mine. Just for your information, please.
vgk

குறையொன்றுமில்லை. said...

முருங்கை கீரை அடை படமும் செய்முறை விளக்கமும் புரியும்படி ஈசியா இருக்கு.முருங்கைக்கீர இ இங்க கிடைக்கரதில்லே வெந்தயக்கீரை போட்டுதான் பண்ணிண்டு இருக்கேன்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ADA!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ADA!

ஸ்ரீராம். said...

எனக்கும் அடைக்கு எதுவும் தொட்டுக் கொள்ளாமல் அப்படியே சாப்பிடத்தான் பிடிக்கும்! படம் பசியைத் தூண்டுகிறது!

அதே போல் அடைக்கு அவியல் காம்பினேஷன் ஏனோ எனக்குப் பிடிப்பதில்லை! இரண்டுமே தனித் தனியாய் ரசிக்க வேண்டிய ரசனையான ஐட்டங்கள்!

Vidhya Chandrasekaran said...

எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த அடை. கொஞ்சம் வெல்லம் வச்சுகிட்டு சாப்பிட்டா...அடடா..

எங்க இடத்துல முருங்கை கீரை கிடைக்கமாட்டேங்குது:(

கீதமஞ்சரி said...

நாவில் நீரூறச் செய்துவிட்டது முருங்கைக் கீரை அடை. ஊருக்கு வந்துதான் அம்மா கையால் செய்துதரச் சொல்லி சாப்பிடவேண்டும். பகிர்வுக்கு மிகவும் நன்றி மனோ மேடம்.

வெங்கட் நாகராஜ் said...

பார்ப்பதற்கே மொறுமொறுவென இருக்கிறது. நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும்... முருங்கைக் கீரை... அதுதான் தில்லியில் கொஞ்சம் கஷ்டம். :)

Rathnavel Natarajan said...

அருமை அம்மா.
வாழ்த்துகள்.

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டுக்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

அன்பான பாராட்டிற்கு இனிய நன்றி சகோதரர் ரமேஷ்!

மனோ சாமிநாதன் said...

மனமார்ந்த பாராட்டிற்கு அன்பு நன்றி ஆசியா!

மனோ சாமிநாதன் said...

அவசியம் செய்து பாருங்கள் ஸாதிகா! கருத்துக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி ஆதி!

மனோ சாமிநாதன் said...

தவலை வடையில் பாலக் கீரை சேர்த்து செய்வதைப்போல, இதிலும் பாலக்கீரை பொடியாக அரிந்து சேர்த்து செய்யலாம் ரமா!

மனோ சாமிநாதன் said...

நிச்சயம் இந்த அடை உங்களுக்குப் பிடிக்கும் என்று தான் நினைத்தேன் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! இண்ட்லியில் submit செய்ததற்கு மனமார்ந்த நன்றி!!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி சகோதரி லட்சுமி!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் ராமமூர்த்தி!!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துக்கும் அழகிய கருத்துக்கும் இனிய நன்றி சகோதரர் SRIRAM!!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துக்கு அன்பு நன்றி வித்யா!

மனோ சாமிநாதன் said...

அம்மா கையால் செய்து சாப்பிட்டால் தனிச்சுவைதான் எதுவுமே! இனிய கருத்துக்கு அன்பு நன்றி கீதா!!

மனோ சாமிநாதன் said...

இனிமையான கருத்துக்கு மனமார்ந்த நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி சகோதரர் ரத்னவேல்!

Jaleela Kamal said...

மனோ அக்கா ரொம்ப சூப்பரான அடை என்றால் ரொம்ப பிடிக்கும் வெல்லம் தொட்டு சாப்பிட தான் விருப்பம்.

பித்தனின் வாக்கு said...

vadai parkka supera irukku. romba thanks. kandippa seivom.

but one doubt, keeraiyai vathakkamal pottal vegatha mathiri irukkuma?. kasappu varatha?....

மனோ சாமிநாதன் said...

@பித்தனின் வாக்கு/

//but one doubt, keeraiyai vathakkamal pottal vegatha mathiri irukkuma?. kasappu varatha?....//

கீரையை அப்படியே அடை மாவில் சேர்த்து செய்யலாம். எந்த கசப்பும் தெரியாது.