Sunday 25 July 2010

இனிப்புப் பழக்கலவை டெஸர்ட்

மறுபடியும் ஒரு இனிப்பான குறிப்பு. இதில் அடுப்பில் வைத்து சமைக்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் சுவையோ மிக அதிகம். அதில் குறிப்பிட்டுள்ள பழங்கள் மட்டும் மிக இனிப்பானதாக அமைவது அவசியம். பழங்களின் இனிப்பிற்கேற்ப சுவையும் அபாரமாக இருக்கும். ஒரு விருந்து சமையலுக்குப் பின்னர் விருந்தினர்களுக்குக் கொடுப்பதற்கு மிகவும் சுவையான இனிப்பு இது!


இனிப்புப் பழக்கலவை டெஸர்ட்

தேவையான பொருள்கள்:

ஸ்பாஞ்ச் கேக்-1
கண்டென்ஸ்ட் மில்க்-500 கிராம்
ஆரஞ்சு ஜெல்லி- 2 பாக்கெட்
மாம்பழம்-2
அன்னாசிப்பழம்-1
பேரீச்சை-10
வாழைப்பழம்-2
ஆரஞ்சு-1 அல்லது இரண்டு
முந்திரிப்பருப்பு-20
காய்ந்த திராட்சை-2 மேசைக்கரண்டி
நெய்- 2 மேசைக்கரண்டி

செய்முறை:

நெய்யில் முந்திரிப்பருப்பையும் திராட்சையையும் பொன்னிறமாக வறுத்தெடுத்துக்கொள்ளவும்.
ஜெல்லி பாக்கெட்டில் எழுதி உள்ளபடி ஜெல்லியைத் தயார் செய்யவும்.
அதைக் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.
ஆரஞ்சுப் பழத்தைத் தவிர மற்ற பழங்களை சிறிய துண்டுகளாக அறிந்து வைக்கவும்.
ஆரஞ்சுப்பழத்தின் சாற்றைப் பிழிந்தெடுத்து வைக்கவும்.
ஸ்பாஞ்ச் கேக்கை பூந்துருவல்போல உதிர்த்துக்கொள்ளவும்.
அதை ஒரு உயரம் குறைவான கண்ணாடிப்பாத்திரத்தில் கொட்டி கையால் நன்கு அமுக்கி சரி செய்யவும்.
இப்போது கால் கப் கண்டென்ஸ்ட் மில்க் மட்டும் தனியே எடுத்து வைத்துக்கொண்டு பாக்கி கண்டென்ஸ்ட் மில்க்-ஐ அதன் மீது சமமாக ஊற்றவும்.

இப்போது பழங்களையும் வறுத்து வைத்துள்ளவற்றையும்  அதன் மீது சமமாகப்பரப்பவும்.
ஆரஞ்சு சாறை அதன்மீது சமமான அளவில் ஊற்றவும்.
அதன்மீது எடுத்து வைத்த கண்டென்ஸ்ட் மில்க்-ஐ ஊற்றவும்.
ஜெல்லி கிட்டத்தட்ட செட் ஆகும் சமயம் அதை எடுத்து பழக்கலவை மீது சமமாகப் பரப்பவும்.
குளிர்சாதனப் பெட்டியில் சில மணி நேரங்கள் வைத்திருந்து அதன் பின் பரிமாறவும்.



      

21 comments:

ஹைஷ்126 said...

ஆகா ஃபுல்லா நானே எடுத்துக் கொள்கிறேன். சூப்பர்.

வாழ்க வளமுடன்

இமா க்றிஸ் said...

சுப்பர் அக்கா. பார்க்கவே ஆசையாக இருக்கிறது.

'பரிவை' சே.குமார் said...

ஆகா...
பார்க்கவே ஆசையாக இருக்கிறது...
நானே எடுத்துக் கொள்கிறேன்.

ஜெய்லானி said...

அடடா நா வரதுக்குள்ள தட்டு காலியா. ..!!!

Chitra said...

YUMMY DESSERT! I will try this for sure! :-)

ஸாதிகா said...

வித்தியாசமாகவும் ரிச் ஆகவும் இருக்கு அக்கா.விருந்தோம்பலுக்கு உகந்தது.

Menaga Sathia said...

delicious desert...

athira said...

மனோ அக்கா. நல்ல டெசேட்... போட்டி போடு எல்லோரும் சாப்பிட்டுவிட்டார்கள், அதனால் என்னால் பார்க்க மட்டுமே முடிகிறது:).

பொன் மாலை பொழுது said...

அருமையான ரெசிப்பி
தங்களுக்கு ஒரு விருது ஒன்று காத்துள்ளது.
கீழ் கண்ட இணைப்பில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.
http://ponmaalaipozhuthu.blogspot.com/2010/07/blog-post_06.html

தூயவனின் அடிமை said...

எனக்கு ரொம்ப பிடித்தது, செய்முறை அருமை.

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு!
தாங்களே முழுவதுமாக இனிப்பை எடுத்துக்கொண்டதற்கு என் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

இனிப்பை ரசித்ததற்கு அன்பு நன்றி இமா!

மனோ சாமிநாதன் said...

அன்பு சகோதரர் குமார் அவர்களுக்கு!

இனிப்பை ரசித்து பதிவெழுதியதற்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்பு சகோதரர் ஜெய்லானி அவர்களுக்கு!

இனிப்பை ரசித்ததற்கு என் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

Thank you very much for the nice appreciation Chithra!

மனோ சாமிநாதன் said...

ஆமாம் ஸாதிகா! இது ரொம்பவும் ரிச்சான இனிப்புதான். ஹெவியான விருந்து என்றால் உடனேயே சாப்பிட முடியாது. ஆனால் மிகவும் சுவையாக இருக்கும். செய்வதற்கும் எளிமையானது!

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the nice words MenakA!

மனோ சாமிநாதன் said...

அன்பான பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி அதிரா!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள தூயவன் அவர்களுக்கு!
தங்களின் அன்பு பாராட்டிற்கு மிக்க நன்றி!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள சுக்கு மாணிக்கம் அவர்களுக்கு!
தங்களின் முதல் வருகைக்கும் தங்களின் அன்பான விருதுக்கும் என் இதயங்கனிந்த மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\விரைவில் தங்களின் தளத்திற்கு வந்து விருதினைப் பெற்றுக்கொள்கிறேன்.

Krishnaveni said...

WOW, BEAUTIFUL DESSERT