Monday, 8 August 2011

பூவையும் பூக்களும்! !!

ரொம்ப நாட்களுக்குப் பின் இந்த ஓவியம் வரைந்து முடித்திருக்கிறேன். போஸ்டர் வண்ண‌க்கலவைகள் தான் உபயோகித்தது. எங்கள் உண‌வகத்திற்காக இதை வரைந்து தருவதாக என் மகனிடம் வாக்குறுதி தந்து விட்டதால் அதிக பொறுமையுடன் வரைந்திருக்கிறேன். எப்போதுமே முகம் அழகாக வந்து விட்டால் மற்ற‌தெல்லாம் அவசர தீற்றல்களாயிருக்கும். மிக வேகமாக முடித்து விடுவேன். இது மட்டும்தான் அதிக நேரம் எடுத்து பொறுமையாக வரைந்தது.




61 comments:

Menaga Sathia said...

மிக அழகான ஒவியம்,பாராட்டுக்கள் அம்மா!!

பத்மநாபன் said...

ஒவியம் மிக அருமை மேடம்...வாழ்த்துக்கள்

GEETHA ACHAL said...

ரொம்ப அழகாக இருக்கின்றது...

கண்டிப்பாக உங்க restaurant வரும் அனைவருக்கும் பாரட்டுவாங்க...வாழ்த்துகள்...

பிலஹரி:) ) அதிரா said...

சூப்பர் மனோ அக்கா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அழகான ஓவியம். வரவேற்பறைக்கு மிகவும் பொருத்தமானது.
பூக்களை நோக்கிடும் பூவையர்.
ஏதோ சொல்ல வருவது போல பேசும் படம் போல நல்லாவே வந்திருக்கு.

பாராட்டுக்கள். vgk

Yaathoramani.blogspot.com said...

மிக மிக அருமையான ஓவியம்
உட்கார்ந்திருக்கும் அமைப்புக்கு ஏற்றார்ப்போல
உடைகளின் நெளிவு சுளிவுகள்
கடைக்கு வருவோரை வரவேற்று
பார்க்கும் விதமாக பார்வையை
வாசல் நோக்கி
வரைந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்
நாளிதழ்களில் மிகப் பெரிய ஓவியர்கள்
வரைந்த படம் போலுள்ளது
உண்மையில் கடைக்கு இது
உங்கள் ஆசியுடன் கூடிய
பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்
வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

மிக அழகாக இருக்கிறது. நீங்கள் ஓவியம் பயின்றவரா? இந்தப் படத்துக்கு மாடல் என்ன?

ராமலக்ஷ்மி said...

அழகோவியம்.

seetha hariharan said...

Hi,
Beautiful I liked it very much Congrats

தமிழ் உதயம் said...

அருமை. ஓவியத்துக்கும், ஓவியருக்கும் வாழ்த்துகள்.

கூடல் பாலா said...

சூப்பரோ ..சூப்பர் ..!

CS. Mohan Kumar said...

Very nice. You have many interesting hobbies. :))

இமா க்றிஸ் said...

மனோ அக்காவின் கைவண்ணம்... எப்போதும் போல் அழகு. பாராட்டுக்கள் அக்கா.

'பரிவை' சே.குமார் said...

மிக அழகான ஒவியம்,பாராட்டுக்கள் அம்மா!!

raji said...

அம்மாடி!எவ்ளோ அழகாருக்கு!
இதை வரைய எவ்வளவு நாளகள் பிடித்தது?

fantastic!!!!

raji said...

//Ramani said..
கடைக்கு வருவோரை வரவேற்று
பார்க்கும் விதமாக பார்வையை
வாசல் நோக்கி
வரைந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்//

ஓவியம் பிரமாதம் என்றால் அதற்கு கமென்டும் மிகப் பிரமாதம்

கீதமஞ்சரி said...

எளிமையான பெண்ணழகும், எழில்கொஞ்சும் கண்ணழகும், ஒயிலாய் அமர்ந்த பாங்கும், கூந்தல் கோதும் விரல்களின் நளினமும், உடையின் நேர்த்தியான மடிப்புகளும் எல்லாம் சேர்ந்து ஓவியத்தை மிகத் தத்ரூபமாகக் காட்டுகின்றன. அருகில் பூக்களின் அணிவகுப்பு கூடுதல் வசீகரம். மனமார்ந்த பாராட்டுகள்.

கே. பி. ஜனா... said...

வலைப்பூவில் ஒரு கலைப்பூ!ஓவியம் ஜோர்...

ஸாதிகா said...

ஆஹா..அக்கா என்ன் உயிரோட்டமாக வரைந்து இருக்கீங்க!

RAMA RAVI (RAMVI) said...

மிகவும் அழகாக உள்ளது. வண்ணங்களின் கலவை அருமை.

Priya said...

மிக மிக அழகான ஒவியம்...!

வெங்கட் நாகராஜ் said...

ஓவியம் மிகவும் அழகாய் அமைந்துவிட்டது.... வாழ்த்துகள்...

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

வாவ் ! ரொம்ப அழககா இருக்கு மனோ.

ADHI VENKAT said...

ரொம்ப அழகாயிருக்கும்மா. உணவகத்துக்கு வரும் அனைவரும் பாராட்டுவாங்க.

நிலாமகள் said...

ஓவிய‌ப்பெண்ணின் க‌ண்க‌ள் பேசுகின்ற‌ன‌! ம‌ல‌ர்க‌ளின் ந‌றும‌ண‌ம் நாசி துளைக்கிற‌து. நிற‌ங்க‌ளின் ஆளுமை க‌ண்க‌ள் நிறைக்கிற‌து! 'கைப்ப‌ழ‌க்க‌ம்' அதிக‌மென்ப‌து புரிகிற‌து!

Karthikeyan Rajendran said...

நானும் ஓவியன் தான், அந்த உரிமையில் சொல்கிறேன், அருமையாக உள்ளது

அப்படியே இந்த பக்கத்தையும் கோஞ்சம் பாருங்க
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

முனைவர் இரா.குணசீலன் said...

ஓவியம் மிகவும் அழகாகவுள்ளது.

பாராட்டுக்கள்..

Matangi Mawley said...

அந்த வட்டப் பொட்டுக்கு கீழ ஒரு குட்டி பொட்டு வெச்சா-- அசலாய்டு ஒரு "பூரணி"! :)
Beautiful...

Jaleela Kamal said...

மிக அருமை அருமையோ அருமை கொள்ளை அழகு..
தத்ரூபமாக இருக்கு மனோக்கா

மனோ சாமிநாதன் said...

அன்பு சகோதரிகள் கீதாவிற்கும் மேனகாவிற்கும்,

பாராட்டுக்களுக்கு இதயங்கனிந்த நன்றி!!

மனோ சாமிநாதன் said...

மனமார்ந்த பாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் பத்மநாபன்!

மனோ சாமிநாதன் said...

விரிவான, மனந்திறந்த பாராட்டிற்கு நெஞ்சம் நிறைந்த நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...
This comment has been removed by the author.
மனோ சாமிநாதன் said...

அன்புத்தோழமைகள் சித்ராவிற்கும் அதிராவிற்கும்!

உங்களின் பாராட்டிற்கு என் அன்பான நன்றி!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி Sriram! சிறு வயதிலிருந்து ஓவியத்தில் ஈடுபாடு. அதோடு, பல வருடங்களுக்கு முன் விகடன், சாவி மற்றும் மாத இதழ்களில் ஓவியம் வரைந்திருக்கிறேன். இதற்கு ஒரு ஜப்பான் பெண்ணின் புகைப்படம் ஓரளவு மாடல் என்று சொல்லலாம். மற்றவை என் கற்பனை.

மனோ சாமிநாதன் said...

அன்பார்ந்த பாராட்டிற்கு மகிழ்வான நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சாரு!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி தமிழ் உதயம்!

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the warm appreciation Mr.Mokankumar!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு உளங்கனிந்த நன்றி கூடல் பாலா!

மனோ சாமிநாதன் said...

அன்பு இமா!
பாராட்டிற்கும் வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் மகிழ்வான நன்றி சகோதரர் குமார்!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி ராஜி! எப்போதும் மிக வேகமாய் வரைந்து விடுவேன். இது எங்களின் உணவகத்திற்கு என்பதால் ரொம்பவும் பொறுமையை கடைபிடித்து தினமும், 20 நிமிடங்கள், அரை மணி நேரம் என்று ஒதுக்கி ஒரு வாரத்தில் முடித்தேன்.

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் உஙளின் ரசனையை ஒரு அழகான கவிதையாய் கொடுத்து பாராட்டியதற்கும் இனிய நன்றி கீதா!!

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜனா!

மனோ சாமிநாதன் said...

அன்புத் தோழமைகள் ஸாதிகாவிற்கும் ராம்விக்கும்!!

மனந்திறந்த பாராட்டிற்குஅன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

அன்பு சகோதரிகள் வித்யாவிற்கும் ப்ரியாவிற்கும்!!

இதயங்கனிந்த பாராட்டுக்களுக்கு மகிழ்வான நன்றி!

மனோ சாமிநாதன் said...

அன்பான பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி ஆதி!

மனோ சாமிநாதன் said...

உங்களின் ரசனையை அழகிய சொல்லலங்காரத்தில் கோர்த்து மணம் நிறைந்த மாலையை எனக்கு அணிவித்து விட்டீர்கள் நிலாமகள்!! என் மனமார்ந்த நன்றி!!

மனோ சாமிநாதன் said...

ஓவியரிடமிருந்து வரும் பாராட்டு இன்னும் கூடுதல் மகிழ்வு ஸ்பார்க் கார்த்தி! உங்களின் வலைப்பக்கமும் அருமை!

மனோ சாமிநாதன் said...

அன்பான பாராட்டிற்கு மகிழ்வான நன்றி சகோதரர் குணசீலன்!

மனோ சாமிநாதன் said...

ரசனைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி மாதங்கி!

மனோ சாமிநாதன் said...

மனந்திறந்த பாராட்டிற்கு அன்பு நன்றி ஜலீலா!

Unknown said...

ரொம்ப அழகான ஓவியம் அம்மா.வாழ்த்துக்கள்.

வே.நடனசபாபதி said...

அழகான ஓவியத்தை அருமையாய் வரைந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். எனக்கும் கூட வண்ணம் தீட்டி ஓவியம் வரைய ஆசை. உங்கள் ஓவியத்தைப் பார்த்ததும், திரும்பவும் அந்த ஆசை துளிர் விடுகிறது!

KILLERGEE Devakottai said...


உயிரோட்டமான ஓவியம் வாழ்த்துகள்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/12/ar-2011.html?showComment=1419016437833#c8701066033669350162

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மணவை said...

பூவும் புஷ்பமும் அழகாக... அருமையாக...

நன்று....
நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

பாராட்டுக்கள்

வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.